தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

தமிழ்நாட்டின் சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு- மு.க.ஸ்டாலின் கண்டனம்

* எதிர்கால தமிழ்நாட்டில் தொண்டாற்ற இருந்த 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழந்திருக்கிறோம்.

* லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப்பிரச்சினை இது.

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு-வணிக வளாக இடிபாடுகளில் தீவிர மீட்புப் பணி!...

*நேற்று பிற்பகல் குமாமோட்டோ பகுதியில் ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவு செய்யப்பட்டது.

*கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

காமன்வெல்த் போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங், ஹர்ஜிந்தர் கவுருக்கு குடியரசுத் தலைவர் முர்மு வாழ்த்து!

*குல்வீர் சிங்கின் இந்த வெள்ளிப் பதக்கம் காமன்வெல்த் போட்டிகளின் இந்தப் பிரிவில் இந்தியாவின் முதல் பதக்கமாகப் பதிவாகியுள்ளது.

*குத்துச்சண்டை போட்டிகளில் மூன்று இந்திய வீரர்கள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இந்தியாவிற்கு மேலும் 3 பதக்கங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

தி.நகர் தணிகாசலம் சாலையில் உள்ள மதுபான நிறுவனம் தொடர்புடைய இடத்தில் சோதனை நடைபெற்று வருகிறது.

திமுக எம்பி டி.ஆர்.பாலுவுக்குச் சொந்தமான மதுபான ஆலையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

மதுக்கடைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது மதுப் புழக்கத்தை மேலும் அதிகரிக்கவே செய்யும்..!- அன்புமணி

* மீண்டும் பழைய நடைமுறைக்கே செல்வது சீர்திருத்தம் அல்ல... மாறாக சீர்கேடாகத்தான் கருதப்படும்.

* தனியார் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டால் தமிழ்நாட்டில் மது வெள்ளமாக பாயும்.

இயற்கையோடு இயைந்த கலாச்சாரமே புலிகள் பாதுகாப்பிற்கு காரணம்- பிரதமர் மோடி

* உலகப் புலி எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 70% இந்தியாவில்தான் உள்ளது.

* மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதிலும் இந்தியா தனது உறுதிப்பாட்டைத் தொடர்கிறது.

கொளத்தூர் தொகுதி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி தொடங்கியது

* மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.

* ஒவ்வொரு நாளும் 2 வாக்குச்சாவடிகளுடைய எந்திரங்கள் ஆய்வு செய்யப்படும்.

GOLD PRICE TODAY: தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.13,155-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 16 சதவீதம் குறைவு

* நாடு முழுவதும் மழைப் பற்றாக்குறை 15.5 சதவீதமாக குறைந்துள்ளது.

* அந்தமான்-நிக்கோபார் தீவுகளில் 6 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. 

கரூரில் செந்தில் பாலாஜி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

* செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை 7 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

* செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை.

மும்பை பிரபல கிளப்புகளின் உரிமங்கள் ரத்து: சுகாதாரக் குறைபாடு காரணமாக உணவு பாதுகாப்புத்துறை அதிரடி நடவடிக்கை!...

*உணவுகள் தயாரிக்கப்படும் சமையலறைப் பகுதிகளில் கரப்பான் பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகளின் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.

*பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி கிளப்புகளிலேயே இத்தகைய சுகாதாரச் சீர்கேடுகள் கண்டறியப்பட்டது பொதுமக்கள் மற்றும் உறுப்பினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க செனட் சபையில் ரஷியா மீதான தடைகள் மசோதா: இந்தியா, சீனாவிற்கு 100% வரி விதிக்கும் அபாயம்!...

*அமெரிக்க செனட் சபையில் (Senate) ரஷியா மற்றும் ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்கும் புதிய சட்ட மசோதா முதற்கட்ட வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

* ரஷிய எண்ணெயைக் கள்ளத்தனமாகக் கடத்தும் கப்பல்கள் மற்றும் அவற்றுக்குத் துணைபுரியும் நிதி நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும்.

பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு: இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!...

*இந்த வழக்கு விசாரணையை வருகிற ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

*கர்நாடகா, பீகார் மற்றும் ஒடிசா போன்ற சில மாநிலங்களில் ஏற்கனவே மாதவிடாய் விடுப்பு குறித்த கொள்கைகள் நடைமுறையில் உள்ளன.

தர்மேந்திர பிரதானுக்கு ஒடிசாவில் பிரம்மாண்ட வரவேற்பு: எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!...

*தொண்டர்கள் அவருக்கு ஆதரவாக பதாகைகளை ஏந்தியும், "தர்மேந்திர பிரதான் ஜிந்தாபாத்" என கோஷமிட்டும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

*பாஜகவினர் விழா எடுத்து வரவேற்பு அளிப்பது தவறான முன்மாதிரி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போலீசார் துப்பாக்கிச் சூடு: 20 பேர் உயிரிழப்பு; 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!...

**காவல்துறையின் இந்த கொடூரத் தாக்குதலால் அப்பகுதியில் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

*பல இடங்களில் தொலைத்தொடர்புச் சேவைகள் முடக்கப்பட்டு, ராணுவத்தின் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தபால் கட்டணம் 1-ந் தேதி முதல் மாற்றம்- விரைவு சேவைக்கு புதிய கட்டணங்கள் அறிவிப்பு

* பொதுமக்கள் மற்றும் மொத்த வாடிக்கையாளர்களுக்காக '24 விரைவு தபால்' மூலம் அனுப்பப்படும் பொருட்கள் 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும்.

* சேவைகள் தற்போது டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் ஆகிய 6 நகரங்களில் மட்டுமே கிடைக்கின்றன.