உக்ரைனின் எல்லையில் உள்ள கருங்கடல் பகுதியில்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

உக்ரைனின் எல்லையில் உள்ள கருங்கடல் பகுதியில் பாம்பு தீவு உள்ளது. இந்த தீவை ரஷியா கைப்பற்றியது. உக்ரைன் படைகள் நடத்திய தாக்குதலில் பாம்பு தீவில் இருந்து ரஷியா படைகளை கடந்த சில நாட்களுக்கு முன் திரும்பப்பெற்றது.

இந்நிலையில், பாம்பு தீவு மீது நேற்று ரஷியா போர் விமானம் மூலம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. சுகோய் 30 ரக போர் விமானம் மூலம் பாம்பு தீவு மீது ரஷியா போஸ்போர்ன்ஸ் ரக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. பாம்பு தீவில் இருந்து படைகளை விலக்கிக் கொண்டபோதும் அங்கிருந்து அதிநவீன ராணுவ தளவாடங்களை திரும்பப்பெற முடியாததால் அதை ரஷியா குண்டுவீசி அழித்திருக்கலாம் என உக்ரைன் தெரிவித்துள்ளது.

Update: 2022-07-01 23:53 GMT

Linked news