

ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பாக ஈரான்- அமெரிக்கா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், ஈரானுக்கு ஆதரவாக ஏமனில் உள்ள கிளர்ச்சிக்குழுவான ஹவுதி, செங்கடலில் செல்லும் சரக்கு மற்றும் எண்ணெய் கப்பல்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த சில நாட்களாக சவுதி அரேபியா எல்லையில், எல்லைத் தாண்டி தாக்குதல் நடத்திய ஹவுதி, முக்கியமான ஜலசந்தியான பாப் அல்-மாண்டெப்பில் இருந்து சுமார் 80 கி.மீ. தொலைவில் உள்ள மோகா என்ற துறைமுகத்தை கைப்பற்றியுள்ளது.
இதனால் பாப் அல்-மாண்டெப் ஜலசந்தி வழியாக செல்லும் கடல் போக்குவரத்துக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது. ஈரான் உடனனா போர் காரணமாக எண்ணெய் போக்குவரத்திற்காக சவுதி அரேபியா, ஹார்முஸ் ஜலசந்தியை பயன்படுத்துவதற்காக பாப் அல்-மாண்டெப் ஜலசந்தி வழியாக எண்ணெய் ஏற்றுமதி மேற்கொள்ள மிகப்பெரிய அளவிலான கிழக்கு-மேற்கு பைப்லைனை கடந்த 1980-ல் கட்டியது.
இதன் பைப்லைன் மூலம் கச்சா எண்ணெய் பாப் அல்-மாண்டெப் ஜலசந்திக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து சவுதி அரேபியா ஏற்றுமதி செய்து வந்தது.
ஹவுதி கிளர்ச்சிக்குழு பாப் அல்-மாண்டெப் ஜலசந்தியை நெருங்கி வரும் நிலையில், பைப்லைனை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியது. அத்துடன் ஈராக்கில் இருந்து டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவுதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன், முன்னெச்சரிக்கை பாதுகாப்பிற்காக இந்த பைப்லைனை மூடுவதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து வெகுவாக குறைந்துள்ள நிலையில், தற்போது சவுதி அரேபியாவும் முக்கிய பைப்லைனை மூடியதால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இதற்கிடையே, ஈராக்கில் இருந்து டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது என சவுதி அரேபியா கூறியுள்ள நிலையில், ஈராக் பிரதமர் அலி அல்-ஜைதி, இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஜூலை மாதம் ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழுக்கள் மீது சவுதி அரேபியா மற்றும் அமெரிக்கா இணைந்து தாக்குதல் நடத்தியது. சவுதி அரேபியாவில் உள்ள எண்ணெய் வளங்கள் மீது நாங்கள்தான் தாக்குதல் நடத்தினோம் என்று ஹவுதி கூறியது. ஆனால், பிராந்திய அதிகாரிகள் ஹவுதி உதவியுடன் ஈராக்கில் உள்ள போராட்டக்குழு தாக்குதலை நடத்தியது என்றனர்.
ஹவுதியின் முன்னேற்றம், அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈரானுக்கு புதிய பாதையை திறந்து விடுவது போல் உள்ளதாக வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.