தீபாவளி பண்டிகைக்கு 95 சிறப்பு ரெயில்கள்- தெற்கு ரெயில்வே திட்டம்

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரெயில்வேயில் இருந்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு 85 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன.
ரெயில்கள்
Published on: 
Summary

தீபாவளி பண்டிகைக்கு 95 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு 85 ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக ரெயில்கள் இயக்கப்படும். பயணிகளின் தேவையைப் பொறுத்து கூடுதல் ரெயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு தீபாவளிக்குச் சொந்த ஊர் செல்வோருக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு கடந்த மாதம் 6-ந்தேதி தொடங்கி 9-ந்தேதி வரை நடைபெற்றது. ஏராளமானோர் ஒரே நேரத்தில் டிக்கெட் முன்பதிவு செய்ததால், ஒருசில நிமிடங்களிலேயே அனைத்து ரெயில்களிலும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன. பலரும் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

சிறப்பு ரெயில்கள்

இவர்கள் தீபாவளி சிறப்பு ரெயில் அறிவிப்புக்காக காத்திருக்கின்றனர். எனவே, பயணிகளின் வசதிக்காக நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு 95 சிறப்பு ரெயில்களை இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு தெற்கு ரெயில்வேயில் இருந்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு 85 சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. நடப்பாண்டு அதைவிட சற்று கூடுதலாக 95 ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

பரிந்துரை

ஆனால் இது பயணிகளின் தேவையை பொறுத்து கடைசி நேரத்தில் மாறுபடும். இதேபோல், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 20 சிறப்பு ரெயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் ரெயில்களில் டிக்கெட்டுகள் உடனடியாக விற்றுத் தீர்ந்துவிடுகிறது. எனவே, 20 ரெயில்கள் தவிர சென்னையில் இருந்து நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்குக் கூடுதல் சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும். தீபாவளி சிறப்பு ரெயில்கள் இயக்குவது குறித்து விரைவில் ரெயில்வே வாரியத்திற்கு பரிந்துரை அனுப்ப இருக்கிறோம்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com