விஜய்யின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை அரசு... ... நடிகர் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல்: பிரபலங்கள் வாழ்த்து - லைவ் அப்டேட்ஸ்
விஜய்யின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கினர். மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், மக்கள் இயக்க கொடியேற்றுதல், மக்கள் இயக்க பெயர் பலகை திறப்பு, மரம் நடுதல், கோவில்களில் சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து முதியோர் இல்லங்களில் அன்னதானம் உள்ளிட்ட வையும் நெல்லை மாவட்டத்தில் உள்ள 5 சட்ட மன்ற தொகுதிகளிலும் நடைபெற்றது.
Update: 2023-06-22 09:42 GMT