கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி... ... கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து முன்னிலை பெற்று வருவதை அடுத்து, ராகுல் காந்திக்கு மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.
“மகாத்மா காந்தி அடிகளார் போன்றே, நீங்களும் மக்கள் மனதில் நுழைந்தீர்கள். கனிவுடன் செயல்பட்டால் உலகையே அசைக்க முடியும் என்று நீங்கள் செய்து காட்டியுள்ளீர்கள். நீங்கள் கர்நாடக மக்கள் மீது நம்பிக்கை வைத்தீர்கள், அவர்களும் உங்கள் மீது இருக்கும் நம்பிக்கையை பிரதிபலித்துள்ளனர். வெற்றி பெற்றதோடு, வெற்றி பெற்ற விதத்திற்காகவும் உங்களுக்கு வாழ்த்துக்கள்.” என்று அவர் தெரிவித்தார்.
Update: 2023-05-13 10:20 GMT