search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அத்தியாவசிய பொருட்கள்"

    • மழை வெள்ளத்தின் போது, மக்களை திமுக அரசு வஞ்சித்தது.
    • மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    சென்னை புரசைவாக்கத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அங்கு தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து வாக்கு சேகரிக்கப்பட்டது.

    அப்போது எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    இந்த தேர்தல் பணநாயகத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடக்கும் தேர்தல். மழை வெள்ள பாதிப்புக்கு, மற்றவர்கள் மீது பழி சுமத்தி திமுக அரசு தப்பிக்க பார்க்கிறது.

    மழை வெள்ளத்தின் போது, மக்களை திமுக அரசு வஞ்சித்தது. மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் ஆன நிலையில், திமுக அரசு என்ன செய்தது ? விலைவாசி உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அத்தியாவசிய பொருட்களின் விலை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்தோம்.

    ஊழல் இல்லாத துறையே இல்லை, எல்லா துறையிலும் லஞ்சம். மழை வெள்ளத்தின்போது, மக்களுக்கு உதவி செய்தது அதிமுக தான்.

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது. கஞ்சா விற்பனை செய்ததாக 2,118 பேர் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், 148 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழ்நாட்டில் காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. திமுக அறிவித்த 520 வாக்குறுதிகளில் 10 சதவீதத்தை மட்டுமே நிறைவேற்றியுள்ளனர்.

    2021 சட்டமன்ற தேர்தலில், திமுக, அதிமுக இடையேயான வாக்கு சதவீதம் 3 சதவீதம் மட்டுமே.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது.
    • தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.

    மிச்சாங் புயல் சென்னை நகரை புரட்டிப்போட்டு உள்ளது. இடைவிடாது பெய்த கனமழை காரணமாக திரும்பும் திசை எல்லாம் வெள்ளக்காடாக மாறியது. இன்னும் பல இடங்களில் வெள்ள நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் குடிநீர், அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

    கொரட்டூர் பகுதியில் கொட்டித்தீர்த்த மழையால் அப்பகுதி முழுவதுமே கடுமையாக பாதிக்கப்பட்டது. சாலைகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி குடியிருப்புகள் வெள்தத்தால் சூழப்பட்டது. தற்போது வெள்ள நீர் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் கொரட்டூர் பகுதியில் சில இடங்களில் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்து உள்ளனர்.

    குறிப்பாக கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சூழ்ந்த மழை வெள்ளத்தால் அப்பகுதி மக்கள் திக்குமுக்காடினர். பலத்த மழை காரணமாக பட்டாபிராம் ஏரி, ஆவடி ஏரி, அயப்பாக்கம் ஏரி ஆகியவை நிரம்பி வழிந்து கொரட்டூர் ஏரிக்கு வந்தபோது கொரட்டுர் ஜீரோ பாயிண்ட் நிரம்பி உபரி நீரானது கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குள் புகுந்ததால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இது ஏற்கனவே பள்ளமான பகுதி என்பதால் 4 நாட்கள் ஆகியும் தண்ணீர் இன்னும் குறையவில்லை. மழை நின்று 3 நாட்கள் ஆகியும் மழை நீர் வெளியேறாமல் உள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் வடக்கு பகுதியில் 55 முதல் 67 தெருக்கள் மற்றும் மத்திய நிழற்சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் அப்புறப்படுத்தப்படாமல் அப்படியே உள்ளது. இன்னும் ஒரு அடி கூட குறையவில்லை. 30-க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து அப்படியே தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் மின் சப்ளை துண்டிக்கப்பட்டு உள்ளதால் கடந்த 4 நாட்களாக அங்குள்ள மக்கள் தவித்து வருகின்றனர்.

    தண்ணீர் அதிக அளவு தேங்கியதால் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வீடுகளை காலி செய்து உறவினர்கள் வீடுகளுக்கு சென்று விட்டனர். மழைநீர் சூழ்ந்துள்ள பகுதியில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வெளியே வரமுடியாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர். அவர்களுக்கு பால், உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் கிடைக்காததால் தவித்து வருகிறார்கள். தெருக்களில் இடுப்பு அளவுக்கு மேல் தண்ணீர் உள்ளதால் அங்கு வசிப்பவர்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர்.அவர்களுக்கு நிவாரண உதவி செய்யப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, மழையால் எங்கள் வாழ்வாதம் முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. குடியிருப்பு முழுவதுமே தண்ணீரால் சூழப்பட்டு இருக்கிறது. உணவுக்கும் தண்ணீருக்கும் மிகவும் கஷ்டப்படுகிறோம். நிவாரண உதவி எதுவும் கிடைக்கவில்லை. நாங்கள் வீட்டிற்குள்ளே 5 நாட்களாக அடைபட்டு இருக்கிறோம். கீழே வந்தால் எங்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. வீட்டில் இருந்த மளிகை பொருட்களை வைத்து சமாளித்தோம். இனிமேல் என்ன செய்வோம். எங்களுக்கு பால் தண்ணீர் ஏற்பாடு செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு மழைக்காலத்திலும் நாங்கள் இப்படி அவதிப்பட வேண்டுமா? எங்களுக்கு நிரந்தர தீர்வு என்பது கிடையாதா? கேட்டால் ஏரியை உடைத்து விட்டோம் என்கிறார்கள். எந்த ஏரியை உடைத்து விட்டார்கள் எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். முதலில் பால், குடிநீர், மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    பட்டரைவாக்கம் பால்பண்ணையில் மழைநீர் புகுந்துள்ளதால் 3-வது நாளாக அம்பத்தூர், கள்ளிகுப்பம், ஒரகடம், பாடி, புதூர், மண்ணூர் பேட்டை, திருமங்கலம், உட்பட பல்வேறு பகுதிகளில் ஆவின் பால் சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பால் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

    கொரட்டூர் ரெயில்வே சுரங்கப் பாதையில் மழைநீர் நிரம்பி வழிகிறது. இதனால் கொரட்டூர் வடக்கு அக்கரகாரம் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    டிடிபி காலனி, மேனாம்பேடு மெயின் ரோடு, பட்டரைவாக்கம் பிரதான சாலை பகுதிகளில் மழைவெள்ளம் குறைந்ததால் அங்கு மின் சப்ளை வழங்கப்பட்டுள்ளது. சிட்கோ தொற்பேட்டை பகுதியான பட்டரைவாக்கம் பகுதியில் சுமார் 1000- மேற்பட்ட தொழிற்சாலைகளில் மழை நீர் புகுந்துள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பட்டறைவாக்கம் கொரட்டூர் சாலையில் பட்டரைவாக்கம் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதால் வழக்கம் போல் வாகனங்களை இயக்கப்படுகின்றன.

    இதற்கிடையே இன்று காலை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீரால் பாதிக்கப்பட்ட தொழிற்சாலைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்து தொழிற்சாலையின் உரிமையாளரிடம் நிறை குறைகளை கேட்டறிந்தார். அப்போது எம்.எல்.ஏ.ஜோசப் சாமுவேல், மண்டலகுழுத் தலைவர் பி கே மூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • டாஸ்மாக் அரசாக தி.மு.க. உள்ளது.
    • ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தினர்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள காமராஜரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் ஜெயக்குமார் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    இந்திராகாந்தி, லால்பக தூர் சாஸ்திரியையும் பிரதமராக உருவாக்கிய தமிழர். 1940ல் சிறையில் இருந்ததால் பதவியை உதறியவர் காமராஜர். ஆனால் தற்போது சிறை கைதியாக இருந்துக் கொண்டு பதவியை காந்தம் போல பிடித்துக்கொண்டு இருக்கிறார்கள். கொடநாடு விவகாரத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் குரலாக ஓ.பி.எஸ். இருக்கிறார். கொடநாடு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைப்பதில் என்ன பிரச்சினை. தி.மு.க.வின் தூண்டுதலின் பெயரில்தான் ஆகஸ்ட் 1-ந்தேதி ஓ.பி.எஸ். ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளார்.

    செந்தில் பாலாஜியை அமைச்சர் என்ற பாதுகாப்பு கேடயத்தை பயன்படுத்தி விசாரணை மேற்கொள்வதை தடுக்கிறார்கள். இதற்குமேல் அமைச்சர் செந்தில் பாலாஜியை பதவியில் நீட்டிக்காமல் அவரை நீக்குவதுதான் சரி.

    அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வைக் கண்டித்து 20-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தக்காளி, இஞ்சியை கண்ணீல் பார்க்க முடிய வில்லை.

    டாஸ்மாக் அரசாக தி.மு.க. உள்ளது. எந்த மாநிலத்திலாவது டாஸ்மாக் நேரத்தை மாற்ற ஆலோசனை நடைபெற்றுள்ளதா? தமிழ்நாட்டில் தான் முதன் முறையாக நடைபெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியை டெல்லிக்கு கொண்டு சென்று ஒப்புதல் வாக்கு மூலம் பெற்று விடுவார்கள்.

    ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அ.தி.மு.க. அலுவலகத்தை சேதப்படுத்தினர். ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலா 3 பேரும் ஒரே நிலையில் தான் இருக்கிறார்கள். இவர்களை தவிர யார் மன்னிப்பு கடிதம் கொடுத்தாலும் சேர்த்துக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
    • மத்திய அரசின் கையிருப்பில் இருந்து உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் உணவு மற்றும் பொது விநியோகத்துறை மந்திரி பியூஷ்கோயலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    அத்தியாவசிய உணவுப் பொருட்களான அரிசி, கோதுமை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வினால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பண வீக்கத்தைப் பொறுத்த வரையில், 2023 மே மாதத்தில், தானியங்கள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 12.65 சதவீதம் ஆகவும், பருப்பு வகைகள் மற்றும் அவற்றின் தயாரிப்புகளுக்கு 6.56 சதவீதம் ஆகவும் இருந்தது. சமீபத்தில் ஏற்பட்டுள்ள விலை உயர்வு இந்த நிலைமையை மேலும் மோசமாக்க வாய்ப்புள்ளது.

    இந்த நிலையில், கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறிகள், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் துவரம் பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

    அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பயன்பெறத் தகுதியுடைய பயனாளிகள் மட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் அரிசி மற்றும் கோதுமையை தமிழ்நாடு அரசு இலவசமாக வழங்கி வருகிறது. ஒன்றிய அரசின் வழிகாட்டுதலின்படி துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப் பருப்பு, மசூர் பருப்பு, கோதுமை ஆகியவற்றின் இருப்பு விவரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ள போதிலும், நாடு தழுவிய அளவில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தின் காரணமாக, குறிப்பிட்ட சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது.

    இதுதொடர்பாக 10.7.2023 அன்று விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தி, தமிழ்நாட்டில் கூட்டுறவு மற்றும் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் பல்பொருள் அங்காடிகள், நியாயவிலைக் கடைகள் மூலம் காய்கறிகள், மளிகைப் பொருட்களை விற்பனை செய்திட உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேற்கூறிய சில உணவுப் பொருட்களை உள்நாட்டு அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, அந்த நடவடிக்கை தற்போது செயல்பாட்டில் உள்ளது. உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக ஒன்றிய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவுப் பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10,000 மெட்ரிக் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

    இந்தப் பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப் படுத்தப்படும். இந்த விஷயத்தில் ஒன்றிய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை மந்திரி உடனடியாகத் தலையிட வேண்டும்.

    இவ்வாறு கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் மளிகை பொருட்கள் விலை இன்னும் குறையவில்லை.
    • வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறி-மளிகை பொருட்கள் போதிய அளவு வராததால் விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது.

    காய்கறிகள் விலை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில் மளிகை பொருட்களின் விலையும் பல மடங்கு அதிகரித்து விட்டது.

    சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தக்காளி கிலோ ரூ.130-க்கும், சின்ன வெங்காயம் ரூ.220-க்கும் விலை உயர்ந்து விட்டது.

    விலை உயர்வை கட்டுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அப்போது அத்தியாவசிய பொருட்களை பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அது மட்டுமின்றி உழவர் சந்தைகளில் தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை அதிகம் கொள்முதல் செய்து விற்க ஏற்பாடு செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    சென்னையில் பரீட்சார்த்தமாக கூட்டுறவு கடைகள் உள்ளிட்ட 87 ரேஷன் கடைகளில் தக்காளி கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் சுமார் 302 ரேஷன் கடைகளில் தக்காளி இப்போது விற்கப்பட்டு வருகிறது.

    ஆனாலும் மற்ற காய்கறிகளான கேரட், வெண்டைக்காய், பீன்ஸ், அவரை, கத்தரிக்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகளின் விலையும் தாறுமாறாக விலை உயர்ந்துள்ளது.

    அது மட்டுமின்றி மளிகை பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. இதனால் சாதாரண ஏழை-எளிய நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அரிசி கிலோவுக்கு 10 ரூபாய் வரை அதிகரித்து விட்டது. இஞ்சி கிலோ ரூ.350-க்கு உயர்ந்து விட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலை 20 சதவீதம் அளவுக்கு உயர்ந்து உள்ளது.

    விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு வந்தாலும் மளிகை பொருட்கள் விலை இன்னும் குறையவில்லை. வட மாநிலங்களில் பெய்து வரும் மழை காரணமாக காய்கறி-மளிகை பொருட்கள் போதிய அளவு வராததால் விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர்கள் தெரிவித்து வருகின்றனர்.

    இதுகுறித்து தமிழ்நாடு வணிகர்கள் மகாஜன சங்க மாநிலத் தலைவர் மயிலை மாரித்தங்கம் கூறியதாவது:-

    வெளிநாட்டில் இருந்து பருப்பு வகைகள் வருவது குறைந்து விட்டதால் துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

    இதற்கு முன்பு 1 கிலோ துவரம் பருப்பு ரூ.120-க்கு கிடைத்தது. ஆனால் இப்போது 60 ரூபாய் கூடி ரூ.180-க்கு விற்கப்படுகிறது. சீரகம் 1 கிலோ ரூ.400-க்கு கிடைத்து வந்த நிலையில் இப்போது இரு மடங்கு விலை உயர்ந்து 1 கிலோ சீரகம் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    நமது உள்நாட்டில் கிடைக்க கூடிய மற்ற மளிகைப் பொருட்கள் மற்றும் அரிசி விலையும் இப்போது உயர்ந்து விட்டது. இஞ்சி 1 கிலோ ரூ.150-க்கு விற்பனையாகி வந்த நிலையில் இப்போது ரூ.350-க்கு விலை உயர்ந்து விட்டது.

    உளுந்து ரூ.110-க்கு கிடைத்தது. இப்போது கிலோ ரூ.154-க்கு விற்கப்படுகிறது. மிளகு 1 கிலோ ரூ.550-ல் இருந்து ரூ.700-க்கு விலை உயர்ந்து விட்டது. சோம்பு கிலோ ரூ.400-ல் இருந்து ரூ.500 ஆகவும், கடுகு ரூ. 90-ல் இருந்து ரூ.120 ஆகவும் வெந்தயம் ரூ.90-ல் இருந்து ரூ.120 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.

    பூண்டு ரூ.150-ல் இருந்து ரூ.180-க்கும், கடலை பருப்பு 1 கிலோ ரூ.70-ல் இருந்து ரூ.90-க்கும் விலை உயர்ந்துள்ளது. உதயம் கடலை பருப்பு 1 கிலோ ரூ.100-க்கு விற்கப்படுகிறது.

    பாசிப்பருப்பு கிலோ ரூ.100-ல் இருந்து ரூ.154 ஆகவும், தனியா ரூ.120-ல் இருந்து ரூ.140-க்கும், பெருங்காயம் 1 கிலோ ரூ. 700-ல் இருந்து ரூ.800 ஆகவும் விலை உயர்ந்து விட்டது.

    அரிசியை எடுத்துக் கொண்டால் கிலோவுக்கு 10 ரூபாய் வரை உயர்ந்து விட்டது. சிவாஜி பிராண்ட் பொன்னி, புழுங்கல் அரிசி 25 கிலோ பாக்கெட் ரூ.1,600-க்கு விலை உயர்ந்து விட்டது. பொன்னி பச்சரிசி 25 கிலோ ரூ.1,500-க்கு விற்கப்படுகிறது.

    இதயம் நல்ல எண்ணெய் 1 லிட்டர் ரூ.400-ல் இருந்து ரூ.440-க்கு உயர்ந்து விட்டது. கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.195 ஆகி விட்டது.

    விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு எடுத்துள்ள முயற்சிகள் போதாது. இன்னும் அதிகம் கவனம் செலுத்தினால்தான் அனைத்து பொருட்களின் விலையையும் கட்டுக்குள் கொண்டு வர முடியம்.

    இவ்வாறு மாரித்தங்கம் தெரிவித்தார்.

    • உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்ய போதுமான உணவு தானிய இருப்பு உள்ளது.
    • கோதுமை மற்றும் அரிசி விலைகள் கட்டுக்குள் உள்ளது.

    மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

    வரவிருக்கும் பண்டிகைக் காலங்களை கருத்தில் கொண்டு, அத்தியாவசிய உணவு பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்தவும், சமூகத்தில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கான சிரமங்களையும் தவிர்க்கவும், மத்திய அரசு, பிரதமரின் ஏழைகள் நல உணவுத் திட்டத்தை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

    தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி கூடுதல் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான உணவு தானியங்களின் இருப்பு, மத்திய தொகுப்பில் இருப்பதையும், விலைகள் கட்டுக்குள் இருப்பதையும் மத்திய அரசு உறுதி செய்துள்ளது.

    விலைவாசி உயர்வைத் தவிர்க்க 13.05.2022 முதல் கோதுமைக்கும், 08.05.2022 முதல் அரிசிக்கும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதன் மூலம் கோதுமை மற்றும் அரிசியின் சில்லறை மற்றும் மொத்த விற்பனை விலைகள் குறைந்துள்ளது.

    கோதுமை விலை கடந்த வாரத்தில் நிலையானதாக இருந்தது. விலைகளைக் கட்டுப்படுத்த வெளிச்சந்தை விற்பனை திட்டத்தின் மூலம் சுமார் 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வெளிச்சந்தை விற்பனைக்கு மாற்றப்பட்டன.

    கோதுமை, கோதுமை மாவு, அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை நிலவரத்தை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து, தேவையான திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×