உக்ரைன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷியா... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு

உக்ரைன் உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதை ரஷியா தடுக்காது என அந்நாட்டு அதிபா் புதின் தொிவித்துள்ளாா். உக்ரைன் துறைமுகங்கள் வழியாகவும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள மற்ற பகுதிகள் வழியாகவும், மத்திய ஐரோப்பா வழியாகவும் ஏற்றுமதி செய்யலாம் என்றும் அவர் கூறினார். உக்ரைனின் கட்டுப்பாட்டில் உள்ள துறைமுகங்கள், குறிப்பாக, ஒடெசாவை பயன்படுத்தலாம். ஆனால் உக்ரைன் வசம் உள்ள துறைமுகங்களைச் சுற்றியுள்ள உக்ரைன் புதைத்து வைத்துள்ள கண்ணிவெடிகளில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் புதின் வலியுறுத்தினார்.

உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட, 20 மில்லியன் டன் தானியங்களை ரஷியா தடுத்துள்ளதாக உக்ரைனும் மேற்கு நாடுகளும் கூறிய நிலையில், புதின் இந்த விளக்கத்தை அளித்துள்ளார்.

Update: 2022-06-05 11:44 GMT

Linked news