Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 14 அக்டோபர் 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Live news

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வுகள் அட்டவணை இன்று வெளியீடு

* கடந்த கல்வியாண்டுக்கான தேர்வுகள் சட்டசபை பொதுத்தேர்தலை கருத்தில் கொண்டு தேர்வு முன்கூட்டியே அட்டவணை வெளியிட்டு, நடத்தியும் முடிக்கப்பட்டது.

* பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை எப்போது வெளியாகும்? என்ற எதிர்பார்ப்பில் மாணவ-மாணவிகளும், ஆசிரியர்களும் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

தீபாவளி பண்டிகைக்கு 95 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே திட்டம்

* கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரெயில்வேயில் இருந்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு 85 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.

* சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடையில்லை... ஆனால்!

* 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்ல இந்து சமய அறநிலையத்துறை தடை விதித்தது.

* செல்போனை பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்களை உணர்ந்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஆலோசித்து வந்தனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை: இன்று முதல் 23-ந்தேதி வரை செயல்படும்

* அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டம் வியாபார பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

* உணவு தானிய அங்காடியில் 1.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை இன்று முதல் செயல்படுகிறது.

GOLD PRICE TODAY: தங்கம் வாங்குவோருக்கு குட் நியூஸ் - அதிரடியாக குறைந்த தங்கம் விலை

* சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 குறைந்து ரூ.1,08,720-க்கு விற்பனையானது.

* வெள்ளி விலையில் 11-வது நாளாக மாற்றம் இல்லை.

கிரீஸ் நாட்டு அமெரிக்க தூதர் கிம்பர்லி கில்ஃபாயில் அதிரடி பணிநீக்கம்!

* நிதி முறைகேடு புகாரால் கிரீஸ் தூதர் கிம்பர்லி கில்ஃபாயில் டிரம்ப் அரசால் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

* ரூ.94 லட்சம் கடனை அடைக்க ஆதரவாளரிடம் வயர் டிரான்ஸ்ஃபர் மூலம் பணம் கோரியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

பாகிஸ்தானின் 22% தண்ணீர் பஞ்சத்திற்கு இந்தியா காரணமல்ல - பாக் அரசின் அறிக்கையே அம்பலம்!

* பாகிஸ்தானில் ரபி பருவத்தில் 22% தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என IRSA எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இந்தியா தண்ணீரை தடுக்கவில்லை என்ற நிலையிலும் பாகிஸ்தான் போர் மிரட்டல் நாடகம் ஆடுகிறது.

சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள நீதிபதிகளின் பணி சிறக்கட்டும்! - முதலமைச்சர் வாழ்த்து

* ஜனாதிபதி 2 நீதிபதிகளையும் ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

* கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

பீகார் படகு விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குடியரசுத் தலைவர் முர்மு இரங்கல்!

* வைஷாலி கங்கை நதியில் படகு கவிழ்ந்து 8 குழந்தைகள் உட்பட 13 பேர் பலி. உயிரிழந்தவர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க பீகார் அரசு அறிவிப்பு.

* பலியானவர்கள் குடும்பத்திற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார்.

ஜெம் வீரமணி வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனு வாபஸ்- வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்

* வழக்கு தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்களை ஊடகங்கள் மற்றும் சமூகவலைதளங்கள் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

* குறுக்கிட்ட தலைமை நீதிபதி, இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் என்ன? என கேள்வி எழுப்பினார்.

அடுத்த வாரம் மும்பை வருகிறார் அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலாளர் மார்கோ ரூபியோ!

* மூலோபாய கூட்டாண்மை, எரிசக்தி, தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்திய அதிகாரிகளுடன் பேசுகிறார்.

* ரூபியோ வருகைக்கு முன் அமெரிக்க பாதுகாப்பு கவுன்சில் குழு டிரஸ்ட் தொழில்நுட்ப பேச்சு நடத்தும்.

டெல்லியில் சிஜேபி நிர்வாகிகள் கைது - மு.க.ஸ்டாலின் கண்டனம்

* எத்தனை இளைஞர்களின் குரல்களை பாஜகவால் ஒடுக்க முடியும்.

* எவ்வளவு இளைஞர்களை சிறையில் அடைக்கிறார்களோ அவ்வளவு மக்கள் அவர்களுக்கு ஆதரவாக போராடுவார்கள்.

மத்திய மந்திரிசபை விரைவில் மாற்றம்- புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்க பிரதமர் மோடி முடிவு

* தற்போதைய நிலையில் மத்திய மந்திரி சபையில் 12 பதவி இடங்கள் காலியாக உள்ளன.

* பல மந்திரிகள் கூடுதல் பொறுப்புகளையும் கவனித்து வருகிறார்கள்.

மின் கொள்முதலில் ஊழல் குற்றச்சாட்டு என்பது அரைவேக்காட்டுத்தனம்..!- அமைச்சர் நிர்மல் குமார்

* தினமும் ரூ.7 கோடிக்கு மின் கொள்முதல் செய்யவில்லை என்றால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படும்.

* கூடுதல் மின் தேவை ஏற்படும்போது அதை மட்டுமே கொள்முதல் செய்யும் வகையில் தான் டெண்டர்.

சந்திரபாபு நாயுடுவிடம் மட்டும் பேசும் முதலமைச்சர் காவிரி விவகாரத்தில் மட்டும் கள்ள மவுனம் காப்பது ஏன்?- தினகரன் கேள்வி

* நீலாங்கரையில் உள்ள தனது இல்லத்திற்கே நேரடியாக வந்து விருந்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி அவர்களிடம் காவிரி குறித்து ஒரு வார்த்தையாவது பேசினாரா?

* காவிரி நமது உயிர்நாடி என்று சட்டமன்றத்தில் பேசிய வசனமெல்லாம் வெறும் Reel's -க்காக மட்டுமா ? என விவசாய பெருமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

2027-ம் கல்வியாண்டிற்கான 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

* 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு மே 20ம் தேதி வெளியிடப்படும்.

* 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ம் தேதி வெளியிடப்படும்.

1 யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்: தவெக அரசின் வெற்றி ஊழல் கொள்முதல் திட்டம் - இபிஎஸ்

* செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது தவெக அரசு

* தவெக அரசின் இந்த மின் கொள்முதல் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மின்சார வாரியம் தனியார் முதலாளிகளுக்கு தாராளம் காட்டுவதை கைவிட வேண்டும்!- பெ.சண்முகம் வலியுறுத்தல்

* ஏற்கனவே, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு என்று கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழக மக்கள் மீது மீண்டும் ஒரு சுமையை ஏற்றுவதற்கு வழிவகுப்பதாகும்.

* தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையும் வகையில் தொலைநோக்கு திட்டம் உருவாக்கப்பட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது.

சி.வி.சண்முகம் வீட்டில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று மீண்டும் ஆலோசனை

* அ.தி.மு.க. அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று மீண்டும் ஒன்றுகூடி ஆலோசனை நடத்தினார்கள்.

* தங்கள் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை சென்னைக்கு வரவழைத்து அவர்களிடம் ஆதரவு கடிதம் பெறும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

21-ம் நூற்றாண்டின் சிறந்த பந்து வீச்சாளர்களில் பும்ராவுக்கு 3-வது இடம்

* இங்கிலாந்து முன்னாள் வேகப்பந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-வது இடத்தில் உள்ளார்.

* ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத், கம்மின்ஸ் ஆகியோர் 4-வது மற்றும் 5-வது இடங்களில் உள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு பிறகு ரோபோ உதவியுடன் எழுந்து நடந்த இளம்பெண்!

* 2014 கார் விபத்தில் முடங்கிய நியூயார்க் இளம்பெண் ஜெசிகா.

* 10 ஆண்டுகளுக்கு பிறகு ரோபோட்டிக் எக்சோஸ்கெலிட்டன் சூட்டில் எழுந்து நடந்தார்.வைரலான உணர்ச்சிப்பூர்வ வீடியோவைக் கண்டு நெட்டிசன்கள் நெகிழ்ந்தனர்.

சென்னையில் தடையற்ற குடிநீர் விநியோகம்: ரூ.3,108 கோடியில் பிரதான சுற்றுக்குழாய் திட்டத்திற்கு முதலமைச்சர் விஜய் அடிக்கல்...

*சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நிலவும் குடிநீர் தேவையை முழுமையாக நிவர்த்தி செய்யும் வகையிலும், கோடைகாலங்களிலும் தடையின்றி குடிநீர் வழங்கும் நோக்கத்துடனும் செயல்படுத்தப்பட உள்ள பிரதான சுற்றுக்குழாய் திட்டத்திற்கு சோழிங்கநல்லூரில் நடைபெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அடிக்கல் நாட்டினார்.

மின் கட்டணம் உயர்வது குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்...

*மார்க்கெட் விலையைவிட அதிக விலைக்கு வாங்கினால் நீங்கள் கேட்கலாம் என்றும் தமிழகத்தில் மின் கட்டணம் உயராது என்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

* மழைப் பொழிவு இல்லாததும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் மின்சாரத்தின் தேவை தாறுமாறாக உயர்ந்துள்ளது.

X