ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விதான் இளைஞர்களின் போராட்டம்: ஜனநாயகத்திற்கான ஆக்சிஜன்- உத்தவ் தாக்கரே

மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர்.
Uddhav Thackeray
உத்தவ் தாக்கரே
Published on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு ஏற்படும் போதெல்லாம் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவிப்பார்கள். பின்னர் அந்த பிரச்சினை அப்படியே அடங்கிவிடும்.

2026-2027-ம் ஆண்டுக்கான UG மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அப்போது வினாத்தாள் லீக் ஆனது. இதனைத் தொடர்ந்து தேர்வு ரத்து செய்யப்பட்டு மீண்டும் தேர்வு நடத்தப்பட்டது.

இந்த முறை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நீட் கசிவு பிரச்சினையை கையில் எடுத்தது. தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஜூன் 20-ந்தேதி போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுவதும் இருந்து மாணவர்கள், இளைஞர்கள் ஆதரவு தெரிவித்தனர். இதன் தொடர்பாக நேற்று தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்தார். இது மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வெற்றியாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், சிவசேனா (UBT) தலைவர் உத்தவ் தாக்கரே, மாணவர்களின் போராட்டம் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளின் தோல்விகளை வெளிப்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

மக்களுக்குச் சிறை அல்லது துப்பாக்கிகளைக் கண்டு அச்சம் இல்லாதிருப்பது பாராட்டுக்குரியது. அதேவேளையில், இது ஆளும் கட்சிக்கு ஆபத்தான ஒன்றாகவும் உள்ளது.

ஆளும் கட்சியின் தோல்விகள்

இப்போராட்டங்கள், ஏறக்குறைய அழிவின் விளிம்பில் இருந்த ஜனநாயகத்திற்குப் புத்துயிர் அளித்துள்ளன.

CJP-யின் போராட்டம் என்பது ஆளும் கட்சியின் தோல்வி மட்டுமல்ல, எதிர்க்கட்சியின் தோல்வியும்கூட. இதை நான் முன்பே குறிப்பிட்டிருந்தேன். அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையை நாடு இழந்துவிட்டது.

டெல்லி முதல் மும்பை வரை, மக்கள் அச்சத்தைத் தாண்டி வந்துவிட்டதை நான் உணர்ந்துள்ளேன். இதுவரை துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டிருந்த மக்கள், இப்போது தங்கள் உயிருக்கு அஞ்சும் நிலையை உதறிவிட்டு வீதிகளில் இறங்கியுள்ளனர்.

மத்திய அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டது. அவர்கள் நாட்டை முற்றிலுமாகச் சீரழித்துவிட்டனர். இளைஞர்களைக் கரப்பான் பூச்சிகள் என்று அழைப்பது அவர்களை அவமதிப்பதாகும்.

தர்மேந்திர பிரதான் ராஜினாமாவைத் தொடர்ந்து மாணவர்கள் மீது எந்த வழக்கும் பதியக் கூடாது. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 முக்கிய கோரிக்கைகள் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் மத்திய அரசு முன் வைக்கப்பட்டது. இதில் வழக்கு பதியப்படாது என்ற கோரிக்கை ஏறு்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com