அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல்... ... அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல்- நீதிபதி உத்தரவு
அமைச்சர் செந்தில் பாலாஜி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அனைத்து சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கைது குறித்து, செந்தில் பாலாஜி சகோதரருக்கும், மனைவிக்கும் போன் மூலம் தகவல் தெரிவிக்க முயற்சிக்கப்பட்டது. நீதிமன்ற காவல் விதிக்கப்பட்ட நிலையில் அதை நிராகரிக்க கோர முடியாது. கைதுக்கான காரணங்கள் சொல்லப்பட்டன. கைது செய்யப்படுவோம் என தெரிந்தே செந்தில் பாலாஜி மெமோவை பெற மறுத்துவிட்டார் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்தது.
Update: 2023-06-14 13:10 GMT