

5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ள பிரேசில் கால்பந்து அணி முதல்முறையாக இந்தியா வந்து சர்வதேச நட்புறவு போட்டியில் விளையாடுகிறது.
இந்தியா-பிரேசில் அணிகள் இடையிலான வரலாற்று சிறப்பு மிக்க நட்புறவு கால்பந்து போட்டி கொல்கத்தாவில் உள்ள சால்ட்லேக் ஸ்டேடியத்தில் வருகிற அக்டோபர் 3-ந் தேதி நடக்கிறது. இதனை இந்திய கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது.
உலக தரவரிசையில் இந்தியா 138-வது இடத்திலும், பிரேசில் 5-வது இடத்திலும் உள்ளது. தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள ஒரு அணியுடன் இந்தியா மோத இருப்பது இதுவே முதல் முறையாகும்.
பிரேசில் அணியில் கேப்டன் மார்கினோஸ், கேஸ்மிரோ, மேத்யூஸ் குன்ஹா உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது.