ராஞ்சி, ஜார்க்கண்ட்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத்... ... ஜார்க்கண்ட் சட்டசபை முதற்கட்ட தேர்தல், வயநாடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு- லைவ் அப்டேட்ஸ்

ராஞ்சி, ஜார்க்கண்ட்: மத்திய அமைச்சர் சஞ்சய் சேத் கூறுகையில், "இந்த 5 ஆண்டுகளில் ஜார்ககண்ட் மக்கள் ஊழலால் சலிப்படைந்துள்ளனர். மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பாஜக இங்கு வெற்றி பெறும். ஜார்க்கண்ட் தர்மசாலாவா?, அகதிகள் மையமா? வங்கதேசத்தில் இருந்து ஊடுருவல்காரர்கள் இங்கு அழைக்கப்படுகிறார்கள்.

நவம்பர் 24 முதல் வங்கதேச ஊடுருவல்காரர்கள் எல்லையில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என பாஜக தீர்மானம் நிறைவேற்றும். நேற்று இங்கு சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா 'இந்துக்கள் கிளர்ச்சியாளர்கள்' என்று கூறினார். வாக்கு வங்கிக்காக இந்து மதத்தை தவறாகப் பயன்படுத்துவது அவர்களின் பாரம்பரியம்" என்றார்.

Update: 2024-11-13 03:41 GMT

Linked news