மறைந்த சாலமன் பாப்பையாவுக்கு அரசு மரியாதை

90 வயதான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.
சாலமன் பாப்பையா
சாலமன் பாப்பையா
Published on
Summary

தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.

பட்டிமன்ற நடுவராக மக்கள் மனங்களை வென்றவர் சாலமன் பாப்பையா. கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய இவர் தமிழ் அறிஞரும் ஆவார். 90 வயதான சாலமன் பாப்பையா வயது முதுமை காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார்.

இறுதிசடங்கு

சாலமன் பாப்பையா காலமானார் என்ற செய்தி அறிந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொதுமக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞான ஒளிவுபுரம் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனிடையே சாலமன் பாப்பையாவின் இறுதிசடங்கு இன்று பகல் 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

அரசு மரியாதை

இந்த நிலையில், தமிழறிஞரும் பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அமைச்சர் நிர்மல்குமார் என அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் நிர்மல்குமார் மேலும் கூறுகையில், தமிழஞர்கள் உள்ளிட்ட பலரின் கோரிக்கையை ஏற்று சாலமன் பாப்பையா உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com