தொலைநோக்கு திட்டங்கள் இல்லாத பட்ஜெட் - முக ஸ்டாலின்

தமிழக பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்கள் இல்லை என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
முக ஸ்டாலின்
முக ஸ்டாலின்
Published on

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டசபை வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

ஓ.பன்னீர்செல்வம் வாசித்த 10-வது பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. மத்திய அரசை தமிழக அரசு எப்படி பின்பற்றுகிறது என்பதற்கு பட்ஜெட் உரை சாட்சி.

குறிப்பிட்ட சில அமைச்சர்களின் துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் கடன் தொகை 3 மடங்கு உயர்ந்துள்ளது.

பட்ஜெட்டில் அரசின் கடன் சுமை ரூ. 4.56  லட்சம் கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொருவர் தலை மீதும் ரூ. 57 ஆயிரம் கடன் சுமத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தொலை நோக்கு திட்டங்களும் இல்லை. வளர்ச்சி பணிகளும் இல்லை என தெரிவித்துள்ளார்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com