என் மலர்
ஆன்மிகம்
- நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார்.
- நாமகிரி தாயார் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்த கோலத்தில் காணப்படுகிறார்.
நாமக்கல் நகரில் குன்றின்மீது அமைந்துள்ளது. நரசிம்மர் குடைவரைக் கோவில். இக்கோவிலில் மூலவராக நரசிம்மரும், நாமகிரி தாயாரும் உள்ளனர். கட்டிடக் கலைக்கு பெயர்பெற்ற இந்த கோவில், 8-ம் நூற்றாண்டில் பாண்டிய மன்னரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
திருக்கோவிலின் மூலஸ்தானமும், அர்த்தமண்டபமும் குகைக்குள்ளேயே அமைந்துள்ளது சிறப்பாகும்.
நரசிம்மர், கர்ப்பக்கிரகத்தில் ஒரு காலை மடக்கி, மற்றொரு காலை தரையில் ஊன்றி நான்கு திருக்கரங்களுடன் காட்சி அளிக்கிறார். ஒரு கை ஊதா நிறத்துடன் காணப்படுகிறது. இது இரணிய கசிபுவின் ரத்த சாயல் என்று கூறப்படுகிறது. இங்கு லட்சுமி தேவி வழக்கம் போல நரசிம்மரின் மடியில் இல்லாமல், சுவாமியின் இதயத்தில் இருக்கிறார். சுவாமி உடன் சனகர், சனாதனர், சூரியர், சந்திரர் ஆகியோர் சாமரம் வீச, சிவபெருமானும், பிரம்ம தேவரும் சுவாமியை வணங்கும் கோலத்தில் உள்ளனர்.
நரசிம்மர் சன்னிதிக்கு நேர் எதிரே இரண்டு கைகளை கூப்பிய நிலையில் ஆஞ்சநேயர் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். பிரமாண்டமாக காட்சி அளிக்கும் ஆஞ்சநேயர் சிலைக்கு மேற்கூரை கிடையாது. இந்த ஆஞ்சநேயர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என இங்கு வரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
நாமகிரி தாயார் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி நரசிம்மரை தரிசித்தவாறு தவம் செய்த கோலத்தில் காணப்படுகிறார். தாயார், கவலைகளைப் போக்கும் கருணை கண்களுடன் அழகுற காட்சி அளிக்கிறார். இங்குள்ள நரசிம்ம தீர்த்தத்தில் நீராடி, தாயாரை பூஜித்தால் சகல செல்வங்களும் வந்துசேரும், தீவினைகள் அகலும், ஞானம், அறிவு கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஹஸ்த நட்சத்திரத்தில் நரசிம்மர், ரங்கநாதர், அனுமன் ஆகியோருக்கு தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. மார்கழி மாதம் வரும் அனுமன் ஜெயந்தி விழாவும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
- உற்சவர் கரிவரதராஜப் பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர்.
- மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் கொண்ட தலமான மாதவரத்தில் உள்ளது, கரிவரத ராஜப்பெருமாள் கோவில். நம் பாவங்களை போக்கி புண்ணியம் தரும் அற்புத தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
நாம் உணவு உண்ணும்போது 'ஜனார்த்தனன்' என்னும் திருநாமத்தையும், உறங்கச் செல்லும்போது 'பத்மநாபன்' என்னும் திருநாமத்தையும், காட்டு வழியில் செல்லும்போது 'நரசிம்மன்' திருநாமத்தையும், மலையேறும்போது 'ரகுநந்தன்' என்னும் திருநாமத்தையும் உச்சரிப்பது விசேஷம். ஆனால் மாதவன் என்கிற திருநாமத்தை எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் சொல்லலாம் என புராணங்கள் கூறுகின்றன.
அந்த உயர்ந்த திருநாமத்தையே பெயராகக் கொண்டுள்ளது 'மாதவபுரம்' என்னும் சிற்றூர். வியாசர் உள்ளிட்ட மாமுனிவர்கள் இங்கு தவம் செய்து வரம் பெற்ற தலம் என்பதால், 'மகாதவபுரம்' என்று பெயர் பெற்று, அதுவே மருவி 'மாதவரம்' என்றாயிற்று.
கோவில் 3 நிலை ராஜகோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. உற்சவர் கரிவரதராஜப் பெருமாள் என்றும், தாயார் கனகவல்லி என்றும் அழைக்கப்படுகின்றனர். மூலவர் வேங்கட வரதராஜன் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருமலையில் எழுந்தருளி உள்ள திருவேங்கடமுடையான் போல், இடதுகரம் கடிக ஹஸ்தம் கொண்ட கோலத்தில் இருப்பதால், வேங்கடவரதன்' எனவும் வழங்கப்படுகிறார்.
ஒரு சமயம் இந்த இறைவனுக்கு தேனாபிஷேகம் செய்யும்போது, அர்ச்சகர் சிறிது தேனை உத்தரணி (சிறு கரண்டி)யில் எடுத்து பெருமாளின் வாய் அருகே கொண்டு செல்ல, அதனை பெருமாள் ஏற்றுக் கொண்டாராம். இதனால் இவருக்கு 'தேன் உண்ட பெருமாள்' என்ற பெயரும் உண்டு.
சென்னை பாரிமுனையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள மாதவரத்தில் இக்கோவில் உள்ளது.
- திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.
- திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-5 (சனிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை காலை 7.54 மணி வரை பிறகு பிரதமை
நட்சத்திரம் : மூலம் பின்னிரவு 1.16 மணி வரை பிறகு பூராடம்
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை
திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். சகல விஷ்ணு ஆலயங்களிலும் பகற்பத்து உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் திருமொழி திருநாள் தொடக்கம் ஸ்ரீபெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபாலசுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.
திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி, ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல். ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-தேர்ச்சி
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-நன்மை
கடகம்-பெருமை
சிம்மம்-நட்பு
கன்னி-லாபம்
துலாம்- புகழ்
விருச்சிகம்-முயற்சி
தனுசு- உயர்வு
மகரம்-களிப்பு
கும்பம்-போட்டி
மீனம்-ஜெயம்
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும் நாள். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள்.
ரிஷபம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வரவைவிடச் செலவு கூடும். சகோதர வர்க்கத்தினரால் அமைதி குறையலாம். மனக்குழப்பம் அதிகரிக்கும்.
மிதுனம்
நூதனப் பொருள் சேர்க்கை ஏற்படும் நாள். வருமானம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். நாணயமும், நேர்மையும். கொண்ட நண்பர்களால் நம்பிக்கைகள் நடைபெறும்.
கடகம்
எதிர்பார்ப்புகள் எளிதில் நிறைவேறும் நாள். திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். கொள்கைப் பிடிப்பைத் தளர்த்திக் கொள்ள நேரிடும்.
சிம்மம்
நண்பர்களால் நன்மை ஏற்படும் நாள். வருமானம் திருப்தி தரும். மதிய நேரத்திற்கு மேல் மறக்கமுடியாத சம்பவமொன்று நடைபெறும்.
கன்னி
லாபகரமான நாள். செல்வாக்கு மேலோங்கும். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு. அதிகாரப் பதவியில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
தேவைகள் பூர்த்தியாகும் நாள். தொழில் வெற்றிநடை போடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
விருச்சிகம்
கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும் நாள். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும்.
தனுசு
கொடுக்கல் வாங்கல்கள் சீராகும் நாள். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. மறதி அதிகரிக்கும்.
மகரம்
வசதிகள் பெருகும் நாள். தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடக்கும். நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.
கும்பம்
முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பழைய கடன்களை வசூலிப்பதில் அக்கறை காட்டுவீர்கள்.
மீனம்
பல நாட்களாக எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும் நாள். நிர்வாகத் திறமை பளிச்சிடும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உறுதுணையாக இருப்பர்.
- ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம்.
- கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
அனுமன் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் பக்தர்கள் பலரும் விரதம் இருந்து ஆஞ்சநேயரை வழிபடுவார்கள்.
ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் அனுமன் இருப்பது நிச்சயம் என்பது ஐதீகம். அனுமன் இருக்கும் இடத்தில் வெற்றியைத் தவிர வேறொன்றும் இல்லை என்பது நம்பிக்கையாகும்.
அனுமன் ஜெயந்தியான இன்று விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து, ராம நாமம் சொல்லி வணங்கி, உபவாசம் தொடங்க வேண்டும். அருகில் இருக்கும் ராமர் அல்லது அனுமன் கோவிலுக்குச் சென்று, அனுமனுக்குத் துளசி மாலை, வெற்றிலை மாலை சாத்தி வழிபடலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.
அனுமன் ஜெயந்தி அன்று, அனுமனை வழிபடும்போது அவருக்கு பிடித்த நைவேத்தியப் பொருட்களை படைத்து வழிபட்டால் சிறப்பான பலன்களை பெறலாம்.
துளசி மாலை - ராமபிரான் கடாட்சம் பெற்று நற்கல்வி, செல்வம் பெறலாம்.
வெற்றிலை - விருப்பங்கள் நிறைவேறும்.
மல்லிகை - கெட்ட சக்திகள் விலகும்.
வடைமாலை - துன்பங்கள் நீங்கும்.
சந்தனம் - மங்களகரமான வாழ்க்கை அமையும்.
செந்தூரம் - அறிவும், ஆற்றலும் பெருகும்.
வீட்டில் அனுமன் படம் வைத்து அஷ்டோத்திரங்கள் சொல்லி பூஜை செய்து, வெண்ணெய், உளுந்துவடை, பொரி, பழம், அவல், கடலை, சர்க்கரை, தேன், பானகம், இளநீர் போன்றவைகளை நைவேத்தியம் செய்யலாம். ஸ்ரீராமஜெயம் என எழுதுவதும் நல்ல பலன்களை அளிக்கும்.
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், வாழ்க்கையில் நலம் பெருகும்.
- ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.
- ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.
ராமரின் தீவிர பக்தனான அனுமன் துணிச்சல், வலிமை, அறிவு, ஆரோக்கியம், புகழ், வீரம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக அமையப் பெற்றவர். மகாவிஷ்ணு ராமராக அவதாரம் எடுத்தபோது, மகாலட்சுமி சீதா தேவியாகவும், ஆதிசேஷன் லட்சுமணனாகவும் அவதரித்தனர். அதுபோல, ராமருக்கு உதவி செய்வதற்காக சிவபெருமான் அனுமனாக அவதரித்ததாக கூறப்படுகிறது. எனவே அனுமனை வழிபடுவதன் மூலம் சிவபெருமானையும், பெருமாளையும் சேர்த்து வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. அனுமன் அவதரித்த தினமாக கொண்டாடப்படும் அனுமன் ஜெயந்தி நாளான இன்று அனுமன் பற்றிய சில தகவல்களை பார்ப்போம்.
அனுமன் ஜெயந்தி மார்கழி மாதம் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மார்கழியில் மூல நட்சத்திரமும், அமாவாசையும் சேர்ந்து வராவிட்டால் அமாவாசையில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை கொண்டாடலாம். ஆனால் வட மாநிலங்களில் ஆஞ்சநேயர் ஜெயந்தி வைகாசி மாதத்தில் வளர்பிறையில் வரும் தசமி திதியன்று கொண்டாடப்படுகிறது.
ஆஞ்சநேயர் என்றால் பளிங்கு போல் களங்கமற்ற மனம் உடையவன் என்று பொருள். பொன் நிறமுடையவன், அஞ்சனை மைந்தன், குண்டலங்களால் ஒளிவிடும் முகத்தை உடையவன், கரங்கூப்பி வணங்கி கொண்டு இருப்பவன் என்ற பொருள்களும் உண்டு.
திருமாலின் வாகனமாக கருதப்படும் கருட பகவான் 'பெரிய திருவடி' என்று அழைக்கப்படுகிறார். அதுபோல ஆஞ்சநேயர் 'சிறிய திருவடி' என்று போற்றப்படுகிறார்.
ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம். இருப்பினும் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பாகும்.
ஆஞ்சநேயரை வழிபட்டால் குழந்தை பேறு, புகழ், கல்வி, செல்வம், வீரம், உடல் ஆரோக்கியம் போன்றவற்றை பெறலாம்.
ஆஞ்சநேயரை மனதில் நினைப்பவர்கள் இந்த பிறவியில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வர். மறு பிறவியில் ராமன் அருளால் முக்தியும் அடைவார்கள்.
ஆஞ்சநேயர் வாலில் நவக்கிரகங்கள் இருப்பதாக ஐதீகம். எனவே ஆஞ்சநேயரின் வாலுக்கு 48 நாட்கள் சந்தனம், குங்குமம் வைத்து வழிபட்டு வந்தால் நவக்கிரக தோஷங்கள் நீங்கி, நன்மைகள் பல அடையலாம்.
படிப்பில் பின்தங்கிய குழந்தைகளை 108 அல்லது 1008 முறை 'ஸ்ரீ ராமஜெயம்' எழுத வைத்து, அதை மாலையாக கோர்த்து ஆஞ்சநேயருக்கு அணிவித்தால், அந்த குழந்தைகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.
ஆஞ்சநேயரின் படத்தையும், ராமர் பட்டாபிஷேக படத்தையும் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.
ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுபவர்களுக்கு, வெண்ணெய் கரைந்து போவதுபோல துன்பங்கள் கரைந்து போகும்.
சனிக்கிழமைதோறும் அனுமன் கவசம் பாடி வழிபட்டால் எதிரிகளின் தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலை அணிவித்து, வெண்ணெய் சாற்றி, திராட்சை பழம் படைத்து, ஸ்ரீ ராம ஜெயம் எழுதி, அதை காகித மாலையாக அணிவித்து வழிபட்டால் வேண்டிய வரம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
- நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றல்.
- இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-4 (வெள்ளிக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : அமாவாசை (முழுவதும்)
நட்சத்திரம் : கேட்டை நள்ளிரவு 12.04 மணி வரை பிறகு மூலம்
யோகம் : மரண / அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி
சர்வ அமாவாசை, அனுமன் ஜெயந்தி. ராமேஸ்வரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் தலங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய நன்று. நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், வடைமாலை சாற்றல். தொண்டரடிப்பொடியாழ்வார், பெரிய நம்பி திருநட்சத்திர வைபவம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் திருநெடுந்தாண்டகம். கீழ்த் திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சனம், மாலை ஊஞ்சல் சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் கோவிலில் ஸ்ரீ சுந்தரவல்லித் தாயார் புறப்பாடு, திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீ பிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீ சப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.
கரூர் தான் தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீ ரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீ மரகதாம்பிகை தலங்களில் அபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமான் கிளி வாகன சேவை. இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன் தலங்களில் பால் அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருக்கண்ணபுரம் ஸ்ரீசௌரிராஜப்பெருமாள் ஸ்ரீ விபீஷ்ணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-பெருமை
மிதுனம்-இன்பம்
கடகம்-ஒற்றுமை
சிம்மம்-வாழ்வு
கன்னி-பரிசு
துலாம்- நன்மை
விருச்சிகம்-சலனம்
தனுசு- உழைப்பு
மகரம்-இன்பம்
கும்பம்-ஆர்வம்
மீனம்-கடமை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
பணிச்சுமை அதிகரிக்கும் நாள். மற்றவர்களை முழுமையாக நம்பிச் செயல்பட முடியாது. உத்தியோகத்தில் சக பணியாளர்களால் தொல்லை உண்டு.
ரிஷபம்
சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் வந்து சேரும் நாள். தட்டுப்பாடுகள் அகலும். வளர்ச்சிப் பாதைக்கு வித்திட்ட சிலரின் சந்திப்பு கிட்டும்.
மிதுனம்
பரபரப்பாகச் செயல்படும் நாள். நிச்சயித்த காரியமொன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு உண்டு.
கடகம்
சந்திக்கும் நண்பர்களால் சந்தோஷம் கூடும் நாள். நிலையான வருமானத்திற்கு வழியமைத்துக் கொள்வீர்கள். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு.
சிம்மம்
மனதில் உற்சாகம் குடிகொள்ளும் நாள். மதிப்பும், மரியாதையும் உயரும். அயல்நாட்டிலுள்ள நிறுவனங்களில் பணிபுரிய அழைப்புகள் வரலாம்.
கன்னி
வம்பு வழக்குகள் தீர்ந்து வளம் காணும் நாள். நேற்றைய சேமிப்பு இன்று செலவிற்கு கைகொடுக்கும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
யோகமான நாள். தள்ளிச் சென்ற காரியம் தானாக முடிவடையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்கள் செயல்பாடுகளைப் பாராட்டுவர்.
விருச்சிகம்
நட்பால் நல்ல காரியங்கள் நடைபெறும் நாள். போட்டிகளுக்கு மத்தியில் முன்னேற்றம் கூடும். பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
தனுசு
கனிவாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்ளும் நாள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கும் முயற்சி கைகூடும்.
மகரம்
பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். கடமையில் ஏற்பட்ட தொய்வு அகலும். லட்சியங்களை நிறைவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.
கும்பம்
கருத்து வேறுபாடுகள் அகலும் நாள். பிறருக்காகப் பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகை கைக்கு வரும். பொருளாதார நிலை உயரும்.
மீனம்
தன்னம்பிக்கையோடு பணிபுரிந்து தடைகளை அகற்றும் நாள். பெரிய மனிதர்களின் தொடர்பு கிட்டும். புது முயற்சிக்கு நண்பர்கள் உறுதுணை புரிவர்.
- இரவில் தூங்கும் முன் ஸ்ரீராமஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும்.
- ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.
மார்கழி மாதம் மூலம் நட்சத்திரத்தில் அவதரித்தவர் அனுமன். அவரது ஜெயந்தி நாள் நாளை கொண்டாடப்படுகிறது. கல்வி, செல்வம், வீரம் ஆகிய மூன்றையும் பெற அருள்தரும் தெய்வமாக ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அனுமன் ஜெயந்தி அன்று காலையிலேயே எழுந்து சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். அனுமனின் ஆசிரியர் சூரியன். அவரிடமே அனுமன் இலக்கணம் படித்து, சர்வ வியாகரண பண்டிதர் என்னும் பட்டம் பெற்றார். வியாகரணம் என்றால் இலக்கணம்.
காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது அனுமனின் குருவை நமது குருவாக மதித்து போற்றுவதாக அர்த்தம். ராம பக்தன் அனுமனின் ஜெயந்தி நாளில் ராமனின் புகழ் பரப்பும் பாடல்களை பாட வேண்டும்.
மாலையில் ஸ்ரீராம ஜெயம் சொல்ல வேண்டும். அவரது கோவிலுக்குச் சென்று வெண்ணெய், வெற்றிலை, வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். ஏழைக் குழந்தைகளுக்கு புத்தகம்-நோட்டு தானம், கல்வி உதவித்தொகை வழங்க வேண்டும்.
இரவில் தூங்கும் முன் ஸ்ரீராமஜெயம் என 108 முறை சொல்ல வேண்டும். பொதுவாக ஆஞ்சநேயர் பெருமாள் கோவில்களில் தனி சன்னதியிலும், சிவாலயங்களில் தூணிலும் அருள்பாலிப்பது வழக்கம்.
சொல் ஒன்று இருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் இருப்பது போல், ராமா என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம். இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப்பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம்.
அனுமன் அவதார நாளில் அருகில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று
ஓம் ஆஞ்சநேயாய வித்மகே
ராமதூதாய தீமகி
தன்னோ அனுமன் பிரசோதயாத்
என்ற அனுமன் காயத்ரி மந்திரம் சொல்லி வணங்கவேண்டும்.
அனுமனை வணங்குவதால், புத்தி, பலம், புகழ், குறிக்கோளை எட்டும் திறன், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்குவன்மை ஆகியவற்றைப் பெறலாம். ராமதூதர் அனுமனுக்கு துளசிமாலை சாத்துவதால் ராம கடாட்சம் பெற்று நல்ல கல்வி, செல்வம் பெறலாம்.
அசோகவனத்தில் சீதையைக் கண்டு ராமபிரானின் நிலையை அனுமன் எடுத்துரைத்தார். சந்தோஷமடைந்த சீதை அனுமனை ஆசீர்வதிக்க எண்ணி அருகில் வளர்ந்திருந்த வெற்றிலையைக் கிள்ளி தலையில் தூவி ஆசிர்வதித்தாள். இந்த இலை உனக்கு வெற்றியைத் தரட்டும் என்றாள்.
வெற்றிலையை காரணமாக்கி ஆசீர்வதித்தமையால் பக்தர்கள் தங்கள் செயல்பாடுகள் வெற்றி பெற வெற்றிலை மாலை சாத்துகின்றனர். திருமணங்களில் வெற்றிலை தாம்பூலம் கொடுப்பது, மணமக்களுக்கும், அவர்களை ஆசிர்வதிக்க வந்தவர்களுக்கும் வாழ்க்கை வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காகத் தான்.

நரசிம்மன், வராகம், கருடன் ஆகிய சக்திகள் அனுமனிடத்தில் ஒருங்கே அமைந்ததாலும், அனுமனுக்கு ஈஸ்வர அம்சம் உள்ளதாலும் எலுமிச்சம்பழ மாலை சாற்றி வழிபடலாம்.
ராமசேவைக்காக தன் உடம்பைப் புண்ணாக்கிக் கொண்டவர் அனுமன். போர்க்களத்தில் அவர் பட்ட காயம் கொஞ்ச நஞ்சமல்ல. அவரைக் கட்டிப் போட்டு தெருத்தெருவாக இழுத்துச் சென்றார்கள். காயத்தின் வேதனை குறைய குளிர்ந்த பொருள் பூசுவது இயல்பு தானே! அதனால் தான், அனுமனுக்கு வெண்ணெய் சாத்தும் வழக்கம் ஏற்பட்டது.
வெண்ணெய் போன்று வெள்ளை உள்ளமுள்ள பக்தர்களை அனுமனே தன்னுடன் சேர்த்து அருள் செய்கிறான் என்பதன் அடையாளமாக வெண்ணெய் சாத்தப்படுகிறது.
ஆஞ்சநேயர் அவல், சர்க்கரை, தேன், பானகம், நீர் மோர், கதலிப்பழம், கடலை முதலிய நிவேதனப் பொருட்களை அவர் விரும்பி உண்டு மகிழ்வார். ஸ்ரீராம நவமி உற்சவம் கொண்டாடும் இடங்களில் எல்லாம் ஆஞ்சநேயர் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து ரசித்து அனைவருக்கும் சகல சுபிட்சங்களையும் வாரி வழங்கிப் பேரருள் புரிகிறார்.
"ஆத்யந்த பிரபு'
விநாயகரும், அனுமனும் இணைந்த வடிவத்தை "ஆத்யந்த பிரபு' என்பர். ஆதி+அந்தம் என்பதையே இவ்வாறு சொல்கிறார்கள். "ஆதி' என்றால் "முதலாவது'. முதல் கடவுள் விநாயகர். "அந்தம்' என்றால் "முடிவு'. விநாயகரை வணங்கி ஒரு செயலைத் துவங்கினால், அனுமன் அதை வெற்றிகரமாக முடித்து வைப்பார். ஒருபுறம் விநாயகரின் தும்பிக்கையும், மறுபுறம் வானர முகமும் கொண்டது ஆத்யந்த பிரபு வடிவம். பிரம்மச்சர்ய விரதம் மேற்கொண்டுள்ளோர், இந்த இரண்டு பிரம்மச்சாரிகளும் இணைந்த வடிவத்தை தங்கள் இஷ்ட தெய்வமாகக் கொண்டுள்ளனர். அனுமன், சிவனின் அம்சம். விநாயகர் சக்தியிடமிருந்து (பார்வதி) உருவானவர்.
அனுமன் துதி
அஞ்சிலே ஒன்று பெற்றான்
அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக்
கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன்
எம்மை அளித்துக் காப்பான்.
பொருள்: வாயுவுக்கு பிறந்தவன் அனுமன். ஆகாயத்தில் பறந்து, கடல் தாண்டி இலங்கை சென்றான். பூமிதேவியின் மகளான சீதையைக் கண்டான். அவளை மீட்க இலங்கைக்கு நெருப்பு வைத்தான். அவன் தன்னையே நமக்கு தந்து பாதுகாப்பான்.
பஞ்சபூதங்களில் ஒன்றான வாயுவுக்கு பிறந்தான். வானில் (ஆகாயம்) பறந்தான். கடலை (நீர்) தாண்டினான். ஜனகர் தங்கக் கலப்பையால் யாக குண்டத்திற்கு பூமியை (மண்) தோண்டும் போது கிடைத்த சீதையைக் கண்டான். பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பை இலங்கைக்கு வைத்தான். ஆக, பஞ்சபூதங்களையும் அடக்கியாண்டவர் அனுமன். அவரை வணங்கினால் இந்தபஞ்ச பூதங்கள் நமக்கு நன்மையை மட்டுமே செய்யும்.
எப்போது வழிபடலாம்?
தமிழ் பஞ்சாங்கப்படி, இந்த ஆண்டு நாளை (வெள்ளிக்கிழமை) அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட உள்ளது. நாளை காலை 5.57 மணிக்கு தொடங்கி, நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 7.54 வரை அமாவாசை திதி உள்ளது.
ஆனால் சனிக்கிழமை அதிகாலை 12.05 மணிக்கு தான் மூலம் நட்சத்திரம் துவங்குகிறது. இதனால் திதியை அடிப்படையாக வைத்து அனுமன் ஜெயந்தியை கொண்டாடுபவர்கள் நாளையும், நட்சத்திரத்தை அடிப்படையாக வைத்து கொண்டாடுபவர்கள் நாளை மறுநாளும் அனுமன் ஜெயந்தியை கொண்டாடலாம்.
ஆனால் நாளை மறுநாள் காலை 7.54 மணி வரை மட்டுமே அமாவாசை திதி உள்ளதால், அதற்கு முன்பாக அனுமன் ஜெயந்தி வழிபாடுகளை செய்வது சிறப்பு.
- ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார்.
- தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
ஈரோடு மாவட்டம் எழுமாத்தூரில் பிரசித்தி பெற்ற கனக்கிரி மலை உள்ளது. இந்த மலை உச்சியில் கனகாசல குமரன் கோவில் அமைந்துள்ளது. ஒரு முறை அகத்திய முனிவரின் அறிவுரைப்படி, புலிப்பாணி சித்தர் பத்தரை மாற்று தங்கத்துக்காக இந்த மலையை குடைந்தார். அப்போது முருகப்பெருமானின் அருளால் தங்கம் கிடைத்தது. ஆனால், அது ஏழரை மாற்றுத் தங்கமாக அவருக்கு கிடைத்தது. இதன் காரணமாக இந்த ஊர் 'ஏழரைமாற்றூர்' என்று அழைக்கப்பட்டது. பின்பு ஏழரைமாத்தூர்' என்றாகி, தற்போது மருவி எழுமாத்தூர்' என்றானது.
இப்பகுதியில் இருந்த மக்கள் இந்த மலையின் சிறப்பையும், முருகப்பெருமானின் மகிமையும் அறிந்து, மலை உச்சியில் கோவில் எழுப்பினர். தங்கத்தை தந்த மலை என்பதால், இங்கு அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்கு 'கனகாசல குமரன்' என்று திருநாமம் சூட்டி வழிபட தொடங்கினர்.
ஆலயத்தில் கிருஷ்ணர், ருக்மணி சத்யபாமா சமேதராக அருள்பாலிக்கிறார். இக்கோவிலின் தல விருட்ச - மாக இலந்தை மரம் உள்ளது. இந்த இலந்தை மரத்தடியில் விநாயகப்பெருமான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அவருக்கு முன்பாக சிறிய மூசிகம் காணப்படுகிறது. விநாயகரின் அருகில் ராகு, கேது மற்றும் ஏழு கன்னியர்கள் உள்ளனர். இங்குள்ள விநாயகரை வணங்கிவிட்டு, கனகாசல குமரனை மனதார வழிபட்டு வந்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும், நல்ல வாழ்க்கை அமையும், பொன்னும் பொருளும் சேரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தொடர்ந்து ஐந்து செவ்வாய்க்கிழமைகள் இத்தலம் வந்து கனகாசல குமரனுக்கு விளக்கேற்றி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். மேலும் செவ்வாய்க்கிழமை தோறும் கோ பூஜை சிறப்புற நடைபெறுகிறது. அப்போது இந்தக் கோவிலைச் சேர்ந்த கன்றுக்குட்டிகள் தானாக மலையேறி வந்து, பூஜை செய்யும் காட்சியை பார்ப்பது வியப்பளிக்கிறது.
ஆலயத்தில் சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை, சிவராத்திரி போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
- திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
- ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மார்கழி-3 (வியாழக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : சதுர்த்தசி மறுநாள் விடியற்காலை 5.56 மணி வரை பிறகு அமாவாசை
நட்சத்திரம் : அனுஷம் இரவு 9.34 மணி வரை பிறகு கேட்டை
யோகம் : சித்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று மாத சிவராத்திரி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை
இன்று மாத சிவராத்திரி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ ஆதிநாதன் பொலிந்து நின்ற பிரான் (நின்ற கோலம்) ஸ்ரீ ஆதிநாதவல்லி கோவிலில் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மைசூர் மண்டபம் எழுந்தருளல். சுவாமி மலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். பெருஞ்சேரி ஸ்ரீ வாகீஸ்வரர் புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை.
ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ ராமர் மூலவருக்கும் திருமஞ்சன சேவை. ஸ்ரீபெரும்பு தூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஊக்கம்
ரிஷபம்-பெருமை
மிதுனம்-ஆதரவு
கடகம்-புகழ்
சிம்மம்-நிம்மதி
கன்னி-நன்மை
துலாம்- உற்சாகம்
விருச்சிகம்-பரிவு
தனுசு- சாந்தம்
மகரம்-போட்டி
கும்பம்-நற்சொல்
மீனம்-மேன்மை
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
வரவைக் காட்டிலும் செலவு கூடும் நாள். உறவினர் ஒருவரால் பிரச்சனை ஏற்படலாம். நேற்று செய்யாமல் விட்ட காரியமொன்றால் அவதிப்பட நேரிடும்.
ரிஷபம்
முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைக்கும் நாள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் தலைமைப் பொறுப்புகள் தேடி வரலாம்.
மிதுனம்
பயணங்களால் பலன் கிடைக்கும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட இடையூறுகள் அகலும். வெளிவட்டாரப் பழக்கம் விரிவடையும்.
கடகம்
இடமாற்றங்களால் இனிய மாற்றம் ஏற்படும் நாள். வரவைவிடச் செலவு அதிகரிக்கும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும்.
சிம்மம்
ஆதாயம் கிடைக்கும் நாள். அன்றாடப் பணிகள் தொடர அடுத்தவர் உதவி கிட்டும். தொலைபேசிவழித் தகவல் உத்தியோக முயற்சிக்கு வழிகாட்டும்.
கன்னி
எதிர்பார்த்தபடியே லாபம் கிடைக்கும் நாள். எதிர்கால நலன் கருதி எடுத்த முயற்சி கைகூடும். ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
துலாம்
மனக்குழப்பம் அகலும் நாள். பம்பரமாகச் சுழன்று பணிபுரிந்து பலரது பாராட்டுக்களைப் பெறுவீர்கள். தொழில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்
கூட்டு முயற்சியில் வெற்றி கிடைக்கும் நாள். பணவரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் உயரதிகாரிகளின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள்.
தனுசு
புதிய பாதை புலப்படும் நாள். பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெறும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மகரம்
கல்யாண முயற்சி கைகூடும் நாள். கடன்சுமை குறைய புதிய வழிபிறக்கும். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
கும்பம்
எதிரிகள் விலகும் நாள். லாபம் வரும் வழியைக் கண்டு கொள்வீர்கள். கௌரவம், அந்தஸ்து உயரும். கருத்து வேறுபாடுகள் அகலும்.
மீனம்
இனிமையான நாள். இல்லத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த ஊதிய உயர்வு உண்டு.






