உக்ரைன் தானிய சேமிப்பு மையம் மீது ரஷியா ஏவுகணை... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் தானிய சேமிப்பு மையம் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்திற்காக, ஐரோப்பிய ஒன்றிய அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் தெற்கு துறைமுக நகரமான மைகோலாய்வில் உள்ள பெரிய தானிய சேமிப்பு மையத்தில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தியதை ஐரோப்பிய ஒன்றிய உயர் பிரதிநிதி ஜோசப் பொரெல் கண்டித்துள்ளார்.

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு தீர்வு அளிக்கும் இரண்டாவது பெரிய தானிய முனையத்தை ரஷ்யப் படைகள் அழித்துள்ளன என்று பொரெல் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார். உக்ரைன் துறைமுகங்களில் இருந்து கருங்கடல் வழியாக தானியங்களை ஏற்றிக் செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பான பாதையை வழங்குவதாக புதின் அளித்த உறுதி மொழிகளுக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Update: 2022-06-06 22:49 GMT

Linked news