நாட்டின் இளைய முதலமைச்சர் யார்?.. யார் மேல் அதிக குற்ற வழக்குகள்? சொத்து மதிப்பு என்ன? - ADR அறிக்கை

தமிழக முதல்வர் விஜய் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
ரேவந்த் ரெட்டி, விஜய், பகவந்த் மான்
ரேவந்த் ரெட்டி, விஜய், பகவந்த் மான்
Published on

இவற்றை தற்போது ஆளும் 31 முதலமைச்சர்களின் தேர்தல் பிரமாணப் பத்திரங்களை ஆய்வு செய்து ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ADR) மற்றும் நேஷனல் எலக்ஷன் வாட்ச் ஆகிய அமைப்புகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.

சொத்து மதிப்பு

அதன்படி, 31 முதலமைச்சர்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ.3,660 கோடி ஆகும். சராசரியாக ஒரு முதலமைச்சரின் சொத்து மதிப்பு ரூ.118.07 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

கர்நாடகா முதல்வர் டி.கே. சிவகுமார் ரூ.1,413 கோடி சொத்து மதிப்புடன் நாட்டின் மிகவும் பணக்கார முதல்வராக உள்ளார். ரூ.931.83 கோடியுடன் இரண்டாம் இடத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளார்.

ரூ.648.85 கோடி சொத்து மதிப்புடன் தமிழக முதல்வர் விஜய் மூன்றாம் இடத்தில் உள்ளார். அருணாச்சலப் பிரதேச முதல்வர் பெமா காண்டு ரூ.332.56 கோடியுடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா மிகக் குறைந்த அளவாக ரூ.55.24 லட்சம் மட்டுமே சொத்து உள்ளதாக அறிவித்துள்ளார்.

குற்றவியல் வழக்குகள்

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 31 முதல்வர்களில் 14 பேர் (45%) தங்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

இதில் 11 பேர் (35%) மீது தீவிரமான குற்ற வழக்குகள் உள்ளன. தெலுங்கானா முதல்வர் ஏ. ரேவந்த் ரெட்டி மீது அதிகபட்சமாக 89 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி மீது 29 வழக்குகளும், டி.கே. சிவகுமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோர் மீது தலா 19 வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

கல்வி, வயது, பாலினம்

நாட்டின் 31 முதலமைச்சர்களில் டெல்லி முதல்வர் ரேகா குப்தா மட்டுமே ஒரே பெண் முதலமைச்சராக பணியாற்றுகிறார்.

31 முதலமைச்சர்களில் 9 பேர் முதுகலை, 7 பேர் இளங்கலை, 6 பேர் தொழிற்கல்விப் பட்டம் மற்றும் 3 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.

31 பேரில் 17 முதலமைச்சர்கள் 51 முதல் 60 வயதுடையவர்கள். புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி (75 வயது) மிகவும் மூத்த முதலமைச்சராகவும், அருணாச்சலப் பிரதேசத்தின் பெமா கண்டு (44 வயது) மற்றும் மேகாலயாவின் கான்ராட் சங்மா (44 வயது) ஆகியோர் மிகவும் இளைய முதலமைச்சர்களாகவும் உள்ளனர்.

உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி மற்றும் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோர் 50 வயதுடன் 3ஆம் இடத்திலும், தமிழக முதல்வர் விஜய், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இருவரும் 52 வயதுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com