உக்ரைனின் முக்கிய நகரமான லிசிசான்ஸ்க் நகரை தமது... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனின் முக்கிய நகரமான லிசிசான்ஸ்க் நகரை தமது படைகள் சுற்றி வளைத்துள்ளதாக ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. லுஹான்ஸ்க் மற்றும் டான்பாஸ் பிராந்தியங்களில் இருந்து உக்ரைன் படைகளை முற்றிலும் வெளியேற்றும் முயற்சியில் இது முக்கிய நடவடிக்கை ஆகும்.

லுஹான்ஸ்க் பிராந்தியத்தில் உள்ள பகுதிகளில் உக்ரைன் ராணுவத்தின் கடைசி கோட்டையாக இந்த நகரம் உள்ளது. இந்த நகரை சுற்றி உள்ள கிராமங்களை கைப்பற்றிவிட்டதாகவும், தற்போது நகருக்குள் உக்ரைன் படைகளுடன் சண்டை நடைபெற்று வருவதாகவும் ரஷிய ராணுவ அமைச்சகம் கூறி உள்ளது.

Update: 2022-07-03 10:19 GMT

Linked news