தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

தமிழர்களை மது அடிமைகளாக மாற்றப் போகிறோமோ? மதுக்கடைகளை மூடுங்கள்! - அன்புமணி

* திமுக ஆட்சியில் மிகப்பெரிய அளவில் இளைஞர்கள் மதுவுக்கு அடிமையானார்கள்.

* மதுவைக் கட்டுப்படுத்தும் விவகாரத்தில் தவெகவின் ஆட்சியும் திமுக ஆட்சியின் நீட்சியாகவே திகழுமோ என்ற கவலை தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.

மேகதாது அணை விவகாரம் - முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை

* தமிழகத்துக்கு காவிரியில் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரத்து 500 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது.

* கர்நாடக விவசாயிகள், கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

முதலமைச்சர் விஜயின் கர்நாடகா பயணம் குறித்து விரைவில் அறிவிப்பு வௌியாகும்- அமைச்சர் நிர்மல் குமார்

* மேகதாது விவகாரத்தில் நேற்று அதிமுக தரப்பில் தேவையின்றி வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

* தமிழகத்தில் நீர் திறக்க மறுப்பதையே 40 ஆண்டு கால அரசியலாக கர்நாடா வைத்துள்ளது.

பிரதமர் மோடி குறித்து இழிவான ஏஐ சித்தரிப்புகள்.. மெட்டா இந்திய தலைமை அதிகாரி மீது வழக்குப்பதிவு

*மோடி வெளியிட்ட வீடியோ பேஸ்புக்கிலிருந்து நீக்கப்பட்டது

*தவறாக நீக்கப்பட்டதற்கு மெட்டா நிறுவனம் அண்மையில் மன்னிப்பு கோரியது.

இந்தியா-பிரேசில் அணிகள் மோதும் சர்வதேச கால்பந்து போட்டி

* தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும்.

* இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.

ஹமாஸ் அமைப்பை ஆயுதங்களை கைவிடச் செய்யும் ஒப்பந்தத்தை எட்டிய காசா அமைதி வாரியம் - டிரம்ப் அறிவிப்பு

*நேற்று காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.

* 'அமைதி வாரியம்' மூலம் இந்த முக்கிய முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் காமகோடியை 'கோமிய நிபுணர்' என விமர்சித்த பிரியங்கா காந்திக்கு 215 கல்வியாளர்கள் கண்டன கடிதம்

*மோடி அமைத்த தேர்வு முறைகேடுகளை ஆராயும் உயர்மட்ட குழுவில் ஒரு 'கோமிய நிபுணர்' கூட சேர்க்கப்பட்டுள்ளார்

*காய்ச்சலின் போது கோமியம் அருந்தி குணமடைந்ததாக பேசியிருந்தார்.

சாதிப் பாகுபாடு செய்யும் மனுஸ்மிருதி.. கல்வி முறையில் ஆர்எஸ்எஸ் ஆதிக்கம் - மாநிலங்களவையில் கார்கே பேச்சு நீக்கம்!

*பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கொண்டவர்களே நியமிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

*சி.பி. ராதாகிருஷணன் ஆர்எஸ்எஸ் பின்னணி கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன? - ADR அறிக்கை

*தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து அறிக்கை

*டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார்.

நாட்டின் எதிர்காலத்தை விட உங்கள் தோல் தான் பிரகாசமாக இருக்கிறது - பிரதமர் மோடியின் செல்பி வீடியோ குறித்து தீப்கே

*மோடி பிரதமர் வேலையை விட்டுவிட்டு முழுநேர சமூக ஊடக Influence-ராக மாறலாம்

*தண்டனைகளை அதிகரிப்பது மட்டும் முறைகேடுகளை தடுக்காது

மகாராஷ்டிராவில் இடிந்து விழுந்த 4 மாடி குடியிருப்பு கட்டிடம்.. 8 பேர் சடலங்களாக மீட்பு

*பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உட்பட சிலர் உள்ளேயே சிக்கியுள்ளனர்.

*இந்த கட்டிடம் பாதுகாப்பற்றது என பிவாண்டி நகராட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது

GOLD PRICE TODAY: ஏறுமுகத்தில் தங்கம் விலை - இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.13,255-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

ஆடி அமாவாசை - காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு கட்டுப்பாடு

* ஆகஸ்டு 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை பக்தர்கள் பாரம்பரிய சடங்குகள் மேற்கொள்ள முந்தைய ஆண்டுகள் போலவே கோவிலில் தங்க அனுமதிக்கப்படுகிறது.

* ஆகஸ்டு 13-ந் தேதி காலை குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பஸ்கள் இயக்கப்படும். 

இந்தியாவில் தங்கத்தின் தேவை 6 சதவீதம் சரிவு!

* தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்ததால், வாங்கப்பட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு புதிய சாதனையைப் படைத்துள்ளது. 

* தங்க நகைகளுக்கான தேவை 15 சதவீதம் குறைந்து 75.1 டன்னாக பதிவாகியுள்ளது. 

த.வெ.க. ஆட்சி அமைந்ததில் இருந்தே மின்சாரத்தில் தடங்கல்தான் - மு.க.ஸ்டாலின்

* முதலில் மின்வெட்டுப் பிரச்சனை, இப்போது மின்கட்டணத்தில் பிரச்சனை

* மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும்.

எழும்பூர் ரெயில் நிலைய மறுசீரமைப்பு பணி: தாம்பரம், மாம்பலத்திற்கு மாற்றப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

* மாற்றங்கள் வரும் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் ஆகஸ்ட் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* முன்கூட்டியே திட்டமிட்டு பயணிக்க ஏதுவாக இந்த தற்காலிக மாற்றங்களை கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.