மதுரை மாநாட்டிற்கு செல்ல பட்டாசு வெடித்த போது... ... TVK Maanadu Live: தவெக மாநாடு- தொண்டர்களால் குலுங்கிய மதுரை... உச்சக்கட்ட பரபரப்பில் மாநாட்டு திடல்
மதுரை மாநாட்டிற்கு செல்ல பட்டாசு வெடித்த போது த.வெ.க தொண்டர் காயம்
தமிழக வெற்றிக்கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் இன்று மாலை நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஓடந்துறை பகுதியில் இருந்து இளைஞர்கள் கூட்டமாக பஸ்சில் பயணித்தனர்.
அவர்கள் மேட்டுப்பாளையம்-அன்னூர் சாலையில் உள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் உணவருந்த பஸ்சை நிறுத்தினர். பின்னர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், அங்கு ஆர்வம் மிகுதியில் பட்டாசுகளை வைத்து வெடிக்க செய்தனர்.
அப்போது ஒருவர் பட்டாசை பற்ற வைத்தார். அதனை ஓடந்துறையை சேர்ந்த சங்கர் என்ற வாலிபர் அந்த வெடியை கையில் மேலே தூக்கி வீசி விளையாடியதாக தெரிகிறது.
அந்த சமயம் கையில் வைத்திருந்த வெடி எதிர்பாராதவிதமாக வெடித்தது. இதில் சங்கருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் அவர் அலறி துடித்தார்.
பின்னர் அவரை நண்பர்கள் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.