உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா தாக்குதல் நடத்துவதை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் தலைநகர் கீவ்வில் ரஷியா தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில், உக்ரைன் படைகள், கீவ் நகரைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக உக்ரைன் உள்துறை அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷியா படையெடுத்து100 நாட்களுக்கு மேலாகியும் தலைநகர் கீவ்விற்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று அவர் கூறியுள்ளார். எனினும் நாளை எதுவும் மாறும் சூழலை நாங்கள் புரிந்து கொள்கிறோம் என்றும், கீவ் மற்றும் நகரை சுற்றி உள்ள உக்ரைன் படையினருக்கு தற்காப்பு உள்ளிட்ட தீவிர பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Update: 2022-06-09 23:14 GMT