search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார்"

    • இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
    • இந்த கார் இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2024 ஸ்விப்ட் மாடல் இந்தியா சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. முற்றிலும் புதிய ஸ்விப்ட் மாடலின் விலை ரூ. 6 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என துவங்குகிறது. புதிய பெட்ரோல் என்ஜினுடன் இந்த காரில் ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    டிசைனை பொருத்தவரை 2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய பம்ப்பர்கள், எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள், எல்.இ.டி. ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், கிளாஸ் பிளாக் முன்புற கிரில், எல்.இ.டி. ஃபாக் லைட்கள், 15 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள், புதிய எல்.இ.டி. டெயில் லைட்கள் வழங்கப்படுகின்றன. 2024 ஸ்விப்ட் மாடல் லஸ்டர் புளூ மற்றும் நோவல் ஆரஞ்சு என இரண்டு புதிய நிறங்களில் கிடைக்கிறது.

     


    இதுதவிர, சிஸ்லிங் ரெட், பியல் ஆர்க்டிக் வைட், மேக்மா கிரே மற்றும் ஸ்பிலென்டிட் சில்வர் போன்ற நிறங்களிலும் கிடைக்கிறது. இத்துடன் லஸ்டர் புளு - மிட்நைட் பிளாக் ரூஃப், சிஸ்லிங் ரெட் - மிட்நைட் பிளாக் ரூஃப் மற்றும் பியல் ஆர்க்டிக் வைட் - மிட்நைட் பிளாக் ரூஃப் போன்ற டூயல் டோன் ஆப்ஷன்களிலும் கிடைக்கிறது.

    நான்காம் தலைமுறை ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய டேஷ்போர்டு- பியானோ பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு சேடின் மேட் சில்வர் இன்சர்ட்கள் மற்றும் அசிமெட்ரிக் டயல்களை கொண்டிருக்கிறது. இத்துடன் 9 இன்ச் அளவில் ஸ்மார்ட்பிளே ப்ரோ பிளஸ் டச் ஸ்கீரன் சிஸ்டம் மற்றும் குரூயிஸ் கண்ட்ரோல் வசதி வழங்கப்படுகிறது.

    இத்துடன் வயர்லெஸ் சார்ஜர், வயர்லெஸ் போன் மிரரிங், சுசுகி கனெக்ட், ரியர் ஏ.சி. வெண்ட்கள், கீலெஸ் எண்ட்ரி, ஆறு ஏர்பேக், இ.எஸ்.பி., பிரேக் அசிஸ்ட், 3 பாயிண்ட் சீட்பெல்ட்கள், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற வசதிகள் வழங்கப்படுகிறது.

    2024 ஸ்விப்ட் மாடலில் முற்றிலும் புதிய 1.2 லிட்டர், மூன்று சிலிண்டர்கள் கொண்ட Z சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இது 80 ஹெச்.பி. பவர், 112 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT யூனிட் வழங்கப்படுகிறது. இந்த கார் LXi, VXi, VXi(O), ZXi, மற்றும் ZXi+ என ஐந்து வேரியண்ட்களில் கிடைக்கிறது. 

    • எக்ஸ்டர் மாடலுக்கு முதல் முறை சலுகைகள் வழங்கப்படுகிறது.
    • பிரீமியம் ஹேச்பேக் மாடல் i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கார் மாடல்களுக்கு அசத்தல் சலுகைகள் மற்றும் தள்ளுபடி அறிவித்து இருக்கிறது. இவை ஹூண்டாய் i20, கிராண்ட் i10 நியோஸ் மற்றும் வென்யூ மாடல்கள் மட்டுமின்றி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்டர் மாடலுக்கும் வழங்கப்படுகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் நிறுவனம் தனது எக்ஸ்டர் மாடலுக்கு முதல் முறை சலுகைகளை வழங்குகிறது.

    வெர்னா, கிரெட்டா, அல்கசார் மற்றும் டக்சன் மாடல்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லை. மேலும் இந்த சலுகைகள் ஒவ்வொரு மாநிலம், ஸ்டாக் இருப்பு மற்றும் பகுதிக்கு ஏற்ப வேறுப்படும்.

    ஹூண்டாய் எக்ஸ்டர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம் எக்சேஞ்ச் போனஸ் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் எக்ஸ்டர் மாடல் 8 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகிறது. இந்த கார் மொத்தத்தில் 17 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 லட்சத்து 13 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சத்து 28 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

     


    இந்த கார் 83 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின், மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இத்துடன் 69 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் சி.என்.ஜி. ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. எனினும், இது மேனுவல் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது.

    ஹூண்டாய் வென்யூ காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலுக்கு அதிகபட்சம் ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. இதில் ரூ. 25 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் வரை எக்சேஞ்ச் போனஸ் அடங்கும். கிராண்ட் i10 நியோஸ் மாடலுக்கு ரூ. 48 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    ஹூண்டாய் i20 மாடலுக்கு ரூ. 35 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன. ஹூண்டாய் நிறுவனத்தின் பிரீமியம் ஹேச்பேக் மாடலான i20 மொத்தத்தில் 21 வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 7.04 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 12.52 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.
    • அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    அரியலூர் மவராட்டம் ஏலாக்குறிச்சி அருகே அரியலூர் - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஜல்லிக்கற்களை ஏற்றிக் கொண்டு வந்த லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

    அப்போது வேகமாக வந்த கார் அந்த லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர்.

    முதல்கட்ட தகவல்களின்படி இந்த விபத்தில் ஈஸ்வரன்(24), புவனேஷ் கிருஷ்ணசாமி(18), செல்வா (17), சண்முகம் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்றும், இவர்கள் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அரியலூரில் நடந்த ஒரு சுபநிகழ்ச்சியில் ஹோமம் வளர்த்துவிட்டு ஊர் திரும்பியபோது இந்த கோர விபத்து நடந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    ஏலாக்குறிச்சி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.
    • கட்டணத்தில் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் கோடை காலத்தை ஒட்டி தனது கார் மாடல்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்து இறுக்கிறது. இதில் ஹோண்டா எலிவேட், சிட்டி மற்றும் அமேஸ் மாடல் கார்களுக்கு ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    இதில் ஹோண்டா சிட்டி மாடலுக்கு அதிகபட்சமாக ரூ. 1 லட்சத்து 15 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஹோண்டா அமேஸ் மாடலை வாங்குவோருக்கு ரூ. 56 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. அமேஸ் எலைட் எடிஷன் மாடலுக்கு ரூ. 96 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    ஹோண்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய எலிவேட் மாடலின் பேஸ் வேரியண்ட்களுக்கு ரூ. 45 ஆயிரம் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் V வேரியண்டிற்கு ரூ. 55 ஆயிரம் வரையிலான பலன்களும், எலிவேட் ZX மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகின்றன.

    புதிய கார் வாங்குவோர் மட்டுமின்றி ஏற்கனவே கார் வைத்திருப்போர் ஏ.சி. சர்வீஸ் செய்யும் போது 15 சதவீதம் வரை தள்ளுபடியும், ஏ.சி. சார்ந்த சேவைகளில் லேபர் கட்டணத்தில் 10 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.

    • AX3 வேரியண்ட்-ஐ விட ரூ. 3 லட்சம் வரை குறைவு.
    • புது வேரியண்ட் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும்.

    மஹிந்திரா நிறுவனம் XUV700 மாடலின் புதிய 7 சீட்டர் வேரியண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. XUV700 புதிய வேரியண்ட் MX என அழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ. 15 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது XUV700 AX3 வேரியண்ட் உடன் ஒப்பிடும் போது ரூ. 3 லட்சம் வரை குறைவு ஆகும்.

    இதுவரை XUV700 MX வேரியண்ட் ஐந்து பேர் அமரும் இருக்கை அமைப்பில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் விலை ரூ. 14 லட்சத்து 60 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. தற்போது அதிக இருக்கை அமைப்பில் கிடைப்பதால், XUV700 புது வேரியண்ட் மேலும் அதிக வாடிக்கையாளர்களை சென்றடையும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளது.

     


    மஹிந்திரா XUV700 புதிய MX வேரியண்டில் ஏழு இன்ச் அளவில் MID டிஸ்ப்ளே, எட்டு இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரியர் ஏ.சி. வெண்ட்கள், எலெக்ட்ரிக் அட்ஜஸ்ட் வசதி கொண்ட ORVMகள் வழங்கப்பட்டுள்ளன.

    புதிய வேரியண்டிலும் 2.2 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 153 ஹெச்.பி. பவர், 360 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    • புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.
    • இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது இன்னோவா காரின் புது "GX+" வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது. புதிய வேரியண்ட் விலை ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய GX மற்றும் VX வேரியண்ட்களுடன் ஒப்பிடும் போது புதிய GX+ வேரியண்ட் அதிக அம்சங்களுடன் கிடைக்கிறது.

    அதன்படி புதிய வேரியண்டில் ரியர் கேமரா, ஆட்டோ ஃபோல்டு மிரர், டேஷ் கேமரா, டைமண்ட் கட் அலாய் வீல்கள், பிரீமியம் இருக்கை மேற்கவர்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த வேரியண்ட் ஏழு மற்றும் எட்டு பேர் அமரக்கூடிய இருக்கை அமைப்புகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ. 21 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் ரூ. 21 லட்சத்து 44 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

     


    புதிய அம்சங்கள் தவிர இன்னோவா க்ரிஸ்டா GX+ வேரியண்டின் மெக்கானிக்கல் அம்சங்களில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில், இந்த வேரியண்டிலும் 2.4 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 150 ஹெச்.பி. பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் இன்னோவா க்ரிஸ்டா மாடலின் விலை ரூ. 19 லட்சத்து 99 ஆயிரம் என துவங்கி அதிகபட்சம் ரூ. 26 லட்சத்து 30 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த காருக்கு நேரடி போட்டியை ஏற்படுத்தும் மாடல் எதுவும் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கவில்லை. எனினும், கியா கரென்ஸ் மற்றும் மஹிந்திரா மராசோ உள்ளிட்டவை இதற்கு போட்டியாக அமைகின்றன.

    • புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
    • முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

    போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய சந்தையில் 2024 குர்கா சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய 2024 போர்ஸ் குர்கா மாடலின் மூன்று கதவுகள் கொண்ட மாடலின் விலை ரூ. 16 லட்சத்து 75 ஆயிரம் என்றும் ஐந்து கதவுகள் கொண்ட மாடலின் விலை ரூ. 18 லட்சம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்பைடயில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    2024 போர்ஸ் குர்கா மாடலுக்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 25 ஆயிரம் ஆகும். 2024 குர்கா மாடலின் வெளிப்புறம் புதிய அலாய் வீல்கள், ஹெட்லேம்ப்கள் மற்றும் கிரில் வழங்கப்பட்டு இருக்கிறது.

     


    உள்புறத்தில் புதிய இருக்கை மேற்கவர்கள், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் TPMS, முன்புறம் டூயல் ஏர்பேக், 8.0 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது. புதிய குர்கா மாடலில் 2.6 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த என்ஜின் 132 ஹெச்.பி. பவர், 320 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இந்த காரின் மூன்று கதவுகள் மற்றும் ஐந்து கதவுகள் கொண்ட வேரியண்டில் 4 வீல் டிரைவ் வசதி ஸ்டான்டர்டு அம்சமாக வழங்கப்படுகிறது.

    இந்திய சந்தையில் புதிய போர்ஸ் குர்கா மாடல் மாருதி ஜிம்னி மற்றும் மஹிந்திரா தார் என்ட்ரி லெவல் மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

    • முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட நிலையில் இந்தியா கொண்டுவரப்படுகிறது.
    • இந்த காரில் S58 ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது.

    பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் சத்திவாய்ந்த கார்களில் ஒன்றான M4 காம்படிஷன் மாடல் இந்திய சந்தையில் அறிமுகமானது. புதிய கூப் மாடலில் பி.எம்.டபிள்யூ. எக்ஸ் டிரைவ் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் வழங்கப்பட்டு இருக்கிறது.

    இத்துடன் S58 ஆறு சிலிண்டர்கள் கொண்ட டர்போ என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த கார் முழுமையாக அசெம்பில் செய்யப்பட்ட நிலையில், இந்தியா கொண்டுவரப்படுகிறது. புதிய பி.எம்.டபிள்யூ. M சீரிஸ் காரில் உள்ள என்ஜின் 530 ஹெச்.பி. பவர், 650 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

    இந்த கார் மணிக்கு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 3.5 நொடிகளில் எட்டிவிடும். இத்துடன் 8 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. என்ஜின், சேசிஸ், ஸ்டீரிங், பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற செட்டிங்களை இயக்குவதற்காக சென்டர் கன்சோலில் பட்டன் ஒன்று வழங்கப்பட்டு இருக்கிறது.

    2024 M4 காம்படிஷன் மாடலின் விலை ரூ. 1 கோடியே 53 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

    • இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.
    • புதிய மாருதி ஸ்விப்ட் மாடல் விலை ரூ. 6.5 லட்சத்தில் துவங்கலாம்.

    மாருதி சுசுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்விப்ட் கார் முன்பதிவு துவங்கியுள்ளது. புதிய ஸ்விப்ட் காருக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும். இந்திய சந்தையில் புதிய மாருதி ஸ்விப்ட் மாடல் மே 9 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.

    இந்தியாவில் மிகவும் பிரபலமான ஸ்விப்ட் காரின் நான்காவது தலைமுறை மாடல் இது ஆகும். புதிய ஸ்விப்ட் மாடல் பெட்ரோல் மற்றும் சி.என்.ஜி. என இருவித பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கும் என்று தெரிகிறது.

    கடந்த ஆண்டு ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய ஸ்விப்ட் மாடல் முற்றிலும் புதிய எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், வீல்கள், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள், டோர் ஹேண்டில்களை கொண்டிருக்கிறது. காரின் உள்புறம் ஃபுளோட்டிங் டிஸ்ப்ளே, அளவில் பெரிய MID மற்றும் கிளைமேட் கண்ட்ரோல் இன்டர்ஃபேஸ் உள்ளது.

     


    புதிய மாருதி ஸ்விப்ட் மாடல் LXi, VXi மற்றும் Zxi வேரியண்ட்களில் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. சர்வதேச சந்தையில் புதிய ஸ்விப்ட் மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல், மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பம் கொண்டிருக்கும் என்று தேரிகிறது. இந்திய சந்தையில் இந்த மாடல் K12C 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கலாம்.

    விலையை பொருத்தவரை புதிய மாருதி ஸ்விப்ட் மாடல் ரூ. 6.5 லட்சத்தில் துவங்கி அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்படலாம். இந்திய சந்தையில் புதிய ஸ்விப்ட் மாடல் ரெனால்ட் க்விட், மாருதி வேகன் ஆர், மாருதி செலரியோ, டாடா பன்ச் மற்றும் ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    • இந்த கார் அதிக அம்சங்கள், தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.
    • இந்த கார் இருவித என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    மஹிந்திரா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட XUV 3XO மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் விலை ரூ. 7 லட்சத்து 49 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய மஹிந்திரா XUV 3XO மாடல் முற்றிலும் புதிய டிசைன், அதிக அம்சங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் மேம்பட்ட செயல்திறன் கொண்டிருக்கிறது.

    புதிய மஹிந்திரா XUV 3XO மாடல் MX1, MX2, MX3 மற்றும் MX2 ப்ரோ, AX5, AX5L, AX7 மற்றும் AX7L போன்ற வேரியண்ட்களில் கிடைக்கிறது. டிசைனை பொருத்தவரை இந்த மாடலில் C வடிவம் கொண்ட எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், ஸ்ப்லிட் எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், பிளாக்டு அவுட் கிரில், மெஷ் பேட்டன் மற்றும் மேம்பட்ட முன்புற பம்ப்பர் வழங்கப்படுகிறது.

     


    காரின் பின்புறத்தில் எல்.இ.டி. லைட் பர், எல்.இ.டி. டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகின்றன. இந்த காரில் டெயில்கேட், ரியர் வைப்பர் மற்றும் வாஷர், ரியர் டிஃபாகர், அகலமான பம்ப்பர் மற்றும் புதிய XUV 3XO லெட்டரிங் வழங்கப்பட்டு இருக்கிறது.

    உள்புறம் 10.25 இன்ச் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம், ஆல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் பேனல் வழங்கப்படுகிறது. இந்த காரில் முற்றிலும் புதிய ஸ்டீரிங் வீல், டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், வயர்லெஸ் சார்ஜர், ஆம்பியண்ட் லைட்டிங், 360 டிகிரி சரவுண்ட் கேமரா, லெதர் இருக்கைகள், ரிவைஸ்டு சென்டர் கன்சோல், ரியர் ஏ.சி. வெண்ட்கள் வழங்கப்படுகின்றன.

    மஹிந்திரா XUV 3XO மாடல் 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் யூனிட் வழங்கப்படுகிறது.

    • புதிய ருமியன் வேரியண்டில் 1.5 லிட்டர் K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் உள்ளது.
    • இந்த கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர்கள் மைலேஜ் வழங்குகிறது.

    டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தனது ருமியன் காரின் புது வேரியண்டை அறிமுகம் செய்தது. ருமியன் G AT என அழைக்கப்படும் புது வேரியண்ட் விலை ரூ. 13 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. இந்த காரின் வினியோகம் மே 5 ஆம் தேதி முதல் துவங்குகிறது. புதிய டொயோட்டா ருமியன் G AT வேரியண்டுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. முன்பதிவு கட்டணம் ரூ. 11 ஆயிரம் ஆகும்.

    புது வேரியண்ட் அறிமுகம் செய்த கையோடு ருமியன் சி.என்.ஜி. வேரியண்டுக்கான முன்பதிவுகளை டொயோட்டா நிறுவனம் மீண்டும் துவங்கியது. ருமியன் சி.என்.ஜி. ஆப்ஷன் S வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 11 லட்சத்து 39 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் முதல் துவங்குகிறது.

     


    புதிய ருமியன் G AT வேரியண்டில் 1.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட K சீரிஸ் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 102 ஹெச்.பி. பவர், 137 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்த கார் லிட்டருக்கு 20.51 கிலோமீட்டர்கள் வரையிலான மைலேஜ் வழங்குகிறது.

    அம்சங்களை பொருத்தவரை டொயோட்டா ருமியன் G AT வேரியண்டில் 7 இன்ச் அளவில் டச் ஸ்கிரீன் வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார் பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, டொயோட்டா ஐ கனெக்ட் தொழில்நுட்பம், டூயல் ஏர்பேக், ஏ.பி.எஸ். மற்றும் இ.பி.டி., இ.எஸ்.பி., ஹில் ஹோல்டு கண்ட்ரோல், ப்ரோஜெக்டர் ஹெட்லேம்ப்கள், எல்.இ.டி. டெயில் லைட்கள், ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், பேடில் ஷிஃப்டர்கள், என்ஜின் ஸ்டார்ட் - ஸ்டாப் பட்டன் வழங்கப்படுகிறது.

    • இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
    • பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.

    உலகம் முழுவதும் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பயனர்களின் கவனத்தை ஈர்க்க இளைஞர்கள் பலரும் வித்தியாசமான செயல்கள் மற்றும் சாகசங்களை செய்து வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் அமெரிக்காவின் சாலைகளில் விசித்திரமான வடிவமைப்புடன் சென்ற காரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கார் தலைகீழாக கவிழ்ந்து சக்கரங்கள் மேலே இருக்கும் நிலையில், காரை டிரைவர் வழக்கம் போல ஓட்டி செல்லும் காட்சிகள் உள்ளன. சக்கரங்கள் மட்டுமின்றி கார் எண் உள்பட அனைத்துமே தலைகீழாக இருக்கும் நிலையில், பார்ப்பதற்கு தலைகீழாக கவிழ்ந்து கிடக்கும் காரை எப்படி ஓட்டி செல்கிறார்? என்று பயனர்கள் திகைப்படையும் வகையில் வீடியோ உள்ளது.

    இன்ஸ்டாகிராமில் 36 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். சில பயனர்கள், வித்தியாசமான வடிவமைப்பிற்காக கார் உரிமையாளரை பாராட்டினர். அதே நேரம் சில பயனர்கள், பொது மக்களை குழப்பும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பதிவிட்டனர்.



    ×