என் மலர்

  நீங்கள் தேடியது "அண்ணாமலை"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து பாஜக போராட்டம்
  • கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்வதாக அண்ணாமலை ட்வீட்

  சென்னை:

  தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

  ஒட்டன்சத்திரத்தில், உணவுத்துறை அமைச்சர் திரு சக்கரபாணியின் தூண்டுதலின் பேரில் ஊராட்சி மன்றத் தலைவருக்கான அதிகாரங்கள் பறிக்கப்பட்டதைக் கண்டித்து, திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் பழனி கனகராஜ் தலைமையில் மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்தது தமிழக பாஜக.

  இந்நிலையில், நியாயமான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய பாஜக நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்குத் தொடுத்து 6 பேரைக் கைது செய்துள்ளது திமுக அரசு. கைது செய்யப்பட்ட நிர்வாகிகளை வெளியே கொண்டு வருவதற்கு அனைத்து முயற்சிகளையும் தமிழக பாஜக செய்து வருகிறது. எங்கள் நிர்வாகிகள் சிறையிலிருந்து வெளியே வரும்போது அவர்களை வரவேற்க தமிழக பாஜக தயாராக இருக்கும். பார்த்துக் கொண்டிருக்கிறோம், பொறுத்துக் கொண்டிருக்கிறோம், எங்கள் நேரம் வரும்வரை காத்துக் கொண்டிருக்கிறோம்!

  இவ்வாறு அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் ஓபிஎஸ் உடன் பாஜக நிர்வாகிகள் சந்திப்பு.
  • ஜனாதிபதி தேர்தலில் ஆதரவுக் கோரி அண்ணாமலை சந்திப்பு.

  அதிமுக பொதுக்குழு, செயற்குழு முடிந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துடன் பாஜக நிர்வாகிகள் சந்தித்துள்ளனர்.

  சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசியுள்ளனர்.

  அப்போது, ஜனாதிபதி தேர்தலில் பாஜக தேசியக் கூட்டணி சார்பில் போட்டியிடவுள்ள திரௌபதி முர்முவுக்கு ஆதரவுக் கோரி எடப்பாடி பழனிசாமியை சந்தித்த நிலையில், தற்போது ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அண்ணாமலை, ஆதரவுக் கோரியுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • அடுத்தடுத்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.
  • அவருடன் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

  சென்னை:

  அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய அனைத்து தீர்மானங்களும் நிராகரிப்பு என்றும் அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ந்தேதி கூடும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் ஒற்றை தலைமை வேண்டும் என்ற முழக்கம் மேலாங்கி இருந்தது.

  இவ்வாறு அடுத்தடுத்த பரபரப்பான சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார்.

  சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு சென்ற தமிழக பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசியுள்ளார். அவருடன் பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர்.

  இச்சந்திப்பின் போது, ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவு கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தி.மு.க. அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.
  • வணிக வரித்துறையில் வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் வணிக வரித்துறை சார்பில் அதிக வருவாய் ஈட்டப்படும்.

  அவனியாபுரம்:

  மதுரை குலமங்கலம் ஊராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடந்தது. அதில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு 479 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

  இதில் அனைத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரசு திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார். பின்பு அமைச்சர் நிருபர்களிடம் கூறியதாவது:-

  தி.மு.க. அரசு மக்கள் நலம் சார்ந்த திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஒவ்வொரு ஊராட்சியிலும் மாதந்தோறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.

  வணிக வரித்துறையில் வரி செலுத்தாத 3 லட்சம் பேருக்கு முறைப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் வணிக வரித்துறை சார்பில் அதிக வருவாய் ஈட்டப்படும். பத்திரப்பதிவுத்துறையில் ஒரே நாளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்தது குறித்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்.

  இந்த ஆட்சியில் பத்திரப்பதிவுத்துறையில் நிர்வாகம் சிறப்பாக நடைபெறுகிறது. பத்திரப்பதிவுத்துறையில் அதுபோன்று எந்த முறைகேடும் நடைபெறவில்லை. அவர் தனது குற்றச்சாட்டை நிரூபித்தால் நான் பதவி விலக தயார்.

  பத்திரப்பதிவுத் துறையில் இந்தியாவிலேயே முன் உதாரணமாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை மத்திய அரசு இன்னும் கையெழுத்திடாமல் 7 மாதமாக கிடப்பில் போட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மு.க.ஸ்டாலின் நம்பர் 1 முதல்-அமைச்சர் என தங்களுடைய ஊடகங்களில் சுயவிளம்பரம் செய்யப்படுகிறது
  • மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு பெயர் மாற்றி அவர்களின் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

  பொள்ளாச்சி:

  பாரதிய ஜனதா கட்சியின் கோவை தெற்கு மாவட்ட மாநாடு பொள்ளாச்சியில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் ஏ.பி. முருகானந்தம், மாவட்ட பார்வையாளர் மோகன் மந்திராச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  மாநாட்டில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது:-

  பொள்ளாச்சியில் கோட்டை போன்று மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு ஒரு சரித்திர மாநாடாக அமையும். தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சி அமைய இந்த மாநாடு தீப்பொறியாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சிக்கு மக்கள் ஆதரவு நல்ல நிலையில் உள்ளது. ஆனால், தி.மு.க.வின் ஓராண்டு கால ஆட்சியிலேயே மக்கள் விரக்தியில் உள்ளனர்.

  பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தமிழகத்திலும் பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. கழிப்பறைகள் தொடங்கி, வீடுகள், குடிநீர் இணைப்பு என பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

  பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பல்வேறு திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் 12 மருத்துவ கல்லூரிகள் ஒரே நாளில் திறக்கப்பட்டுள்ளது.

  பொள்ளாச்சி தென்னை விவசாயம் சார்ந்த பகுதி. பா.ஜ.க. ஆட்சியில்தான் கொப்பரை தேங்காய்க்கு ஆதரவு விலை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது 105 ரூபாய் ஆதார விலையாக வழங்கப்படுகிறது. இந்த விலை மேலும் உயர்த்த முயற்சி செய்யப்படும்.

  உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கூலித்தொழிலாளியாக கடந்த காலங்களில் வேலைக்கு சென்று வந்தார்கள். ஆனால், தற்போதை பா.ஜ.க. ஆட்சியில் இந்தியர்கள் மற்ற நாடுகளுக்கு முதலாளிகளாக செல்லும் நிலை உருவாகி உள்ளது.

  பா.ஜ.க. மந்திரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறமுடியாது. ஆனால் காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் மந்திரிகளாக இருந்தவர்கள் ஊழல்வாதிகளாக இருந்தனர்.

  பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் இருந்து தினசரி 7 ஆயிரம் லோடு கனிமவளங்கள் கேரளாவிறகு கடத்தப்படுகிறது. சோதனைச்சாவடிகள் தனியார் சோதனைச் சாவடிகள் ஆக உள்ளன. போலீசாரின் கரங்கள் கட்டப்பட்டு உள்ளது. கனிம வளங்கள் கடத்தலை தடுக்க பா.ஜ.க. சார்பில் பெரிய அளவிலான போராட்டங்கள் விரைவில் நடத்தப்படும்.

  சிறுமியின் கருமுட்டை விற்பனை, கூட்டுக் கொலைகள் என தி.மு.க.வின் ஆட்சியில் நடைபெற்று வருகிறது. பெண்களின் பாதுகாப்பு தி.மு.க. ஆட்சியில் கேள்விக்குறியாக உள்ளது.

  மு.க.ஸ்டாலின் நம்பர் 1 முதல்-அமைச்சர் என தங்களுடைய ஊடகங்களில் சுயவிளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் பொய் சொல்வது போன்றவற்றில் ஸ்டாலின் நம்பர் ஒன் முதல்-அமைச்சராக உள்ளார்.

  பா.ஜ.க. ஆட்சி மீது வைக்கப்படும் பொதுவான ஒரே ஒரு குற்றச்சாட்டு இஸ்லாமியர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் எதிரானவர்கள் என்பது தான். ஆனால், மணிப்பூர், கோவா போன்ற இடங்களில் கிறிஸ்தவர்கள் அதிகமாக இருந்தும் பா.ஜ.க.வே வெற்றி பெற்று உள்ளது. குறிப்பாக பெண்கள் அதிகமாக வாக்களித்துள்ளனர். பா.ஜ.க.வின் ஆட்சியை பெண்கள் பாதுகாப்பான ஆட்சியாக உணர்கின்றனர்.

  மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களையும் தி.மு.க. அரசு பெயர் மாற்றி அவர்களின் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வருகின்றனர். தமிழக அரசு பெயர் மாற்றம் செய்து பல்வேறு திட்டங்களை தி.மு.க. அரசின் திட்டங்களாக கூறிவருகிறது.

  தி.மு.க. ஆட்சியில் தமிழகத்திற்கு பல்வேறு துரோகங்கள் இழைக்கப்பட்டுள்ளன. காவிரி பிரச்சினை, கச்சத்தீவை விட்டுக் கொடுத்தது போன்ற பல்வேறு துரோகங்களை தமிழகத்திற்கு தி.மு.க. செய்துள்ளது. தற்போது பா.ஜ.க. கண்டிப்பாக கச்சத்தீவை மீட்கும் என்று தெரிந்தவுடன் கச்சத்தீவை மீட்கும் கோரிக்கையை ஸ்டாலின் முன்வைத்து வருகிறார். இது மக்களை ஏமாற்றும் செயல்.

  மாநகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து வரிகளை விட பொள்ளாச்சி நகராட்சியில் சொத்து வரி அதிகமாக உள்ளது. தி.மு.க. தங்கள் சுயலாபத்திற்காக வரியை உயர்த்தி உள்ளது.

  ஆனைமலையாறு மற்றும் நல்லாறு திட்டம், கொப்பரை தேங்காய்க்கு கூடுதல் விலை பெற்றுத் தருதல் போன்ற பல்வேறு கோரிக்கைகளுக்காக பா.ஜ.க. பொதுமக்களுடன் துணை நிற்கும்.

  ராகுல் காந்தியின் ஊழல் விசாரணையை திசை திருப்பும் நோக்கில் தற்போது சில மாநிலங்களில் மத்திய அரசின் புதிய ராணுவ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் அந்த திட்டம் இந்திய ராணுவத்தின் பலத்தை அதிகப்படுத்தி எதிர்காலங்களில் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள உறுதுணையாக இருக்கும்.

  வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாரதிய ஜனதா 25-க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  • கடந்த 10 ஆண்டுகளாக மூழ்கிப்போன ஆவினை இன்றைய தினம் நீர்மூழ்கி கப்பலாக மாற்றி வருவதாக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.

  கோவை:

  கோவையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர் மலுமிச்சம்பட்டி கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க உறுப்பினர்களுடன் பால் கொள்முதல் குறித்து இன்று காலையில் கள ஆய்வு நடத்தினார்.

  தொடர்ந்து, மதுக்கரையில் ஆய்வு பணியை மேற்கொண்டார். பின்னர், பால்வளத்துறை அமைச்சர் ஆர்.எஸ் புரம் உயர் தொழில்நுட்ப ஆவின் பாலகத்தை திறந்து வைத்தார்.

  பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  ஆவின் பால் உற்பத்தியை அதிகரிக்க முதல்-அமைச்சர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக மூழ்கிப்போன ஆவினை இன்றைய தினம் நீர்மூழ்கி கப்பலாக மாற்றி வருகிறோம். உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் அனைத்து ஆவின் விற்பனை நிலையங்களை துவக்கி வைத்து வருகிறோம்.

  கோவை மாநகரத்தில் இன்று ஒரு கோடி மதிப்புள்ள ஆவின் பாலகத்தை திறந்து வைத்துள்ளோம். கடந்த ஆட்சியின் போது காலிப்பணியிடங்களை நிரப்ப முறைகேடு நடந்தது. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணியிடங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை முறைப்படுத்தி காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும். ஆவின் தலைவர் பதவி இடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

  புதிய பால் பண்ணை கள்ளக்குறிச்சி, திருப்பத்தூரில் ஏற்படுத்த உள்ளோம். இதற்கான பணிகள் நடந்து வருகிறது.

  லஞ்ச ஒழிப்பு துறை நடத்திய விசாரணையில் தவறு செய்த நபர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தவறுகள் யார் செய்தாலும் தண்டிக்கப்படுவர். மேலும், ஆவின் பாலகத்தில் சிக்கன் போன்ற பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது.

  இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட 3 கடைகள் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு ஐபிஎஸ் அதிகாரி. அவர் எங்களின் தரத்திற்கு ஏற்றவாறு பேசினால் பேசலாம். அவர் நோட்டாவை விட குறைவான ஓட்டு வாங்கியவர்.

  ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக அண்ணாமலை தெரிவித்த கருத்து தவறானது. அவர் தன்னை முன்னிலைப்படுத்தி நானும் ரவுடி, நானும் ரவுடி என்பது போல் கூறி வருகிறார். ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் தயாரிக்க சாத்தியம் குறித்த பணிகள் நடைபெற்று வருகிறது.

  ஆய்வுக்கு முடிவுக்கு பிறகு தான் ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதற்குள், சுகாதாரத்துறை அமைச்சர் ரூ. 77 கோடி வாங்கியதாக குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை மீது நிச்சயமாக வழக்கு தொடரப்படும். இவர் எப்படி ஐபிஎஸ் ஆனார் என்று தெரியவில்லை. ஆவின் உற்பத்தி கடந்த பத்து ஆண்டுகளில் 24 லட்சம் இருந்தது. தற்போது அரசின் நடவடிக்கை காரணமாக ரூ.42 லட்சம் அதிகரித்து உள்ளது.

  இவ்வாறு அமைச்சர் நாசர் கூறினார்.

  தொடர்ந்து ஆவின் பச்சாபாளையத்தில் அமைச்சர் ஆய்வு பணியை மேற்கொண்டார். இதில், மாவட்ட கலெக்டர் சமீரன், மாநகராட்சி கமிஷனர் பிரதாப் உள்பட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா.ஜ.க மாநாட்டின் முகப்பு தோற்றம் சென்னை தலைமை செயலகத்தை போன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே சென்னை கோட்டை வடிவத்தில் முகப்பு தோற்றத்தை அமைத்துள்ளதாக பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.

  பொள்ளாச்சி:

  கோவை தெற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் பொள்ளாச்சியில் தாமரை ஆட்சி என்ற பெயரில் மாவட்ட மாநாடு கோவை ரோடு பி.கே.டி பள்ளி எதிரில் வாஜ்பாய் திடலில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.

  இதற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமை தாங்குகிறார். இதில் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று பேரூரையாற்றுகிறார்.

  மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, மாநாட்டு திடலின் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேடைகள் அமைக்கும் பணி, மாநாட்டின் முகப்பு தோற்றம், சேர்கள், மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர மாநாடு நடைபெறும் இடம், பொள்ளாச்சி நகரம் முழுவதும் பல இடங்களில் தோரணங்களும் கட்டப்பட்டு நகரமே திருவிழா கோலமாக காட்சியளிக்கிறது.

  பா.ஜ.க மாநாட்டின் முகப்பு தோற்றம் சென்னை தலைமை செயலகத்தை போன்று அமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டே சென்னை கோட்டை வடிவத்தில் முகப்பு தோற்றத்தை அமைத்துள்ளதாக பா.ஜ.கவினர் கூறுகின்றனர்.

  இதுகுறித்து பா.ஜ.க கோவை தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜன் கூறியதாவது:-

  2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை மையம் வைத்தே இந்த மாநாடு நடக்கிறது. மேலும் 2024-ம் ஆண்டு நடக்க உள்ள எம்.பி. தேர்தலில் பொள்ளாச்சியில் இருந்து பா.ஜனதாவை சேர்ந்தவரை எம்.பியாக தேர்ந்தெடுத்து டெல்லிக்கு அனுப்ப உள்ளோம். இதற்காக தேர்தல் பணிகளை தற்போது தொடங்கி விட்டோம்.

  இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது. முக்கியமாக கோவை, பொள்ளாச்சியில் அதிகளவிலான கனிம வளங்கள் உள்ளன. இவை அனைத்தும் தற்போது கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது. இதனை கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.

  மேலும் பொள்ளாச்சியை தனி மாவட்டமாக அறிவிப்பது, தென்னைக்கு உரிய விலை என மாவட்டத்தின் பல்வேறு வளர்ச்சிக்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
  • சிறுபான்மைபிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம், நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ, வினோஜ் பி.செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

  பழனி:

  பழனியில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இதில் தேசிய, மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பழனி கோவில் அடிவாரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை வரை பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

  இதில் தேசிய பொதுச்செயலாளரும், தமிழக பார்வையாளருமான சி.டி.ரவி, இணைப்பார்வையாளர் சுதாகர்ரெட்டி, தமிழக பொதுச்செயலாளர் சீனிவாசன், சிறுபான்மைபிரிவு செயலாளர் வேலூர் இப்ராகிம், நயினார்நாகேந்திரன் எம்.எல்.ஏ, வினோஜ் பி.செல்வம் உள்பட ஏராளமான நிர்வாகிகள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

  இன்று நடைபெற்ற முகாமில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தேசிய அமைப்புச்செயலாளர் சந்தோஷ், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ உள்பட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனால் பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பாரதிய ஜனதாவின் 8 ஆண்டுகள் ஆட்சியை மத்திய அரசின் மூலமான பயன் அடைந்த பயனாளிகளுடன் கொண்டாடி வருகிறோம்.
  • தமிழகத்தில் முதல்-அமைச்சரை எதிர்த்து கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை பாய்கிறது.

  கோவை:

  பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

  பாரதிய ஜனதாவின் 8 ஆண்டுகள் ஆட்சியை மத்திய அரசின் மூலமான பயன் அடைந்த பயனாளிகளுடன் கொண்டாடி வருகிறோம். டெல்லியில் ராகுல்காந்தி விசாரணைக்கு ஆஜரானதற்கு தேவையில்லாத போராட்டத்தை காங்கி ரஸ் கட்சியின் எம்.பி.க்கள், தலைவர்கள் நடத்துகின்றனர்.

  டெல்லியில் மக்களுக்கு இடையூறு செய்வது போன்று காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் முதல்-அமைச்சரை எதிர்த்து கருத்து தெரிவித்தால் கைது நடவடிக்கை பாய்கிறது.

  மேலும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசு வேலை வழங்க உள்ளது. தமிழக காவல்துறை பணிக்கு ஆள்சேர்ப்பதில் அக்னி வீரர் பாணியை கொண்டு வர வேண்டும்.

  அ.தி.மு.க.வின் உட்கட்சி விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடாது. அ.தி.மு.க. பெரிய கட்சியாக, வலுவான கட்சியாக தமிழகத்தில் உள்ளது.

  சீரடிக்கு செல்லும் வழக்கமான ரெயில் சேவை ஏதும் நிறுத்தப்படவில்லை. தற்போது தனியார் ரெயில் சேவையை தடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. இதுதொடர்பாக டி.ஆர். பாலு சொல்லும் குற்றச்சாட்டு தவறானது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழகத்தில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள் நடக்கின்றன என மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
  • அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம் என்றார் அண்ணாமலை.

  சென்னை:

  தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

  தி.மு.க. அமைச்சர்கள் பா.ஜ.க. தொண்டர்களை பற்றி கூறும் பேச்சுகளை சிறந்த நகைச்சுவை படமாக மக்கள் பார்த்து ரசிப்பார்கள்.

  அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்கள் ஒவ்வொரு மாதமும் வெளியிடுவோம். ஆவினில் ஊழல் குறித்து நான் சொன்னதும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் ஊழல் இல்லை என விளக்கம் கொடுத்தார். அப்படியிருக்கையில் எதற்காக சுகாதார செயலரை மாற்றியுள்ளார்?

  தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு 7 லாக்கப் மரணங்களைத் தாண்டிவிட்டது. சாத்தான்குளம் விவகாரத்தில் காவல்துறை செய்திருப்பது மிகவும் தவறானது.

  அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் உள்ளிட்டோர் அதனை அரசியல் நிகழ்ச்சியாக மாற்றினர். ஆனால், இப்போது தி.மு.க. ஆட்சியில் அடுத்தடுத்து லாக்கப் மரணங்கள், கூட்டு பலாத்காரம், சாலையில் வெட்டுவது போன்ற செயல்கள் நடப்பது அரசின் செயலின்மையை காட்டுகிறது.

  தமிழக போலீஸ் ஒரு பல் பிடுங்கப்பட்ட பாம்பாக உள்ளது. இதில் தி.மு.க.வின் அரசியல் தலையீடுதான் முதலில் சரிசெய்யப்பட வேண்டியது என தெரிவித்துள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகள் அரசியல் களத்தை அதிர வைக்கின்றன.
  • அரசியல் களத்தில் ஆளும் தி.மு.க. அவரது குடைச்சலை பெரும் குடைச்சலாகவே கருதுகிறார்கள்.

  சென்னை:

  காவல்துறையில்தான் அதிரடி நடவடிக்கை பரபரப்பாக பேசப்படும். குற்றச் சம்பவங்களும் அது தொடர்பாக போலீஸ் அதிகாரிகள் துப்பு துலக்கி கண்டுபிடித்து உண்மைகளை வெளிக்கொண்டு வருவதும் ஆச்சரியமாக பார்க்கப்படும், பேசப்படும்.

  இதில் எல்லாப்புகழும் சாட்சாத் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கே சொந்தமானது. ஆனால் அரசியல்துறை முற்றிலும் மாறுபட்டது. சூழ்நிலைக்கு தகுந்தாற்போல் பேசுவார்கள்.

  அப்படி பேசுவதிலும் உண்மை எது? பொய் எது? என்று கடைசி வரை கண்டுபிடிக்கவே முடியாமல் போய்விடும்.

  அந்த அளவுக்கு பேசியே குழப்பி விடுவார்கள். சமீப காலமாக அரசியலிலும் தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலையின் அதிரடி நடவடிக்கைகள் அரசியல் களத்தை அதிர வைக்கின்றன.

  ஐ.பி.எஸ்.அதிகாரியாக இருந்ததால் அரசியலிலும் புகுந்து தனது அதிரடி நடவடிக்கைகளால் பேச வைத்துள்ளார்.

  அரசியல் களத்தில் ஆளும் தி.மு.க. அவரது குடைச்சலை பெரும் குடைச்சலாகவே கருதுகிறார்கள். தி.மு.க.வின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பிரதான எதிர்கட்சியான அ.தி.மு.க.விடம் இருந்து எதிர்ப்பு வருகிறதோ இல்லையோ அண்ணாமலையிடம் இருந்து உடனுக்கு உடன் வருகிறது. அது உடனடியாக விவாதமாகவும் ஆகி விடுகிறது.

  தன்னைப்பற்றி விமர்சிப்பவர்களையும் சும்மா விடுவதில்லை. அவர்களது பின்னணியையும் போலீஸ் போல் தோண்டி துருவி எடுத்து விளாசுகிறார். இதனால் விமர்சிப்பவர்களும் எதிர்தாக்குதல் எப்படி வரும் என்பதை ஒரு முறைக்கு இருமுறை யோசித்தே விமர்சிக்கிறார்கள்.

  கடந்த ஒரு மாதமாக 2 துறைகள் மீது ஊழல் புகார் வெளியிட போவதாக கூறி வந்தார். எல்லோரது ஹேஸ்யமும் ஒரு பக்கத்தில் இருக்க அவர் வெளியிட்டது யாரும் எதிர்பாராதது.

  கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குவதில் மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது. குறைந்த விலைக்கு ஆவின் நிறுவனத்தில் தயாரிக்க முடிவு செய்த பிறகு அந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.

  கூடுதல் விலைக்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்க முடிவு செய்துள்ளார்கள் என்பதை சம்பந்தப்பட்ட துறையில் எந்தெந்த தேதிகளில் ஆலோசித்தார்கள். அதில் யார் யார் கலந்து கொண்டார்கள். என்னென்ன முடிவுகள் எடுக்கப்பட்டன என்பதை நகல் காப்பி ஆதாரத்துடன் தெரிவித்து ஆச்சரியப்பட வைத்தார்.

  இந்த விவகாரத்தில் டெண்டர் இன்னும் உறுதி செய்யாத நிலையில் முறைகேடுக்கு ஏது வாய்ப்பு என்று அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

  அதையும் அண்ணாமலை விடவில்லை. சம்பந்தப்பட்ட நிறுவனம் பொங்கல் தொகுப்பு வழங்கியதிலேயே முறைகேடு செய்த நிறுவனம். அந்த நிறுவனம் கருப்பு பட்டியலில் வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  கருப்பு பட்டியலில் வைக்கப்பட்ட நிறுவனம் டென்டரில் கலந்து கொள்ள எப்படி அனுமதிக்கப்பட்டது என்று எதிர் கேள்வியை முன் வைத்தார்.

  ஆவின் ஊட்டசத்து மாவு கர்ப்பிணிகளுக்கு ஏற்றதல்ல என்று கூறிய நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ஆவினில் இந்த கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பொருளை தயாரிக்க கேட்டுக் கொண்டுள்ளார்கள். அது பற்றி ஆய்வு நடக்கிறது. ஆய்வு முடிந்து தயாரித்து கொடுத்தால் கொள்முதல் செய்யலாம் என்று விவாதிக்கப்பட்டுள்ளது என்றார்.

  ஒரு அரசு நிறுவனத்தால் ஊட்டச்சத்து மாவு தயார் செய்வது இயலாத காரியம் அல்ல. அதுமட்டுமல்ல இதுபற்றி விவாதிக்கப்பட்டு இருக்கிறது என்பது உறுதியாகிவிட்டது.

  அடுத்ததாக அண்ணாமலை வைத்த குற்றச்சாட்டு நில அங்கீகாரம் தொடர்பானது. ஒரு இடத்தை வங்கி அங்கீகாரம் பெற விண்ணப்பிப்பது, முதல் இடத்தை பார்வையிடுதல், சாலை அமைத்தல், அதை பார்வையிட்டு சான்றிதழ் அளித்தல் என்று ஒவ்வொரு கட்டத்துக்கும் எத்தனை நாள் அரசு அவகாசம் வழங்கி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி குறைந்தபட்சம் 200 நாட்கள் ஆகும் நிலையில் குறிப்பிட்ட நிறுவனத்துக்கு 8 முதல் 20 நாட்களில் பல இடங்களில் அங்கீகாரம் வழங்கப்பட்டு இருப்பதையும் ஆதாரத்துடன் வெளியிட்டார்.

  இதற்கும் எல்லா ஆவணங்களும் சரியாக இருந்ததால் அங்கீகாரம் கிடைப்பதில் தாதமாகாது என்று பொத்தம் பொதுவாகவே விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் பெரு நகர வளர்ச்சி குழுமத்தில் அதன் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்து அங்கீகாரம் வாங்குவது எளிதானது அல்ல என்பதை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் ஒத்துக்கொள்கிறார்கள்.

  இவை எல்லாவற்றிற்கும் காரணம் ஒரு ஆடிட்டர், ஒரு எம்.எல்.ஏ. மகன் என்பதை அவர்களது பெயர் விபரங்களையும் வெளியிட்டு ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு அதிகாரிகளை நெருக்கடி கொடுத்து செய்கிறார்கள் என்றார்.

  பெருநகர வளர்ச்சி குழுமத்தில் இல்லாத ஒரு பதவி உருவாக்கப்பட்டு அதில் ஒரு அதிகாரியை நியமித்து சாதிக்கிறார்கள் என்றும் கூறினார்.

  தனி நபர்களை பற்றியும், துறைகளில் நடந்துள்ள விவகாரங்கள் பற்றியும் விலாவாரியாக புகார் கூறி இருக்கிறார்கள். வழக்குகள் போட்டாலும் சந்திக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

  இந்த அளவுக்கு துறை ரீதியாக நடக்கும் அசைவுகள், தலையீடுகள் எல்லா விபரங்களும் அண்ணாமலையின் கைகளுக்கு அவ்வளவு எளிதில் எப்படி கிடைக்கிறது? இதுபற்றிய ரகசிய விசாரணையும், கண்காணிப்பும் தொடங்கி உள்ளது.

  இதுபற்றி அண்ணாமலையிடம், "நீங்கள் ஐ.பி.எஸ். அதிகாரியாக இருந்ததால் உயர் அதிகாரிகள் சிலர் உங்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்களா?" என்று நிருபர்கள் நேரடியாகவே கேட்டனர்.

  அதற்கு பதிலளித்த அவர், "நேர்மையாக பணியாற்ற ஆசைப்படும் பலர் நெருக்கடிக்கு ஆளாகிறார்கள். அந்த நெருக்கடியை தவிர்க்க அவர்களே வெளியே சொல்லி விடுகிறார்கள்" என்றார்.

  இந்த பதில் சாதாரணமானது. துறை ரீதியாக நடக்கும் செயல்பாடுகள் கை மாறுவது சாதாரண விசயமல்ல என்பது தெரிந்ததே.

  அடுத்ததாக இன்னும் சில துறைகளை பற்றிய ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், அது இப்போது வெளியிட்டதை விட 10 மடங்கு பெரிதாக இருக்கும் என்றும் காற்று வாக்கில் பேசி சென்றுள்ளார். அது மேலும் பலரது வயிற்றில் புளியை கரைத்துள்ளது.

  அரசியல் ரீதியாக குற்றச்சாட்டுகளை சமாளித்தாலும் தேவையற்ற சந்தேகங்களுக்கு இடமளிப்பதால் தகவல்கள் வெளியே கசிவதை தடுக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

  ஒவ்வொரு துறையிலும் ரகசியங்கள் காக்கப்பட வேண்டும். அரசு ஆவணங்கள் காக்கப்பட வேண்டும். விழிப்புடனும், கண்காணிப்புடனும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  சந்தேக அதிகாரிகளை கண்காணித்து வரும்படியும் கேட்டுக்கொண்டுள்ளனர். இதனால் அரசு துறைகள் உஷாராக உள்ளன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print