ரஷ்ய அதிபர் விளாடிமிர் பயங்கரவாத அரசை வழிநடத்தும்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் பயங்கரவாத அரசை வழிநடத்தும் பயங்கரவாதி என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டினார். ரஷ்யாவை ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேற்றவும் வலியுறுத்தினார். மேலும் அவர் கூறுகையில், ரஷ்யாவின் போர் நிறுத்துவதற்கு எல்லாவற்றையும் செய்ய நாம் அவசரமாகச் செயல்பட வேண்டும். இல்லையெனில் ரஷ்யாவின் பயங்கரவாத நடவடிக்கை மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கும், ஆசியாவிற்கும் பரவி, பால்டிக் நாடுகள், போலந்து, மால்டோவா மற்றும் கஜகஸ்தான் ஆகியவற்றைத் தனித்துவிடும். புடின் ஒரு பயங்கரவாதியாகிவிட்டார். தினசரி பயங்கரவாத செயல்கள், வார இறுதி நாட்கள் என்று இல்லாமல் ஒவ்வொரு நாளும் அவர்கள் பயங்கரவாதிகளாக வேலை செய்கிறார்கள்" என்றார்.
Update: 2022-06-29 08:21 GMT