இன்றைய முக்கியச் செய்திகள்
தமிழக செய்திகள்

Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

மாலை மலர்

எங்களை சந்தேகித்து விமர்சனம் செய்தவர்களுக்கு நன்றி, இது வெறும் தொடக்கம்தான்: அபிஜீத் தீப்கே...

* ஜந்தர் மந்தரில் 37 நாட்கள் காத்திருந்த மக்கள் ஒவ்வொருவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.

* எங்களைச் சந்தேகித்து, விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றி.

இனி வினாத்தாள் கசிவு இருக்கக் கூடாது: புதிய கல்வி அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு மாணவர்கள் கோரிக்கை!...

*அனைவருக்கும் சமமான மற்றும் தரமான கல்வி வழங்கிட புதிய கல்வி அமைச்சருக்கு மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

•வினாத்தாள் கசிவில் ஈடுபடும் 'தேர்வு மாஃபியாக்கள்' மீதுகடுமையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கார்கில் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் மரியாதை

* போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கார்கில் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

* கார்கில் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.

ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே

* டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.

* மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.

சீனாவை அச்சுறுத்தும் 'நவுல்' புயல்: குவாங்டாங் கடலோரப் பகுதிக்கு சிவப்பு எச்சரிக்கை; விமானங்கள், ரயில்கள் ரத்து!...

* சீனாவின் தெற்கு கடலோரப் பகுதியை நோக்கி அதிவேகமாக நகர்ந்து வரும் 'நவுல் புயல் காரணமாக, நாட்டின் தேசிய வானிலை மையம் மிக உயர்ந்த அபாய எச்சரிக்கையான 'சிவப்பு எச்சரிக்கையை' விடுத்துள்ளது.

* நடப்பு ஆண்டின் 12-வது புயலான இது, குவாங்டாங் மாகாணத்தின் கடலோரப் பகுதியில் தீவிரமாகத் தாக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் பேரதிர்ச்சி: பெர்லின் 'ப்ரைட்' பேரணியில் காரை ஏற்றித் தாக்குதல்-ஒருவர் பலி; 16 பேர் படுகாயம்!...

* வெள்ளை நிற கார் ஒன்று கூட்டத்திற்குள் அதிவேகமாகப் புகுந்தது.

* 16 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டாஸ்மாக் பார் தொடங்குவதற்கான விதிகள் தளர்வு: தமிழக அரசு புதிய நடவடிக்கை!...

தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளுடன் இணைந்து இயங்கும் பார்களைத் தொடங்குவது மற்றும் உரிமம் வழங்குவது தொடர்பாகப் புதிய தளர்வுகளையும் விதிமுறை மாற்றங்களையும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஜந்தர் மந்தரில் அமைதி திரும்பியது: குப்பைகளை அகற்றிய கரப்பான் பூச்சி கட்சியினர்

* நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு பொறுப்பேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

* இதன்மூலம் கரப்பான் பூச்சி இளைஞர்களின் 36 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிந்திருக்கிறது.

உலக ஜூனியர் ஸ்குவாஷ்: முதல் முறை சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த அனாஹத் சிங்

* இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா கடந்த 2005-ம் ஆண்டில் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார்.

* இந்த மோதலில் அனாஹத் சிங் 11-3, 11-7, 11-9 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்றார்.

தேர்தலில் போட்டியிடும் வயது வரம்பை 21 ஆக குறைக்க வேண்டும்: தெலுங்கானாவில் தீர்மானம் நிறைவேற்ற ரேவந்த் ரெட்டி முடிவு

* ராகுல் காந்தி பிரதமரானால், Gen Z தலைவர் மத்திய அமைச்சர் ஆக முடியும் என்பதற்கு என்னால் உறுதி அளிக்க முடியும்.

* நான் இந்தியா பிளாக்கிடம் பேசுவேன். ஒவ்வொரு கட்சித் தலைவர்களையும் சந்திப்பேன்.

சபரிமலையில் புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தன் தேர்வு

* புதிய தந்திரியாக கண்டரரு பிரம்ம தத்தனை நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.

* தீர்மான அறிக்கையை கேரள ஐகோர்ட்டின் தனி அமர்வுக்கு அனுப்பி வைத்து அதற்கான ஆணை பெறப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.