பாம்பு தீவின் மீது ரஷியா விமான தாக்குதல் நடத்தி... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

பாம்பு தீவின் மீது ரஷியா விமான தாக்குதல் நடத்தி உள்ளது. உக்ரைன் படைகள் பாம்பு தீவில் தங்கள் கொடியை உயர்த்தியதாகக் கூறிய சிறிது நேரத்தில், இரவோடு இரவாக ரஷிய போர் விமானம் தாக்கியதாக ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைன் பீரங்கி படைகளின் கடும் தாக்குதலைத் தொடர்ந்து பாம்பு தீவில் இருந்து ரஷிய படைகள் பின்வாங்கியதையடுத்து, உக்ரைனின் மூன்று வீரர்கள் அங்கு உக்ரைன் கொடியை உயர்த்தினர். இது குறித்த வீடியோவை உக்ரைன் அதிபரின் தலைமை அதிகாரி டெலிகிராமில் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2022-07-07 14:42 GMT

Linked news