அண்டை நாடான கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களின்... ... லைவ் அப்டேட்ஸ்: கிராமடோர்ஸ்க் நகரில் வான் தாக்குதல்- உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல்

அண்டை நாடான கலினின்கிராட் வழியாக ரஷிய பொருட்களின் போக்குவரத்தை தடை செய்வதில் எந்தச் சலுகையும் வழங்க லிதுவேனியா மறுத்துவிட்டது. இது ரஷியா-நேட்டோ இடையேயான மோதலை தூண்டக்கூடிய ஒரு விரிவாக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

பால்டிக் கடலில் அமைந்துள்ள கலினின்கிராட், லிதுவேனியா வழியாக ரஷியாவிற்கான ரெயில் இணைப்பையும் பரவலாகப் பயன்படுத்துகிறது. ரஷியா மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடைகளுக்கு இணங்கி செயல்படும் லிதுவேனியா, ரஷியாவின் ஸ்டீல் மற்றும் பிற இரும்பு உலோகங்களின் போக்குவரத்தை தடைசெய்து ரெயில் பாதையை தடுத்துள்ளது. ஆனால் இந்த நடவடிக்கை பயணிகளுக்கான ரெயில் மற்றும் சரக்குகளை பாதிக்காது என அந்நாட்டின் பிரதமர் தெரிவித்தார்.

Update: 2022-06-26 16:20 GMT

Linked news