பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

பிரதமர் மோடி நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.
CM Vijay - PM Modi
Published on
Summary

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள் என்று முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, துணைக்குடியரசு தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, மற்றும் பல மாநில முதல் மந்திரிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வரும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாங்கள் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் நீடுழி வாழ உளமார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com