என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • மற்ற நடிகைகளுடன் இணைந்து நடிக்கவும் நான் தயார்.
    • எனக்குள் எந்த ஈகோவும் கிடையாது.

    குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கி, தற்போது கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருப்பவர், அனிகா சுரேந்திரன். தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் பிசியாக நடித்து வருகிறார்.

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம், 'உங்களுக்கு எந்த நடிகை எதிர்காலத்தில் போட்டியாக வரக்கூடும்?" என்று கேட்கப்பட்டது.

    அதற்கு அனிகா பதிலளிக்கையில், "நான் யாரையும் போட்டியாக நினைக்கவில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும். என்னைவிட திறமைசாலி நடிகைகள் நிறைய இருக்கிறார்கள் என்பதே உண்மை. அப்படித்தான் நான் நினைக்கிறேன். தேவைப்படும் பட்சத்தில் மற்ற நடிகைகளுடன் இணைந்து நடிக்கவும் நான் தயார்.

    எனக்குள் எந்த ஈகோவும் கிடையாது" என்றார்.

    படத்தின் சில பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ஒன்ஸ் மோர்.

    அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தின் இசையை ஹேஷம் அப்துல் வஹாப் மேற்கொண்டுள்ளார்.

    இவர் இதற்கு முன் ஹ்ருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப் படங்களை இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

    இதற்கிடையே, ஒன்ஸ் மோர் திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டது. இந்நிலையில், ஒன்ஸ் மோர் படம் கோடையில் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.

    • விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • விஜயுடன் தான் சேர்ந்துவாழ விரும்பவில்லை. எனவே விவாகரத்து வழங்கவேண்டும் என கோரியிருந்தார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவரும், நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா சமீபத்தில் செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், தனது கணவர் விஜயுடன் தான் சேர்ந்துவாழ விரும்பவில்லை. எனவே தங்களுக்கு விவாகரத்து வழங்க வேண்டும். கடந்த 4 ஆண்டாக நடிகை ஒருவருடன் விஜய் தொடர்பில் இருப்பதாகவும், அதனை கண்டித்த பிறகும் மீண்டும் அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்து வருகிறார் என குற்றம்சாட்டி இருந்தார்.

    இதற்கிடையே, திருவான்மியூரில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜயும், நடிகை திரிஷாவும் ஒரே மாதிரி உடைகளை அணிந்துகொண்டு பங்கேற்றது சமூக வலைதளத்தில் பேசுபொருளாக மாறியது.

    இந்நிலையில், சென்னையில் இருந்து மும்பை செல்வதற்காக நடிகை திரிஷா சென்னை உள்நாட்டு விமான நிலையம் டெர்மினல் 4 புறப்பாடு பகுதிக்கு வந்தார். அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரிடம், நடிகர் விஜய் தொடர்பான சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பினர்.

    அப்போது, நடிகை திரிஷா எந்த பதிலும் அளிக்காமல் மவுனமாக விறுவிறு என்று நடந்து விமான நிலையத்தின் உள்ளே சென்று விட்டார்.

    இந்தப் படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    நடிகர் யோகி பாபு நடித்துள்ள திரைப்படம் `கெணத்த காணோம்'. இந்தப் படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக லவ்லின் சந்திரசேகர் நடித்துள்ளார். இந்தப் படத்தை `ஒரு கிடாயின் கருணை மனு', `சத்ய சோதனை' போன்ற தாக்கத்தை ஏற்படுத்தும் கதைகளை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கியுள்ளார்.

    இந்தப் படத்தில் ஜார்ஜ் மரியன், ரேச்சல் ரெபெக்கா, ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆர்.பி. டாக்கீஸ், பாக்ஸ் ஆபிஸ் ஸ்டுடியோ மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஆகியவை இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு வி.தியாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார்.

    `கெணத்த காணோம்' படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்திய நிலையில், இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், கெணத்த கானோம் திரைப்படம் குறித்து இயக்குநர், நடிகர் லோகேஷ் கணகராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

     

    இதுகுறித்த எக்ஸ் தளப் பதிவில் இயக்குநர் லோகேஷ் கணகராஜ், "கெணத்த கானோம் திரைப்படம் குறித்து நல்ல ரிவ்யூக்களை கேட்டு வருகிறேன். இயக்குநர் சுரேஷ் சங்கையா சார், ரமேஷ் பாபு சார், எஸ்.ஆர். பிரபு சார், யோகி பாபு அண்ணா மற்றும் ஒட்டுமொத்த நடிகர், நடிகையர் மற்றும் படக்குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்," என குறிப்பிட்டுள்ளார்.

    யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

    `அசுரன்', `விடுதலை 2' திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கென் கருணாஸ். நடிப்பை கடந்து கென் கருணாஸ் "யூத்" திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இந்தப் படம் மார்ச் 19-ஆம் தேதி வெளியாகிறது.

    யூத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். `யூத்' திரைப்படத்தை பார்வதா என்டர்மெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் கருப்பையா சி. ராம் தயாரித்துள்ளார். தேவதர்ஷினி மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம், பள்ளிக்கூட பின்னணியில் உருவாகியுள்ளது.

    இந்த நிலையில், யூத் திரைப்படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் வெற்றி மாறன், "இவ்வளவு பாசிட்டிவாக ஒரு முழு யூனிட்டாக வேலை செய்வது எல்லா படங்களிலும் நடக்காது. சில படங்களுக்கே அது அமையும். ஒரு டீம் இப்படியாக ஒன்றுபடுவதற்கு முக்கிய காரணம் அந்த படத்தை வழிநடத்தும் இயக்குநரின் நம்பிக்கையும் மனநிலையும் தான்.

    கென்னுக்கு என் வாழ்த்துக்கள். கென் கதை சொல்லிய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது, ஒவ்வொரு காட்சிக்கும் இசை மற்றும் உணர்வுகளை இணைத்து மிகவும் மெட்டிக்குலஸாக கதையை விளக்கினார். கென் ஒரு நடிகராகவும், இயக்குநராகவும் தானாக உருவான ஒருவராக இருக்கிறார். அவருக்கு தனுஷ் அளித்த நம்பிக்கையும் ஆதரவும் அவருக்கு பெரிய தைரியம் கொடுத்துள்ளது.

    என்னைவிட தனுஷ் அவரை அதிகம் நம்பினார், செதுக்கி இருக்கிறார். கருணாஸ் மற்றும் கிரேஸ் அவர்களுக்கு இது மிகவும் பெருமையான தருணம். இந்த 'யூத்' படம் கண்டிப்பாக நல்ல வெற்றி பெறும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்," என்றார்.

    பாலிவுட் நடிகரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்.

    இயக்குநர் ஷங்கர், எழுத்தாளர் மற்றும் எம்.பி. சு. வெங்கடேசன் எழுதிய 'வீரயுக நாயகன் வேள்பாரி' நாவலை திரைப்படமாக்க திட்டமிட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார். இந்தப் படத்தில் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகள் விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வருகின்றன.

    அந்த வகையில், இந்தப் படத்தின் கதாநாயகனாக நடிகர் தனுஷ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தனுஷ் நடிப்பதற்கான பணிகள் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் முக்கிய வேடத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் விக்கி கௌஷலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

    சமீபத்தில் அவரது 'Chhaava' பட வெற்றி பெற்றதை அடுத்து, இந்த பீரியட் படம் இந்திய அளவில் கவனம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

    • மார்ச் 27 -ல் வெப் சீரிஸ் வெளியாகிறது.
    • விஜய் சேதுபதி சொந்த தயாரிப்பு நிறுவனம்மூலம் படத்தை தயாரித்துள்ளார்.

    ஆண்டவன் கட்டளை' மற்றும் 'கடைசி விவசாயி' படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் மணிகண்டன் கூட்டணியில் புதிதாக உருவாகியுள்ள தமிழ் வெப் சீரிஸ் 'முத்து என்கிற காட்டான்'.

    விஜய் சேதுபதி தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 'விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்' மூலம் இதைத் தயாரித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், வடிவேல் முருகன் மற்றும் பிக் பாஸ் புகழ் வி.ஜே. பார்வதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

    இத்தொடர் மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. 


    • நாசர் கண்டனம் தெரிவித்திருந்தார்.
    • இந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன்

    அண்மையில் தெலுங்கு நடிகர் காந்தா ராவ்வின் நினைவு விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், காந்தா ராவின் வாள் சண்டை மற்றும் நடிப்பைப் பார்த்து எம்.ஜி.ஆர் பயந்ததாகவும், "காந்தா ராவைப் பார்த்தாலே எம்.ஜி.ஆர் தன் பேண்ட்டிலேயே சிறுநீர் கழித்து விடுவார்" என்ற பொருளில் பேசியிருந்தார்.

    இவரின் இந்தக் கருத்துக்கு தமிழ் திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவர் நாசர், இதுதொடர்பாக ராஜேந்திர பிரசாத் மனிதிலிருந்து மன்னிப்புக் கோரவேண்டும் என தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடிகர் ராஜேந்திர பிரசாத் மன்னிப்புக் கோரியுள்ளார். இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், "எம்.ஜி.ஆர். தமிழ் சினிமாவின் கடவுள் போன்றவர். காந்த ராவ் சாரை புகழ்ந்து பேசும்போது, நான் தவறுதலாக எம்ஜிஆர் சாரை பற்றி ஒரு ஆட்சேபகரமான வார்த்தையைப் பயன்படுத்தினேன். இதற்காகத் தமிழ் மக்களிடமும் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடமும் மனதார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இந்த தவறை மீண்டும் செய்யமாட்டேன் என உறுதியளிக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.  

    கர திரைப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் `தேரே இஷ்க் மே'. இந்தியில் எடுக்கப்பட்ட இப்படம் தமிழில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும், இந்தியில் ரூ.160 கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றிப் படமானது. தற்போது, தனுஷ் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் நடித்து முடித்துள்ளார்.

    இந்தப் படத்தில் நாயகியாக மமிதா பைஜுவும், முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர்கள் சுராஜ் வெஞ்சரமூடு, ஜெயராம் ஆகியோர் நடித்துள்ளனர். `கர' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.

     

    இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், வெளியீட்டிற்கான பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 30-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில், கர படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இந்தப் படத்தின் புதிய போஸ்டரையும் படக்குழு பகிர்ந்துள்ளது.

    சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உயிரூட்டும் வகையில் உள்ளது.

    நாயகன் கலையரசனும்- நாயகி தீபா பாலுவும் காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துக் கொள்கின்றனர். வெளியூரில் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.

    நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தீபா பாலுவும், கலையரசனும் நிறைசூலி தெய்வதற்த்திற்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தால் குழந்தை நல்லபடியாக பிறக்கும் என்பதால் இருவரும் தங்களது ஊருக்கு திரும்புகிறார்கள்.

    குலதெய்வத்தை வணங்க சென்றாலும், மனதுக்குள் ஒருவித பயத்துடனும், பதற்றத்துடனும் செல்லும் தீபா பாலு, எதிர்பாக்காத பிரச்சனை ஒன்றை எதிர்கொள்கிறார்.

    சாமி கும்பிட்டு வீடு திரும்ப நினைக்கும் கலையரசன் தீபாவை சுற்றி திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்த அபாயத்தில் இருந்து அவர்கள் மீண்டார்களா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.

    நடிகர்கள்

    தனது எதார்த்தமான நடிப்பு மற்றுரும் கடுமையான உழைப்பாலும் கதைக்கு பெரும் வலிமை சேர்த்திருக்கிறார் நாயகன் கலையரசன். கதாநாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை தீபா பாலு, குடும்ப பாங்கான முகத்தோடு வலம் வருகிறார். அவர், இதயம் கனக்க செய்யும் நடிப்பை வெளிப்படுத்தி பார்வையாளர்களை கண்கலங்க வைக்கிறார்.

    கடினமான காட்சிகளில் அதிகமாக மெனக்கெட்டு நடித்திருக்கும் அவருக்கு தனி பாராட்டுகள். பால சரவணன் குணச்சித்திர நடிகராக நடிப்பில் முத்திரை பதித்திருக்கிறார்.

    இயக்கம்

    சமூகத்தில் நடந்துக் கொண்டிருக்கும் கொடூரமான செயலை மையக்கருவாகக் கொண்டு, அதை எதார்த்தமான முறையில் திரைப்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன்.

    காதல் ஜோடி அனுபவிக்கும் வலியும், வேதனையும் மிக்கதாக காட்சிப்படுத்தியிருக்கிறார்.

    உணர்வுப்பூர்வமான காதல் தம்பதிக்கு இறுதியில் நடக்கும் விபரீதம் வன்முறையின் உச்சமாக இருக்கிறது. கிளைமேக்ஸ் காட்சிகள் சற்று முகம் சுழிக்க வைக்கிறது.

    ஒளிப்பதிவு

    பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், மக்களின் கொடூரமான மனங்களையும் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறது.

    இசை

    சாந்தன் இசையமைப்பில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை உயிரூட்டும் வகையில் உள்ளது.

    ரேட்டிங்-2.5/5

    சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    இந்திய திரையுலகில் பிரபல நடிகை வித்யா பாலன். பாலிவுட் தொடங்கி தமிழ், தெலுங்கு, மராத்தி என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இதுதவிர 1995-ஆம் ஆண்டு ஒளிபரப்பான ஹூம் பாஞ்ச் தொடரில் நடித்தும், 2024-ஆம் ஆண்டு ஒளிபரப்பான நோ மோர் கம்ஸோர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியுள்ளார். இதுதவிர இசை ஆல்பங்களிலும் தோன்றியுள்ளார்.

    திரைத்துறையில் பிசியாக நடித்து வரும் போதிலும் வித்யா பாலன் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தோன்று ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்து வருகிறார். அந்த வரிசையில், நடிகை வித்யா பாலன் வெளியிட்டுள்ள புது ரீல்ஸ் வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    காமெடிக்காகவே தமிழ் திரையுலகில் நீண்ட காலம் பேசப்பட்ட கவுண்டமணி மற்றும் செந்தில் காம்போவில் வெளியான காமெடி காட்சிக்கு நடிகை வித்யா பாலன் ரீல்ஸ் செய்துள்ளார். 8-ஆம் வகுப்பு பாஸ், எஸ்.எஸ்.எல்.சி. ஃபெயில் என வரும் அந்த காமெடி காட்சியின் வசனத்திற்கு ஏற்ப வித்யா பாலன் கொடுத்த ரியாக்ஷன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த ரீல்ஸ் வீடியோ தற்போது லைக்ஸ்-ஐ குவித்து வருகிறது. 

    கார்த்திக் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    தன்னைப் பற்றி அனைவரும் எப்போதும் பாராட்டியும், பெருமையாக பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர் அபர்ணதி.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக வருகிறார். ஆனால், அந்த பாராட்டு சில நாட்களிலேயே அடங்கிப்போக, புகழ் ஆசையில் சில காரியங்களை செய்கிறார். தொடர்ந்து, 12ம் வகுப்பு, கல்லூரி என ஒருகட்டத்தில் மாவட்ட கலெக்ட்ராக பதவியில் அமர்கிளார் அபர்ணதி,

    இப்படி இருக்கையில், முதலமைச்சரான இளவரசு மூலம் அபர்ணதிக்கு சில தடைகள் வருகிறது. ஆனால் தடைகளை முறியடிக்கும் அபர்ணதி, ஒருகட்டத்தில் இளவரசுவே தன் பேச்சை கேட்கும் நிலையை உருவாக்குகிறார்.

    தனது பப்ளிசிட்டியை தக்கவைக்க பல்வேறு யுக்திகளை கையாலும் அபர்ணதி அசுர வளர்ச்சி அடைகிறார். ஆனால், அபர்ணதியை ஒடுக்க ஒரு கூட்டம் முயற்சிகிறது. பல தடைகளையும் உருவாக்குகிறது. அபர்ணதி அந்த தடைகளை முறியடித்து, தான் நினைத்ததை செய்து முடித்தாரா? என்பதே விறுவிறுப்பான மீதி கதை.

    நடிகர்கள்

    கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்துள்ளார் அபர்ணதி. துணிச்சலான பெண்ணாக நடித்துள்ள அபர்ணதி படத்திற்கு பலம். கதாபாத்திரம் படத்தை தாங்கி பிடித்துள்ளது. அபர்ணதிக்கு பாராட்டுகள்.

    அரசியல் களத்தில் நடக்கும் காட்சிகள் இன்றைய அரசியல் சூழலை நினைவுப்படுத்துகிறது. படத்தில் விறுவிறுப்பை கூட்டுகிறது. சில காட்சிகளில் இன்னும் தெளிவு இருந்திருக்கலாம். இளவரசு, ஜான் விஜய், காளி வெங்கட், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், சரவண சுப்பையா என அனைவரது கதாபாத்திரங்களும் சிறப்பு.

    டி.எம்.கார்த்தி, சுரேஷ் சக்கரவர்த்தி, நோபல் கே.ஜேம்ஸ், சச்சு, மங்கல், சாய் தன்யா, ரேகா நாயர், சிறுமி சம்யுக்தா அனைவரது நடிப்பும் பேசவைத்துள்ளது.

    இயக்கம்

    ஒரு பெண்ணின் பழிவாங்கும் குணம், தன்னைப் பற்றி மற்றவர்கள் பேச வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற ஆசையை கதைக்கருவாக வைத்துக் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் ராகுல் அசோக்.

    தமிழக அரசியல் சம்பவங்களை திரைக்கதையாக்கி படத்தை வேகாமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தியிருக்கிறார். அரசியல் கள நகர்வுகளையும் அட்டகாசமாக கையாண்டு ரசிக்க வைத்துள்ளார்.

    படத்தின் முதல் பாதி எந்தவித தொய்வின்றி வேகமாக நகர்ந்த அளவுக்கு இரண்டாம் பாதி நகரவில்லை. அதில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    இசை

    கார்த்திக் ராஜாவின் இசை படத்திற்கு கூடுதல் பலம்.

    ஒளிப்பதிவு

    எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவு அருமை.

    ரேட்டிங்- 2.5/5

    ×