தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 12 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

தமிழ்நாடு செய்திப்பிரிவு

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்- த.வெ.க.வில் தேர்தல் பணிக்குழு அமைப்பு

* இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

* நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியர்கள் மீது நிதிச் சுமை: அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டச் செலவை அரசே முழுமையாக ஏற்க வேண்டும்- தினகரன்

* தேவையான பெயர்ப்பலகை, மின்விளக்கு, குடிநீர் உள்ளிட்ட தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளுக்கான செலவினங்களைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களின் தலையில் சுமத்துவது ஏற்புடையதல்ல.

* அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள நிர்வாகச் சிக்கல்களையும் அதிகாரக் குளறுபடிகளையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இடைத்தேர்தலில் திமுக தோல்வி அடைவது உறுதி - அமைச்சர் நிர்மல்குமார்

* மு.க.ஸ்டாலின் மிகப்பெரிய தியாகி என்று திமுக சித்தரிக்க முயன்றாலும் மக்கள் அதை நம்பமாட்டார்கள்.

* திமுக நடத்தும் போராட்டத்தை பார்த்து மக்கள் சிரித்தவாறே கடந்து செல்வர்.

மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை

* சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

* தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.

அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்களும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்!- அன்புமணி ராமதாஸ்

* அரசு நிர்வாகத்தில் ஊழலை ஒழிப்பதற்காக இந்தியாவின் பல மாநிலங்களில் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த சில பத்தாண்டுகளில் மேற்கொள்ளப்பட்டன.

* சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அரசு ஊழியர்கள் தவறினால் அது விதிமீறலாகக் கருதப்படும்; அது அவர்களின் பதவி உயர்வை பாதிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

முக்கியமான பைப்லைனை மூடிய சவுதி அரேபியா: கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும் அபாயம்..!

* ஈராக்கில் இருந்து டிரோன்கன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றச்சாட்டு

* முன்னெச்சரிக்கை காரணமாக பைப்லைனை மூடியதாக சொல்கிறது சவுதி அரேபியா

GOLD PRICE TODAY: சற்றே உயர்ந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ரூ.14,170-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்: சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

 * தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 16-ந்தேதி இரவு புறப்பட்டு செல்லும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 5 மணிக்கு மதுரை சென்றடையும்.

* மதுரையில் இருந்து வருகிற 17-ந்தேதி இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில், மறுநாள் காலை 3.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

திருப்பதி திருக்குடைகள் ஊர்வலம் - சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

* திருக்குடை ஊர்வலம் வால்டாக்ஸ் சாலையை கடக்கும் வரை, காலை 8 மணி முதல் மின்ட் சாலை மற்றும் அதன் இணைப்பு சாலைகளில் வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. 

* ஊர்வலம் ஏ.பி. சாலை வரும்போது, பெரம்பூர் பேரக்ஸ் சாலை சந்திப்பில் இருந்து சூளை நெடுஞ்சாலை நோக்கி செல்ல அனுமதி இல்லை.

SCROLL FOR NEXT