கிழக்கு உக்ரேனிய நகரமான சீவிரோடோனெட்ஸ்கை ரஷியப்... ... லைவ் அப்டேட்ஸ்: தெற்கு உக்ரைன் நகரமான மைகோலாய்வில் குண்டு வெடிப்பு
கிழக்கு உக்ரேனிய நகரமான சீவிரோடோனெட்ஸ்கை ரஷியப் படைகள் சுற்றி வளைத்து தங்கள் பிடியை இறுக்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைத்து பாலங்களும் தகர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பொதுமக்களை வெளியேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி ஆளுநர் செர்ஹி கைடாய் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ரஷியா தாக்குதலினால் உக்ரைனுக்குள் ஏழு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம் விட்டு இடம் பெயர்ந்துள்ளதாக ஐநா அகதிகள் நிறுவனம் மற்றும் புலம் பெயர்வோருக்கான சர்வதேச அமைப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.
Update: 2022-06-13 23:41 GMT