உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா அந்நாட்டின்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
உக்ரைன் மீது படையெடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நகரங்களை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து உக்ரைன் ராணுவ உளவு தலைமை அதிகாரி வாடிம் சிகிபிட்ஸ்கி கூறுகையில், ‘உக்ரைன் கிழக்கு பகுதிகளில் தற்போது பீரங்கி போர் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உக்ரைனின் ஒரு பீரங்கிக்கு எதிராக ரஷியாவிடம் 10 முதல் 15 பீரங்கிகள் இருக்கின்றன. இந்த பகுதியில் வெற்றிப்பெறுவது மேற்கத்திய நாடுகளை நம்பிதான் இருக்கிறது. அவர்கள் கூறியதுபோல நவீன ஆயுதங்கள், ஏவுகணைகளை அனுப்பினால் மட்டுமே ரஷிய தாக்குதல்களை முறியடிக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
Update: 2022-06-11 07:52 GMT