ரஷிய படைகள் தாக்குதல் நடத்தும் முக்கிய மையமாக... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
ரஷிய படைகள் தாக்குதல் நடத்தும் முக்கிய மையமாக செவரோடோனெட்ஸ்க் நகரம் உள்ளது. பெரும்பாலான பகுதிகள் ரஷியா வசம் வந்துள்ளன. எனினும், தொழில்துறை மண்டலம் மற்றும் செவரோடோனெட்ஸ்க் நகரின் அருகிலுள்ள பகுதிகளை உக்ரைன் படைகள் இன்னும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. தற்போதுள்ள நிலைமை கடினமானது என்றாலும் சமாளிக்கக்கூடியது என்று நகர மேயர் கூறி உள்ளார். ரஷியாவின் தீவிர பீரங்கித் தாக்குதல்களுக்கு மத்தியில் செவரோடோனெட்ஸ்க் நகரில் பரிதவிக்கும் 10000 மக்களை வெளியேற்றுவது சாத்தியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
Update: 2022-06-09 10:38 GMT