இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை... ... தேர்தல் முடிவுகள்... குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் 12ம் தேதி பதவியேற்கிறார்

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க உள்ளது. ஆட்சியமைக்க 35 இடங்கள் தேவை என்ற நிலையில், மாலை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 7 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகி உள்ளது.

ஆளும் பாஜக தோல்வியை தழுவி உள்ளது. இதையடுத்து முதல்வர் ஜெய்ராம் தாக்கூர், ராஜினாமா செய்தார். ஆளுநரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். 

Update: 2022-12-08 11:37 GMT

Linked news