என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார்.
    • 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் குடிலை முதன்முதலாக உருவாக்கியவர் புனித பிரான்சிஸ் அசிசியார் ஆவார். புனித பிரான்சிஸ் அசிசியார் இக்குடிலை கி.பி. 1223ஆம் ஆண்டு கிரேஜ்ஜோ என்கிற இடத்தில் இருந்த துறவற மடத்தின் அருகில் இருந்த ஒரு வனப்பகுதியில் அமைந்திருந்த குகையில், செல்வந்தரான ஜியோவான்னி வெலிதா என்பவரின் உதவியுடன் அமைத்தார்.

    ஆனாலும் இயேசுவின் பிறப்பு நிகழ்வு காட்சிகள் திருஉருவங்களாக கி.பி. 1283-ம் ஆண்டு பிரான்சிஸ்கன் துறவற சபையைச் சார்ந்த முதல் திருத்தந்தை நான்காம் நிக்கோலாஸ் முன்முயற்சியால், டஸ்கன் பகுதியைச் சார்ந்த புகழ்பெற்ற சிற்ப கலைஞர் காம்பியோ நகர் அர்னோல்போவால் வடிவமைக்கப்பட்டு, மேற்கத்திய பெத்லகேம் என்றழைக்கப்பட்ட புனித மேரி மேஜர் பெருங்கோவிலில் வைக்கப்பட்டது.

    இந்த பெருங்கோவிலானது 7ம் நூற்றாண்டிலிருந்தே இயேசுவின் குடிலைத் தாங்கிய அன்னை மரியின் ஆலயம் என்றழைக்கப்பட்டது. ஏனென்றால், இங்குதான் இயேசுவைத் தாங்கிய தீவனத் தொட்டியின் ஒரு பகுதியானது வைக்கப்பட்டுள்ளது.

    கிறிஸ்துமஸ் மரம்

    கிறிஸ்துமஸ் மரத்துக்கு என வரலாறு உள்ளது. கிறிஸ்துமஸ் மரம், இயேசு நாதரின் முப்பரிமாணங்களாகிய, தந்தை, மகன் மற்றும் தூய ஆவி ஆகியவைகளைக் காட்டுவதாக கூறப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில், ஜெர்மனியில் வாழ்ந்த புனித போனிபேஸ் என்கிற பாதிரியார் ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்கையில், ஒரு ஊரில், மக்கள் ஓக் மரத்தை வணங்குவதைக் கண்டு கோபமுற்று, வேர்ப்பகுதியுடன் அதை அடியோடு வெட்டி விட்டுச் சென்றார்.

     

    சில நாட்களில் வெட்டப்பட்ட அந்த மரம் அதே இடத்தில் வளர்ந்து கம்பீரமாக நிற்க, இயேசு நாதரே மீண்டு வந்ததின் அடையாளமாக எண்ணி ஊர் மக்கள் வணங்கினர். சில மாதங்கள் சென்றபின், புனித போனிபேஸ் பாதிரியார் அங்கே வருகையில், அந்த புதிய மரத்தை அதே இடத்தில் கண்டு அதிசயப்பட்டார். அங்கேயே மண்டியிட்டு அமர்ந்து ஜெபிக்க ஆரம்பித்தார். 15-ம் நூற்றாண்டில், ஜெர்மானியப் பாதிரியார், தேவாலய காம்பவுண்டினுள் இருந்த 'பிர்' மரத்தை மெழுகுவர்த்தி ஏற்றிய கூண்டு விளக்குகளால் அலங்கரித்தார். எவர்கிரீன் மரமென 'பிர்' மரம் அழைக்கப்பட்டது. பின்னர் ஓக் மற்றும் பிர் மரங்கள் கிறிஸ்துமஸ் மரங்களாக உபயோகப்படுத்தப்பட்டன. 

    • இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் அவரை வணங்கச் சென்றனர்.
    • இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று நள்ளிரவில் இருந்தே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. இந்த நாளில் கிறிஸ்தவர்களின் வீடுகளில் மரம் வைத்து, ஸ்டார் தொங்கவிட்டு, வண்ண விளக்குகளால் அலங்கரித்து இயேசுவின் பிறப்பை கொண்டாடுவர். மத எல்லைகளைத் தாண்டி, அன்பு, கருணை, அமைதி ஆகிய மனிதநேய மதிப்புகளைப் பரப்பும் விழாவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

    பாவிகளை ரட்சிக்க பாலகனாய் இயேசு அவதரித்த நாள் இது. உலகத்தை இருளில் இருந்து மீட்டு, மக்களின் வாழ்வில் புதிய ஒளியை வழங்க அவதரித்தவர் இயேசு கிறிஸ்து. நமக்காகவே பிறந்த அவர் இந்த பூமியில் அவதரித்து மக்களுக்காக பட்ட துன்பங்கள், அவரின் தியாகத்திற்கு நன்றியைத் தெரிவிக்கும் முக்கிய நாளாக இது அமைகிறது.

    அன்னை மேரியின் கனவில், கேப்ரியல் என்ற தேவதை தோன்றி, அவள் கருவுற்றிருப்பதையும், அவள் ஒரு மகனை ஈன்றெடுக்க போகிறாள் என்றும், அந்த குழந்தை இறைவனின் குழந்தை, தேவ தூதன் என்றும் தெரிவித்தது. அதன்படி மேரி கருவுற்றாள்.

    பிரசவ காலத்தின்போது பெத்லகேமில் இரவு நேரத்தில் எங்கு தங்குவது என தெரியாமல் திகைத்து போய் இருந்த மேரி, ஆடு மேய்ப்பவர் ஒருவரிடம் உதவி கேட்டாள்.

    அவரும் அன்று இரவு தன்னுடைய ஆடு, மாடுகளை பாதுகாக்கும் தொழுவத்தில் தங்குவதற்கு மேரிக்கு இடம் கொடுத்தார். அடுத்த நாள் இயேசு கிறிஸ்துவை, மேரி ஈன்றெடுத்தாள்.

    இயேசு பிறந்த நேரம், அருகிலுள்ள புல்வெளியில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த இடையருக்கு இறைத்தூதர் தோன்றி பெத்லகேமில் மீட்பர் பிறந்திருக்கிறார் என்ற நற்செய்தியை அறிவிக்கிறார். மேலும் பரலோக இறைத்தூதர் அனைவரும் "உன்னதங்களிலே கடவுளுக்கு மகிமை உண்டாகுக, இப்பூமியில் நல்மனதோருக்கு அமைதியுமாகுக" என பாடினர். இடையர் எழுந்து நகருக்குள் சென்று குழந்தை இயேசுவை கண்டு வணங்கினார்கள்.

     

    இயேசு பிறந்தபோது வானில் தோன்றிய ஒரு நட்சத்திரத்தைப் பின்பற்றி, கிழக்கத்திய ஞானிகள் அவரை வணங்கச் சென்றனர். ஞானிகளுக்கு வழிகாட்டிய நட்சத்திரத்தை அடையாளப்படுத்தவே கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களில் நட்சத்திரங்கள் இடம் பெறுகின்றன.

    இயேசு பிறப்பதற்கு முன் உலகில் பல அநியாயங்களும், தீமைகளும் பரவி இருந்தது. தீமைகள் அனைத்தையும் அழித்து, உலகை அமைதியானதாக மாற்றினார் இயேசு கிறிஸ்து.

    இயேசுகிறிஸ்து ஆண்டவனின் ஒரே குமாரன். அவரை தேவன் நினைத்திருந்தால் ஏதேனும் ஓர் அரண்மனையில் பிறக்க வைத்திருக்கலாம். ராஜாவாக வாழ வைத்திருக்கலாம். சகல ஜனங்களையும் அவருக்குக் கீழ்படியுமாறு செய்திருக்கலாம். இன்றைக்கு பலரும் தன் மகனை எப்படி வாழ வைக்க வேண்டும் என்னும் பெருங்கனவோடு இருக்கிறார்கள். ஆனால் இந்தப் பிரபஞ்சத்தையே படைத்த அந்த இறைவன் தன் மகனை ஒரு தொழுவத்தில் பிறக்கவும், கந்தல் துணிகளால் சுற்றிக்கிடக்கவும் செய்தார். காரணம் இறைவன் தான் விரும்புவது எளிமையின் ரூபமே என்பதை உணர்த்த விரும்பினார். அந்த எளிமை அவர் வாழ்நாள் முழுவதும் அவரோடு இருந்தது.

    "நமக்கு ஒரு பாலகன் பிறந்தார். நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார். கர்தத்துவம் அவர் தோளின் மேல் இருக்கும். அவர் நாமம் அதிசயமானவர். ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதான பிரபு என்னப்படும்" -ஏசாயா (9 : 16)

    கிறிஸ்து பிறப்புக்கு முன்பாக 7-ம் நூற்றாண்டின் மத்தியில் தோன்றிய ஏசாயா கூறிய தீர்க்க தரிசனம் இது.

    "இதோ எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர், உங்களுக்கு தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்". (லூக் 2 : 10-11)

    இயேசு கிறிஸ்துவால் போதிக்கப்பட்ட கருணை, மன்னிப்பு ஆகிய மாண்புகள் மீது நமது நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக கிறிஸ்துமஸ் விழா அமைகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25 என்பது முதன் முதலாக கி.பி.154-ம் ஆண்டு போப் ஜூலியசால் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் 221 ஆம் ஆண்டில் செக்ஸ்டஸ் ஜூலியஸ் ஆப்ரிக்கன்ஸ் என்பவரால் இயேசு பிறந்த தேதி இதுதான் என முதன் முதலில் அடையாளம் காணப்பட்டு அன்றைய நாள் முதல் டிசம்பர் 25 அன்று உலகளவில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது.

    இயேசு கிறிஸ்துவானவர் ஒவ்வொருவர் இருதயத்திலே பிறந்து, அவருடைய பண்புகளாலும், செய்கைகளாலும் அன்பும் கருணையும் நிறைந்தவர்களாய் காணப்படுவதே, கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் உண்மையான நோக்கமாகும். இயேசுவானவர் பிறப்பினாலும், அவர் வார்த்தையினாலும் கிடைத்த மகிழ்ச்சியை மற்றவர்களுக்கும் அறிவித்து உதவி செய்து வாழ்வதே உன்னதமாகும்.

    `மனிதர்கள் செய்யும் பாவங்களுக்காக, மனிதர்களை மீட்பதற்காக பிறந்த இயேசு, நமக்காக மரித்தார்' என்று சொல்லும் வேளையில் அவருக்காக அவரது அன்புக்காக அவருக்கு நாம் செய்யவேண்டியது என்ன என்பதை சிந்திக்க வேண்டும். இந்த நாளில் அவர் கூறிய பரிசுத்த வழியில் அன்பையும், சகோதரத்துவத்தையும் சேர்த்து கொண்டாடுவோம்.

    • கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.
    • கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடப்படும்.

    அந்தவகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதற்காக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முதல் நாள் நள்ளிரவில் இயேசு பிறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி, இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு விண்மீன் ஆலய வளாகத்தில் குடில் அமைக்கப்பட்டது.

    கிறிஸ்துமஸ் விழாவை வரவேற்கும் வகையில் பேராலயம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மேலும், பேராலயத்தின் முன்பு 43 அடி உயரத்தில் பிரம்மாண்ட கிறிஸ்துமஸ் மரம் புனிதம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.

    நேற்று இரவு 11.30 மணிக்கு இயேசு பிறப்பு நிகழ்ச்சி விண்மீன் ஆலயத்தில் நடந்தது. இதில் பேராலய அதிபர் இருதய ராஜ் மற்றும் பங்கு தந்தை அற்புதராஜ் ஆகியோர் தலைமையில் நடந்த சிறப்பு திருப்பலியில் உலக மக்களின் நன்மைக்காக பிரார்த்தனை செய்யப்பட்டது.

    இதில் கேரளா, ஆந்திரா, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து குழந்தை இயேசு சொரூபம் வானதேவதைகளால் பவனியாக எடுத்துவரப்பட்டு பேராலய அதிபரிடம் வழங்கப்ட்டது. அதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு குழந்தை இயேசு சொரூபத்தை பெற்ற பங்கு தந்தை அற்புதராஜ் அருகில் உள்ள குடிலில் வைத்து இயேசு பிறப்பு செய்தியை அறிவித்தார்.

    அப்போது குடிலில் பிறந்த இயேசு கிறிஸ்துவுக்கு, பாதிரியார்கள் தீர்த்தம் தெளித்து மகிழ்ந்தனர்.

    • ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.
    • 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு இன்று காலை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து நாளை சந்திர பிரபை வாகன வீதி உலா, நாளைமறுநாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 28-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 29-ந் தேதி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 30-ந் தேதி யானை வாகன வீதி உலாவும், 31-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.

    அதனைத்தொடர்ந்து ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. 

    • இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.
    • சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    இயேசு கிறிஸ்து பிறந்த தினம் உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஆர்.சி.சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதிலும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    குறிப்பாக சென்னை சாந்தோம் தேவாலயம், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சி.எஸ்.ஐ. கதீட்ரல் பேராலயம், நுங்கம்பாக்கத்தில் உள்ள புனித தெரசா தேவாலயம் உள்ளிட்ட பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்வுகள் நடைபெற்றன.

    கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    சென்னை சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், நாகை வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை பேராலயம் மற்றும் தமிழகத்தில் உள்ள பல தேவாலயங்களில் பிரார்த்தனை நடைபெற்றது.

    • ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலை சாற்று வைபவம்.
    • ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம்.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-10 (வியாழக்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : பஞ்சமி காலை 11.24 மணி வரை பிறகு சஷ்டி

    நட்சத்திரம் : அவிட்டம் காலை 6.40 வரை பிறகு சதயம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம் : தெற்கு

    நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று வளர்பிறை சஷ்டி விரதம். ஸ்ரீபிள்ளையார் நோன்பு. சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். சிதம்பரம், நெல்லை, வீரவநல்லூர் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் உற்சவம் ஆரம்பம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பனுக்கு புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமான் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சன சேவை. ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக்கடலை சாற்று வைபவம்.

    திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார சிறப்பு அலங்கார திருமஞ்சன சேவை. குறுக்குத்துறை ஸ்ரீ முருகப் பெருமானுக்கும், தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கும் அபிஷேகம். அலங்காரம், வழிபாடு. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமியநாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நிறைவு

    ரிஷபம்-தெளிவு

    மிதுனம்-பற்று

    கடகம்-லாபம்

    சிம்மம்-நலம்

    கன்னி-ஜெயம்

    துலாம்- திடம்

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- நற்செயல்

    மகரம்-வரவு

    கும்பம்-பெருமை

    மீனம்-விவேகம்

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    உள்ளம் மகிழும் சம்பவம் இல்லத்தில் நடைபெறும் நாள். உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். வருங்கால நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள்.

    ரிஷபம்

    அன்பு நண்பர்களின் ஆரவு பெருகும் நாள். பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். நீண்ட நாளைய பிரச்சனை ஒன்று இன்று நல்ல முடிவிற்கு வரும்.

    மிதுனம்

    பணத்தேவைகள் பூர்த்தியாகும் நாள். கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். ஆதரவுக் கரம் நீட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

    கடகம்

    யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கவனம் குறைவால் பொருள் விரயம் ஏற்படும். நண்பர்கள் மனம் கோணாது நடந்துகொள்வது நல்லது.

    சிம்மம்

    தொடங்கிய காரியங்கள் துரிதமாக நடைபெறும் நாள். வருமானத்தைப் பெருக்கும் வழியைக் கண்டு கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் வரலாம்.

    கன்னி

    வெற்றிப் படிக்கட்டின் விளிம்பில் ஏறும் நாள். செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள். சேமிப்பு உயரும்.

    துலாம்

    சிந்தனைகள் வெற்றி பெறும் நாள். திடீரென எடுத்த முடிவு நன்மை தரும். தர்ம காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள நினைப்பீர்கள்.

    விருச்சிகம்

    வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சனை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். வி.ஐ.பிக்கள் ஒத்துழைப்பால் விருப்பங்கள் நிறைவேறும்.

    தனுசு

    நிதானத்துடன் செயல்பட வேண்டிய நாள். நவீனப் பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு மகிழ்ச்சி தரும்.

    மகரம்

    மனக்கலக்கம் அகலும் நாள். நேற்று பாதியில் நின்ற பணி மீதியும் முடியும். நண்பர்கள் நல்ல யோசனைகளைச் சொல்வர். பொதுநலத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

    கும்பம்

    வளர்ச்சி கூடும் நாள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பொருளாதார நலன் கருதி பயணம் ஏற்படும். கொடுக்கல் வாங்கல்களில் கவனம் தேவை.

    மீனம்

    வெற்றி கிட்டும் நாள். சுதந்திரமாகச் செயல்பட வேண்டுமென்று நினைப்பீர்கள். நண்பர்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைக்கும்.

    • மண்டல பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது.
    • சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல பூஜை கடந்த மாதம் (நவம்பர்) 17-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. மண்டல பூஜை வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது.

    மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி, ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டது. இந்த ஊர்வலம் பல்வேறு இடங்களுக்கு சென்றுவிட்டு நாளைமறுநாள்(26-ந்தேதி) நண்பகல் பம்பா திரிவேணி சங்கமத்துக்கு வந்து சேருகிறது.

    அன்று மாலை 3 மணிக்கு பிறகு பம்பா கணபதி கோவிலில் இருந்து புறப்படும் தங்க அங்கி, நீலிமலை மற்றும் அப்பாச்சி மேடு, சரங்குத்தியை கடந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அதன்பிறகு தங்க அங்கி ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்படும். மறுநாள் (27-ந்தேதி) மண்டல பூஜை நடைபெறுகிறது. அன்றைய தினம் முழுவதும் ஐயப்பன் தங்க அங்கியில் காட்சி தந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    மண்டல பூஜையை முன்னிட்டு வருகிற 26 மற்றும் 27-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிரடியாக குறைக்கப்பட்டது.

    ஆன்லைன் முன்பதிவு மூலம் 26-ந்தேதி 30ஆயிரம் பேருக்கும், மண்டல பூஜை நடைபெறக்கூடிய 27-ந்தேதி 35 ஆயிரம் பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் அந்த இரண்டு நாட்களும் உடனடி முன்பதிவு(ஸ்பாட் புக்கிங்) 2 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.

    அது மட்டுமின்றி தங்க அங்கி ஊர்வலம் வரக்கூடிய, 26-ந்தேதி காலை 9 மணிக்கு பிறகு நிலக்கல்லில் இருந்தும், 10 மணிக்கு பிறகு பம்பாவில் இருந்தும் பக்தர்கள் சன்னதிக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். தங்க அங்கி ஊர்வலம் சரங்குத்தியை அடைந்தபிறகே, பம்பாவிற்கு வர பக்தரகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு.
    • மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-9 (புதன்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : சதுர்த்தி காலை 11.41 மணி வரை பிறகு பஞ்சமி

    நட்சத்திரம் : அவிட்டம் (முழுவதும்)

    யோகம் : மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சன சேவை

    இன்று வளர்பிறை சதுர்த்தி விரதம். மிலட்டூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் புறப்பாடு. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. ஆவுடையார் கோவில் ஸ்ரீ மாணிக்கவாசகர் உற்சவம் ஆரம்பம். ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் காளிங்க நர்த்தன காட்சி. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி பாலாபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீநரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருப்புளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீபுளியங்குடி வள்ளியம்மை கோவிலில் திருமஞ்சன சேவை.

    மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி அலங்கார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீராமபிரான் புறப்பாடு. விருதுநகர் ஸ்ரீவிஸ்வநாதர், வேதாரண்யம் ஸ்ரீதிருமறைக்காடர் கோவிலில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் அபய பிரதான ஸ்ரீலிங்க நாதர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமான், தேவகோட்டை ஸ்ரீ அரங்கநாதர் கோவில்களில் திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வரவு

    ரிஷபம்-ஒய்வு

    மிதுனம்-ஆசை

    கடகம்-வெற்றி

    சிம்மம்-ஆதரவு

    கன்னி-புகழ்

    துலாம்- வரவு

    விருச்சிகம்-செலவு

    தனுசு- லாபம்

    மகரம்-திறமை

    கும்பம்-உண்மை

    மீனம்-களிப்பு

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்

    மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்

    மேஷம்

    யோகமான நாள். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. தொழில் வளர்ச்சிக்கு இடையூறாக இருந்தவர்கள் விலகுவர்.

    ரிஷபம்

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். உடன்பிறப்புகள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்ய முன்வருவர். உத்தியோகத்தில் பணி நிரந்தரம் பற்றிய தகவல் உண்டு.

    மிதுனம்

    விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். வேலைப்பளு அதிகரிக்கும். திட்டமிட்ட பயணமொன்றில் மாற்றம் செய்வீர்கள்.

    கடகம்

    வழிபாட்டால் வளர்ச்சி காண வேண்டிய நாள். தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி தேவை. உத்தியோகத்தில் இடர்ப்பாடுகள் வரலாம்.

    சிம்மம்

    வரவு திருப்தி தரும் நாள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்ட முன்வருவர். உத்தியோகத்தில் எதிர்பாராத முன்னேற்றம் வரலாம்.

    கன்னி

    உறவினர் சந்திப்பால் உள்ளம் மகிழும் நாள். சங்கிலித் தொடர்போல வந்த கடன் சுமை குறையும். சம்பள உயர்வு பற்றிய சந்தோஷத் தகவல் உண்டு.

    துலாம்

    நினைத்தது நிறைவேறும் நாள். வருமானம் திருப்தி தரும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பிள்ளைகளுக்கு வேலை கிடைத்து மகிழ்வீர்கள்.

    விருச்சிகம்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்பும், அதற்கேற்ப சம்பள உயர்வு பற்றிய தகவலும் வரலாம். தொழில் முன்னேற்றம் திருப்தி தரும்.

    தனுசு

    மனக்குழப்பம் ஏற்படும் நாள். தன்னம்பிக்கை தேவை. புதிய ஒப்பந்தங்கள் கைநழுவிச் செல்லலாம். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் கெடுபிடிக்கு ஆளாக நேரிடும்.

    மகரம்

    பக்குவமாகப் பேசிப் பாராட்டுக்களைப் பெறும் நாள். உத்தியோகத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மேலதிகாரிகள் மதிப்புக் கொடுப்பர்.

    கும்பம்

    நம்பிக்கைக்குரியவர்கள் நல்ல தகவலைத் தரும் நாள். தொழில் வளர்ச்சி உண்டு. செல்லும் இடங்களில் சிந்தனை வளத்தால் சிறப்படைவீர்கள்.

    மீனம்

    விரோதங்கள் விலகும் நாள். எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அடிப்படை வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.

    • இன்றைய ராசிபலன்
    • 12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன்கள்...

    மேஷம்

    சுபச்செய்திகள் வந்து சேரும் நாள். எடுத்த காரியத்தை எளிதாக முடிப்பீர்கள். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும். உத்தியோகத்தில் இடமாற்றம் பற்றிச் சிந்திப்பீர்கள்.

    ரிஷபம்

    நினைத்தது நிறைவேறும் நாள். நேசித்தவர்கள் நிகழ்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்வர். தொழில் வளர்ச்சி கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.

    மிதுனம்

    மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். வீண்பிடிவாதங்களால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்காது.

    கடகம்

    வரன்கள் வாயில் தேடி வரும் நாள். வருங்கால நலன் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும். தனவரவு உண்டு. அயல்நாட்டு வணிகம் ஆதாயம் தரும்.

    சிம்மம்

    முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும் நாள். பழைய கடன் பிரச்சனைகளைத் தீர்க்க ஆக்கபூர்வமாக யோசிப்பீர்கள்.

    கன்னி

    விரயங்கள் அதிகரிக்கும் நாள். வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் அனுசரிப்புக் குறையும்.

    துலாம்

    நட்பால் நன்மை கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும். சேமிப்பு உயரும். உத்தியோகம் சம்மந்தமாக எடுத்த முயற்சி பலன் தரும்.

    விருச்சிகம்

    முயற்சி கைகூடும் நாள். உடன்பிறப்புகளின் உதவி கிடைக்கும். வாகன மாற்றச் சிந்தனை மேலோங்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.

    தனுசு

    திருமண முயற்சி கைகூடும் நாள். வருமானம் திருப்தி தரும். குடும்பத்தில் உள்ளவர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.

    மகரம்

    மகிழ்ச்சி கூடும் நாள். ஆரம்பத்தில் அச்சுறுத்தல்களாகத்தோன்றும். தகவல் முடிவில் உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும்.

    கும்பம்

    விலகிச் சென்றவர்கள் விரும்பி வந்து சேரும் நாள். வாங்கல் கொடுக்கல்கள் ஒழுங்காகும். பிரச்சனைகள் தீர பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

    மீனம்

    அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும் நாள். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிப்பீர்கள். பயணம் பலன்தரும்.

    • குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    விசுவாவசு ஆண்டு மார்கழி-8 (செவ்வாய்க்கிழமை)

    பிறை : வளர்பிறை

    திதி : திருதியை காலை 11.30 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம் : திருவோணம் (முழுவதும்)

    யோகம் : சித்தயோகம்

    ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம்

    இன்று திருவோண விரதம். சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ஸ்ரீஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் ஸ்ரீ ஆண்டாள் திருக்கோலம், பல்லக்கில் வீணை மோகினி அலங்காரம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் பவனி. திருத்தணி, வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    குரங்கணி ஸ்ரீ முத்துமாலையம்மன் பவனி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநரையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் சண்முகருக்கு சத்ரு சம்கார அர்ச்சனை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் காலையில் திருமஞ்சன சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திருமஞ்சன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மகிழ்ச்சி

    ரிஷபம்-போட்டி

    மிதுனம்-தனம்

    கடகம்-லாபம்

    சிம்மம்-மேன்மை

    கன்னி-நிறைவு

    துலாம்- கண்ணியம்

    விருச்சிகம்-போட்டி

    தனுசு- இன்பம்

    மகரம்-பயணம்

    கும்பம்-உயர்வு

    மீனம்-சிறப்பு

    ×