சென்னை ஐகோர்ட்டில் பணியாற்றும் வாய்ப்பை பெற்றுள்ள நீதிபதிகளின் பணி சிறக்கட்டும்! - முதலமைச்சர் வாழ்த்து

ஜனாதிபதி லிங்கேஷ்வரன், கார்த்திகேயன் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார்.
முதலமைச்சர் விஜய் - லிங்கேஷ்வரன் - கார்த்திகேயன்
Published on: 
Summary

சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை ஐகோர்ட்டில் மொத்த நீதிபதிகள் ஒதுக்கீடு 75 ஆகும். தற்போது 65 நீதிபதிகள் உள்ளனர். 10 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன. மாவட்ட நீதிபதிகள் டி.லிங்கேஷ்வரன், பி.கார்த்திகேயன் ஆகியோரை ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்க சென்னை ஐகோர்ட்டு பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பரிசீலித்து, 2 பேரையும் நீதிபதிகளாக நியமிக்க ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்தது.

இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, இந்த 2 நீதிபதிகளையும் ஐகோர்ட்டு நீதிபதிகளாக நியமித்து உத்தரவிட்டுள்ளார். இதன்படி இவர்கள் இருவரும் விரைவில் ஐகோர்ட்டு நீதிபதிகளாக பதவி ஏற்க உள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதிகளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாண்புமிகு கூடுதல் நீதிபதிகளாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், பாலதண்டாயுதம் கார்த்திகேயன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்!

நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் பாதுகாக்கும் வகையில், நீதித்துறையின் மிக உயர்ந்த மரபையும், கண்ணியத்தையும் கொண்ட சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ள தங்களின் பணி சிறக்கட்டும்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com