பிரதமர் மோடி பிறந்தநாள்: மு.க.ஸ்டாலின், அன்புமணி, அண்ணாமலை வாழ்த்து

நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
MK Stalin - Anbumani - Annamalai
Published on
Summary

பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் பல மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 76-ஆம் பிறந்தநாளில் அவருக்கு எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ்ந்து பொதுவாழ்க்கையில் புதிய சாதனைகளைப் படைக்கவும், நாட்டிற்கு சேவையாற்றவும் வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள்.

நாட்டிற்கான அவரது அயராத சேவை, தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமைத்துவம் மற்றும் சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் மேம்படுத்துவதற்கான அவரது இடைவிடாத உத்வேகம் ஆகியவை லட்சக்கணக்கானோருக்குத் தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. அவரது நல்ல ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com