என் மலர்
- பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில் `BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது.
- நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது
நடிகர்கள் பிரபுதேவா, வடிவேலு கூட்டணியில்`BANG BANG' என்ற படம் தயாராகி வருகிறது. இந்த படத்தை சாம் ரோட்ரிகஸ் இயக்க, யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
காதலன், மனதை திருடிவிட்டாய், ராசைய்யா, மிஸ்டர் ரோமியோ, லவ் பேர்ட்ஸ் மற்றும் எங்கள் அண்ணா போன்ற படங்களின் மூலம் 90ஸ்களில் ரசிகர்களை மகிழ்வித்த இந்த காமெடி கெமிஸ்ட்ரி கூட்டணி தற்போது மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து வடிவேலுவும் பிரபுதேவாவும் இணைந்து அவ்வப்போது ஜாலியான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அவ்வகையில் பிரபுதேவா ஜாலியாக நடனடமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
- ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார்.
- படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது
கமல் தயாரிப்பில் ரஜினி தனது 173-வது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை டான் பட இயக்குநரான சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.
இதையடுற்றது ரஜினி-கமல் இணைந்து புதிய படத்தில் நடிக்கவுள்ளனர். இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தின் புரோமோ படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளார். இந்த படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரனும், துணை முதலமைச்சர் உதயநிதி மகனுமான இன்பநிதி தயாரிக்கவுள்ளார்.
படத்தில் ரஜினிக்கும், கமலுக்கும் சம்பளம் இல்லாமல் லாபத்தில் பங்கு என்ற முறையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று இரவு 7.12 மணிக்கு புதிய படத்தின் அப்டேட் வெளியாகும் என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
அந்த போஸ்டரில் "உலகங்கள் ஒன்றிணையும் போது,ஒரு பக்கம் சாய்வதேது?" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது ரஜினி - கமல் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதற்காக தான் கமலின் பிறந்தநாளான 7 மற்றும் ரஜினியின் பிறந்தநாளான 12 என்பதை குறிக்கும் விதமாக 7.12 மணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினி தற்போது ஜெயிலர்-2 டப்பிங் பணிகளில் இருக்கிறார். இந்த பணிகள் முடிவடைந்ததும் மார்ச் மாதத்தில் இருந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினியின் 173-வது படப்பிடிப்பு தொடங்குகிறது.
- ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார்.
- சாம் பிஎஸ் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
நடிகர் விக்ராந்த் மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியாகிறது. டைட்டில் போஸ்டரை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். இந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு 'அண்டர் 18' (UNDER 18) என பெயரிடப்பட்டுள்ளது.
ஜெகதீஷ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனரான கார்த்திக் பெருமாள்சாமி எழுதி இயக்க உள்ளார். சாம் சிஎஸ் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் குறித்த வேறு எந்த வித தகவலும் வெளியாகவில்லை.
நடிகர் விக்ராந்த் LBW, மதராசி, மார்க் ஆகிய படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 'தீயவர் குலை நடுங்க' படம் வெளியானது. அதனை தொடர்ந்து, கருப்பர் நகரம், மோகன்தாஸ், உத்தரகாண்டா, ஓ.! சுகுமாரி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
- நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
- தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது.
தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்றவர் சமுத்திரகனி. இவர் இயக்கி நடித்த 'விநோதய சித்தம்' படம் ஓ.டி.டி. தளமான ஜீ5-ல் வெளியாகி வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து தற்போது நவீன் குமார் பழனிவேல் இயக்கத்தில் அஜய் கிருஷ்ணா தயாரிப்பில் சமுத்திர கனி நடிப்பில் உருவாகி உள்ள தொடர் 'தடயம்'. இந்த தொடரில் நடிகை ஷிவதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'தடயம்' தொடர் 1999-ம் ஆண்டில் தமிழ்நாடு - ஆந்திரப் பிரதேச எல்லைப் பகுதிகளில் நடைபெற்ற அச்சுறுத்தும் சம்பவங்களை மையமாகக் கொண்டது. நிஜ வாழ்க்கையில் நடந்த பயங்கரமான தொடர் கொலைகளை மீண்டும் நினைவூட்டி பார்வையாளர்களுக்கு திகிலூட்டும் ஒரு புதிய அனுபவத்தை தர உள்ளது.
இந்த நிலையில், 'தடயம்' தொடரின் டிரெய்லர் தற்போது வெளியாகி உள்ளது. கூர்மையான புத்திசாலித்தானம் கொண்ட காவல் அதிகாரியான சமுத்திரகனி, குற்றவாளிகளையும், கொலைகளுக்கு பின்னால் இருக்கும் காரணங்களையும் கண்டறிகிறார். அதிரடி க்ரைம் த்ரில்லராக உருவாகி உள்ள திகில் நிறைந்த 'தடயம்' தொடரை வருகிற 27-ந்தேதி முதல் ஜீ5 ஓ.டி.டி. தளத்தில் கண்டு மகிழலாம்.
- சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடித்துள்ளார்.
- போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. இவர் ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நகைச்சுவை கதாபாத்திரங்கள் மட்டுமின்றி பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும் இவர் நடித்துள்ளார்.
அந்த வகையில், சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள புதிய படம் ஒன்றில் யோகி பாபு நடித்துள்ளார். ஆர்.பி.டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் லவ்வின் சந்திரசேகர் கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் வறண்ட மற்றும் தரிசு கிராம மக்களைச் சுற்றி நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், யோகி பாபு நடித்துள்ள புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் படத்தின் தலைப்பு 'கெணத்த காணோம்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார்.
போஸ்டரில் கிராம மக்களுடன் சேர்ந்து தண்ணீருக்காக யோகி பாபு பிரார்த்தனை செய்கிறார். இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- சூர்யாவுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
- பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறதாம்.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
ஜீத்து மாதவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த 2 படங்களை தொடர்ந்து 'டிராகன்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இது ரஜினிக்கு சொன்ன கதை என்றும், அந்த கதையை தற்போது சூர்யாவுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
அஷ்வத் மாரிமுத்து தற்போது சிம்புவை வைத்து 'காட் ஆப் லவ்' படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் சூர்யாவுடன் கைகோர்பார் என்று தெரியவருகிறது. இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறதாம்.
- நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ளவே மாட்டேன்.
- தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல்வேறு முயற்சிகளை செய்வார்.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் மோகன்பாபுவின் மகளும், நடிகையுமான லட்சுமி மஞ்சு தெலுங்கு, இந்தி மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்துள்ளார். தமிழில் 'கடல்', 'காற்றின் மொழி', 'இஞ்சி இடுப்பழகி', 'பூக்கி' படங்களில் நடித்துள்ளார்.
இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற லட்சுமி மஞ்சு பேசியது கவனம் ஈர்த்துள்ளது.
அதில், "நான் ஆணாதிக்கத்தை பொறுத்துக்கொள்ளவே மாட்டேன். திருமணம் என்ற அழகிய பந்தத்தில் ஒருவர் சரியில்லை என்றாலும் அந்த உறவு அர்த்தமற்றதாகி விடும். கணவனின் அடக்குமுறைகளை சகித்து வாழ்வது என்பது அவரவர் விருப்பம். அவர்களிடம் சொல்லிக்கொள்வது ஒன்றுதான். யாரும் நம்மை அடிக்க உரிமை கிடையாது. சுயமரியாதை நமக்கு முக்கியம்.
ஒருகாலத்தில் காதலை பெற்றோரிடம் சொல்லவே பயந்தோம். இன்றைக்கு 'நான் ஒருவருடன் உறவில் இருக்கிறேன்' என்று கூறும் நிலை வந்திருக்கிறது. சமூக வலைதளங்கள் நம் மனதை அசைத்து பார்த்துவிட்டன.
தனக்கு பிடித்த பெண்ணை காதலிக்க ஒரு ஆண் பல்வேறு முயற்சிகளை செய்வார். ஆனால் இன்று ஒரு பெண்ணுக்கு அனுப்ப வேண்டிய எஸ்.எம்.எஸ்-ஐ பலருக்கும் காப்பி செய்து அனுப்புகிறேன். உலகம் நிறைய மாறிவிட்டது. இதுபோன்ற ஆசாமிகளை கண்டறிவது பெண்களின் பொறுப்பு தான் என கூறினார்.
- கடந்த சில மாதங்களாகவே படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறேன்.
- கேரளாவில் இதுபோன்ற சிக்கலில் சிக்கி பலர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
மலையாள நடிகையான ரேகா ரதீஷ், சின்னத்திரை தாண்டி வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இதற்கிடையில் அவர் நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் அவர் கண்ணீர் மல்க பேசும்போது, "கடந்த சில மாதங்களாகவே படவாய்ப்புகள் இல்லாமல் தவித்து வருகிறேன். எனக்கு பள்ளிக்கூடம் செல்லும் மகனும் உள்ளான். இதற்கிடையில் யூ-டியூபர்கள் சிலர் என்னை பற்றி தொடர்ந்து அவதூறு பரப்பி வருகிறார்கள். இதனால் கடும் மன அழுத்தத்தில் இருக்கிறேன்.
கேரளாவில் இதுபோன்ற சிக்கலில் சிக்கி பலர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். என் மகனுக்காக மட்டுமே வாழ்ந்து வரும் எனக்கு இது போன்ற மன அழுத்தங்கள் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. எனக்கு ஏதாவது ஒன்று நடந்தால் அந்த யூ-டியூபர்கள் தான் காரணம். அவர்கள் மீது கேரள மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்". என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ குறித்து காவல்துறை உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
- தாய் கிழவி திரைப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.
- தாய் கிழவி திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா நடித்துள்ள புதிய படம் 'தாய் கிழவி'. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ள இப்படத்தில் சிங்கம் புலி, அருள்தாஸ், பாலசரவணன், முனிஷ்காந்த், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
உசிலம்பட்டி கிராமத்தில் உள்ள காடுபட்டியில் வாழும் 75 வயது மூதாட்டி மற்றும் அவரது குடும்பத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் 75 வயது மூதாட்டியாக முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா நடித்துள்ளார். 'தாய் கிழவி' திரைப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்தின் வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், 'தாய் கிழவி' படத்தின் Script to Screen வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்தப் படம் தொடக்கம் முதல் ரிலீஸ் வரையிலான பணிகளின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
- இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
- இந்தப் படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார்.
இயக்குநர் விஜய் ரங்கநாதன் எழுதி, இயக்கி இருக்கும் "ஓ பட்டர்பிளை". ஆண்ட்ஹில் சினிமா மற்றும் பாலம்பூர் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. "ஓ பட்டர்பிளை" படத்தில் நிவேதிதா சதீஷ், சிபி, நாசர், லட்சுமி ப்ரியா சந்திரமௌலி, கீதா கைலாசம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
காதல் மற்றும் திகில் கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு வைசாக் சோமநாத் இசையமைத்துள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டீசர் ரசிகர்களிடையே கவனம் பெற்றது. சஸ்பென்ஸ் கதையம்சம் கொண்ட இந்தப் படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், "ஓ பட்டர்பிளை" திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் `போகாதே' நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. விக்னேஷ் ஸ்ரீகாந்த் வரிகளில் கபில் கபிலன் பாடியிருக்கும் இந்தப் பாடல் நாளை வெளியாகிறது.
காட்டில் ஆய்வு நடத்தும் ஒரு விலங்கியல் ஆராய்ச்சியாளராக ஆண்ட்ரியா நடித்துள்ளார். அடர்ந்த காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகச் செல்லும் அவர், அங்கு எதிர்பாராத சில மர்மமான மனிதர்களிடமும், இயற்கைச் சீற்றங்களிடமும் சிக்கிக் கொள்கிறார்.
அங்கிருந்து அவர் எப்படித் தப்பித்தார், காட்டின் ரகசியம் என்ன என்பதே படத்தின் மீதிக்கதை..!
நடிகர்கள்
படம் முழுக்க ஆண்ட்ரியாவின் ஒற்றை ஆள் ராஜ்ஜியம் தான். பயம், துணிச்சல், பதற்றம் என அனைத்து உணர்ச்சிகளையும் மிக எதார்த்தமாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஸ்டண்ட் காட்சிகளிலும் அர்ப்பணிப்பு தெரிகிறது.
இயக்கம்
இந்தப் படத்தை ஒரு முழுமையான 'சர்வைவல் த்ரில்லர்' பாணியில் இயக்க முயன்றிருக்கிறார் இயக்குனர் நாஞ்சில் நாகராஜன். படத்தின் முதல் பாதியில் கதை நகர்வதே தெரியாத அளவுக்கு மிக மெதுவாகச் செல்கிறது. பல காட்சிகள் நீளமாக இருப்பது போலத் தோன்றுகிறது. காட்டை மையமாக வைத்து வரும் மற்ற படங்களைப் போலவே இதிலும் 'மனிதர்கள்தான் காட்டின் எதிரிகள்' என்ற அதே பழைய கருத்தை நோக்கியே கிளைமாக்ஸ் நகர்கிறது.
சில இடங்களில் வசனங்கள் நாடகத் தன்மையுடன் இருக்கின்றன. காடு சார்ந்த நுணுக்கமான தகவல்கள் குறைவாகவே உள்ளன. காட்சிகளால் காட்டை உணரவைத்த இயக்குநர், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் வேகம் காட்டியிருக்கலாம்.
ஒளிப்பதிவு
படத்தின் மிகப்பெரிய பலம் காட்டின் அழகையும், அதன் பயங்கரத்தையும் ஒருசேரக் காட்டிய ஒளிப்பதிவுதான். காட்டின் காட்சிகள் கண்களுக்கு விருந்து.
இசை
படத்தின் இசையமைப்பாளர் அம்ரிஷ், காட்டின் அமைதியையும் அதே சமயம் அதில் ஒளிந்திருக்கும் ஆபத்தையும் தனது இசையாலேயே கடத்தியிருக்கிறார்.
ரேட்டிங்-1.5/5
- அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான முயற்சி என்று தோன்றுகிறது.
- திருப்பூர் புரொடியூசர்ஸ் உடன் படம் பண்ண பல வருடங்களாக ஆசை இருந்தது.
நடிகர் ஆரியின் 4த் ப்ளோர் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சேரன், பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுவதாக தெரிவித்தார்.
இது குறித்து இயக்குநர் சேரன் பேசும் போது, "திருப்பூர் என்று சொன்னாலே எனக்கு நிறைய நினைவுகள் மனசுக்குள்ள வந்து போகும். "திருப்பூர் புரொடியூசர்ஸ்" உடன் படம் பண்ண வேண்டும் என்ற ஆசை எனக்கு பல வருடங்களாக இருந்தது. அந்த வகையில், இந்த படத்தை தயாரித்து, அதை ரிலீஸ் வரை கொண்டு வந்திருக்கிறீர்கள் என்பதே ஒரு பெரிய விஷயம். அதற்காக முதலில் நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன்.
இன்று பலர் சினிமாவை வேறு நோக்கங்களுக்காக அணுகுகிறார்கள். ஆனால் நீங்கள் முழுக்க முழுக்க சினிமாவை மட்டுமே நம்பி, அதையே நோக்கமாக கொண்டு வந்திருக்கிறீர்கள். அது எனக்கு சந்தோஷம். இந்தப் படத்தைப் பற்றி பேசும்போது, முதல் இம்ப்ரஷன் என்றால் அது நிச்சயமாக டைட்டில் டிசைன் தான். 4த் ஃப்ளோர் என்ற வார்த்தைக்கு இவ்வளவு கம்பீரமும், அழகும், அர்த்தமும் கொடுத்திருக்கிறார்கள்.
படத்தின் டைட்டிலே இந்தப் படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்குகிறது. படத்தின் மற்ற எல்லா அம்சங்கள் பார்த்தால், எல்லாமே ஒரு நம்பிக்கையை தருகிறது. இது இன்றைய தலைமுறைக்கும், அடுத்த தலைமுறைக்கும் பிடிக்கும் வகையிலான ஒரு முயற்சி என்று எனக்கு தோன்றுகிறது.
இந்தப் படக்குழுவில் இருக்கும் பலரை நான் தனிப்பட்ட முறையிலும் அறிவேன். ஆரி என் நண்பர், என் மாணவர், என் படத்தில் நடித்தவர். எந்த விதமான பின்புல ஆதரவுமில்லாமல், அவருடைய உழைப்பை மட்டுமே நம்பி இங்கு நிற்கும் மனிதர். அந்த வகையில், இந்தப் படம் அவருக்கு ஒரு அடையாளமாகவும், ஒரு நம்பிக்கையாகவும் அமைய வேண்டும், வாழ்த்துக்கள்," என்றார்.








