ரஷியாவின் அச்சுறுத்தலை தொடர்ந்து ஐரோப்பியாவில்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ரஷியாவின் அச்சுறுத்தலை தொடர்ந்து ஐரோப்பியாவில் அமெரிக்கப் படைகள் அதிகரிக்கப்படும் என அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், நேட்டோ அமைப்பு வலுவானது மற்றும் ஒன்றுபட்டது. உச்சி மாநாட்டில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எங்களின் கூட்டு பலத்தை மேலும் அதிகரிக்கப் போகிறோம். புதிய அமெரிக்க போர்கப்பல்கள் ஸ்பெயினுக்கும், போர் விமானங்கள் இங்கிலாந்துக்கும், தரைப்படைகள் ருமேனியாவுக்கும் அனுப்பப்படும். பால்டிக் பிராந்தியத்திற்கு சுழற்சி முறையில் வீரர்களை அமெரிக்கா அனுப்பி வருகிறது என தெரிவித்தார்.
Update: 2022-07-01 00:38 GMT