search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup"

    • இந்தியா இடம் பிடித்துள்ள குரூப் ஏ பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது.
    • முதல் போட்டியில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 1-ந்தேதி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் 20 அணிகள் விளையாடுகின்றன.

    இதனால் குட்டி குட்டி அணிகளுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. குட்டி அணிகளில் ஒன்று கனடா. குரூப் "ஏ" பிரிவில் கனடா இடம் பிடித்துள்ளது. முதல் போட்டியில் அமெரிக்காவுடன் மோதுகிறது. மேலும் அயர்லாந்து, பாகிஸ்தான், இந்தியாவுடன் விளையாட இருக்கிறது.

    இந்த நிலையில் கனடா அணி டி20 போட்டிக்கான ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளனர். கனடா அணியின் தேசியக்கொடியில் சிகப்பு வண்ணம் காணப்படும். அதை வலியுறுத்தும் வகையில் சிகப்பு நிறத்தில் ஜெர்சி அமைந்துள்ளது.

    • ஐபிஎல் போட்டி 26-ந்தேதி முடிவடையும் நிலையில், உலகக்கோப்பை போட்டி தொடங்க ஒரு வாரம் கூட இல்லை.
    • வழக்கமாக ஒவ்வொரு அணிகளும் இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடும்.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இருக்கும் 20 நாடுகள் தங்கள் அணியில் இடம்பெறும் வீரர்களை பட்டியலை வெளியிட்டுள்ளது. வங்காளதேச அணி அமெரிக்கா புறப்பட்டுள்ளது.

    பொதுவாக உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடும். அந்த வகையில் இந்தியா இரண்டு பயற்சி ஆட்டத்தில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மே 26-ந்தேதி முடிவடைகிறது. ஜூன் 1-ந்தேதி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இரண்டிற்கும் இடையில் ஒரு வார இடைவெளி கூட இல்லை.

    இந்த நிலையில் இந்தியா ஒரேயொரு பயிற்சி ஆட்டத்தில் மட்டும் விளையாடும் எனத் தெரிகிறது. நியூயார்க்கில் நடைபெறும் அந்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை எதிர்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்றைய தினம் (ஜூன் 1-ந்தேதி) அமெரிக்கா கனடாவை எதிர்கொள்ள இருக்கிறது.

    இந்தியா விளையாடும் லீக் போட்டிகள் நியூயார்க்கில் உள்ள மைதானத்தில் நடைபெற இருக்கிறது. பயணத்தை தவிர்க்க பயிற்சி ஆட்டமும் அங்கேயே நடைபெற வாய்ப்புள்ளது. அமெரிக்காவில் டல்லாஸ், நியூயார்க் மற்றும் மியாமி அருகில் உள்ள போர்ட் லார்டர்ஹில் ஆகிய மூன்று இடங்களில் மைதானங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    34 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கும் ஐசன்ஹோவர் பார்க் மைதானத்தை அதிகவேக ஒட்டப்பந்தைய வீரர் உசைன் போல்ட் அதிகாரப்பூர்வமாக இன்று திறந்து வைத்தார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 2 ஆம் தேதி துவங்குகிறது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்காக ஒவ்வொரு அணியும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

    மேலும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், அணிகள் ஒவ்வொன்றாக அமெரிக்கா புறப்பட்டன. சில தினங்களுக்கு முன்பு இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டு சென்றது. அந்த வரிசையில், தற்போது ஆசிய நாடுகளில் ஒன்றான வங்காளதேசம் கிரிக்கெட் அணி அமெரிக்கா புறப்பட்டது.

    அமெரிக்கா புறப்படும் முன் வங்காளதேசம் அணி வீரர்கள் அந்நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் நஜ்முல் ஹாசனுடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்த புகைப்படத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

    • அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
    • ரிசர்வ் வீரர்களாக அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ந் தேதி தொடங்குகிறது. இத்தொடரில் பங்கேற்கும் அணிகளையும் அந்ததந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன.

    அந்தவகையில் நடப்பு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் வங்காளதேச கிரிக்கெட் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

    அதன்படி வங்காளதேச அணியின் கேப்டனாக நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். அந்த அணியில் ஷகிப் அல் ஹசன், மஹ்முதுல்லா ரியாத், சவுமியா சர்கார், முஸ்தாபிசுர் ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    வங்காளதேச அணி விவரம்:-

    நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ (கேப்டன்), தஸ்கின் அகமது, லிட்டன் தாஸ், சவுமியா சர்கார், தன்சித் ஹசன் தமீம், ஷாகிப் அல் ஹசன், தவ்ஹித் ஹ்ரிடோய், மஹ்முதுல்லா ரியாத், ஜேக்கர் அலி அனிக், தன்வீர் இஸ்லாம், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிபுல் இஸ்லாம், தன்சிம் ஹசன் சாகிப்.

    ரிசர்வ் வீரர்கள்; அபிப் ஹொசைன், ஹசன் மஹ்மூத்

    • டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் துவங்குகிறது.
    • அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் 2 ஆம் தேதி துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் கனடா நாடுகள் மோதுகின்றன.

    உலகக் கோப்பை தொடருக்காக ஒவ்வொரு அணியும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. இந்த நிலையில், உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இலங்கை கிரிக்கெட் அணி அமெரிக்காவின் நியூ யார்க் நகருக்கு புறப்பட்டது.

    இலங்கை அணி அமெரிக்கா புறப்பட்டதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. 

    • வீடியோ வடிவில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது.
    • உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா.

    டி20 உலகக் கோப்பை தொடர் அடுத்த மாத துவக்கத்தில் நடைபெற இருக்கிறது. ஜூன் மாதம் முதல் வாரத்தில் துவங்கும் டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. வீடியோ வடிவில் ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் புதிய ஜெர்சி குறித்து ரசிகர்கள் கலவையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

     


    இந்த நிலையில், இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுக விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. பி.சி.சி.ஐ. தலைவர் ஜெய் ஷா, இந்திய டி20 அணி கேப்டன் ரோகித் சர்மா மற்றும் இந்திய அணியின் ஸ்பான்சர் நிறுவனத்தை சேர்ந்த அதிகாரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோவை பி.சி.சி.ஐ. தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது.



    • ஐ.பி.எல் தொடரில் ஆடி வரும் ஜோஷ் லிட்டில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.
    • டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29 ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    29 நாட்கள் நடைபெறும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான (ஐசிசி) சமீபத்தில் வெளியிட்டது. டி-20 உலகக் கோப்பை போட்டி மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்கின்றன.

    ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன், அமெரிக்கா, உகாண்டா, ஸ்காட்லாந்து போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன.

    இந்நிலையில் இந்த தொடரில் கலந்து கொள்ள உள்ள அயர்லாந்து கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் வரும் 10ம் தேதி முதல் 14ம் தேதி வரை பாகிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், இதையடுத்து அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகள் நெதர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முத்தரப்பு டி20 தொடரிலும் ஆட உள்ளன.


    இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான தொடர், முத்தரப்பு டி20 தொடர் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அயர்லாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.பி.எல் தொடரில் ஆடி வரும் ஜோஷ் லிட்டில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியில் மட்டும் இடம் பிடித்துள்ளார்.

    பாகிஸ்தான் மற்றும் முத்தரப்புக்கு டி20 தொடருக்கான அயர்லாந்து அணி விவரம்; பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), மார்க் அடெய்ர், ரோஸ் அடெய்ர், ஆண்ட்ரூ பால்பிர்னி, கர்டிஸ் கேம்பர், கரேத் டெலானி, ஜார்ஜ் டோக்ரெல், கிரஹாம் ஹியூம், பேரி மெக்கார்த்தி, நீல் ராக், ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர், பென் ஒயிட், கிரேக் யங்.

    • இந்திய அணியில் இன்னும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
    • பெரும்பாலான அணிகளில் நல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    உலகக் கோப்பைக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம் பிடித்துள்ளனர். வேகப்பந்து வீச்சாளர்கள் 3 பேர் இடம் பிடித்துள்ள நிலையில் சுழற்பந்து வீச்சில் நான்கு பேர் ஏன்? என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இடது கை சுழற்பந்து வீச்சாளர்களான ஜடேஜா, அக்சார் பட்டேல் ரிஸ்ட் ஸ்பின்னர்களான சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    நான்கு ஸ்பின்னர்கள் எதற்கு என்பது போட்டி நடைபெறும் போது தெரியும் என ரோகித் சர்மா விமர்சனத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

    இந்த நிலையில் இந்திய அணியில் நான்கு சுழற்பந்து வீச்சாளர்கள் என்பது ஆச்சர்யம் அளிக்கவில்லை என வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வால்ஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக வால்ஷ் கூறியதாவது:-

    இந்தியா 4 சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளதால் நான் ஆச்சர்யம் படவில்லை. அது அவர்களின் பலத்தை காட்டுகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்துள்ளது. மாறுபட்ட கண்டிசனில் எல்லோரும் அணியை சமநிலைப்படுத்த வேண்டும்.

    இந்திய அணியில் இன்னும் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். பெரும்பாலான அணிகள் அதேபோன்று உள்ளன. எனவே இது மிகவும் போட்டி நிறைந்த தொடராக இருக்கும். பெரும்பாலான அணிகளில் நல்ல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.

    இந்த தொடர் பேட்ஸ்மேன்களுக்கு சாதமான வகையில் இருக்க போகிறது. ஆனால் வெற்றி பெறப்போவது யார் என்பது கணிப்பது கடினம். பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என கணிப்பது கடினம். திறமையை சிறப்பாக வெளிப்படும் அணி வெற்றி பெறும்.

    இவ்வாறு வால்ஷ் தெரிவித்துள்ளார்.

    • வேக மாறுபாடுகளுடன் யார்க்கர் பந்துகளை மிக நேர்த்தியாக வீசும் திறன் கொண்டவர் நடராசன்
    • ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடும்போது அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்

    வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர்.

    ஆனால் ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    இந்நிலையில், "டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் நடராஜன் இல்லாதது ஆச்சரியமாக உள்ளது" என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் தெரிவித்துள்ளார்.

    ஜியோ சினிமாவிடம் பேசிய வாட்சன், "வேக மாறுபாடுகளுடன் யார்க்கர் பந்துகளை மிக நேர்த்தியாக வீசும் திறன் கொண்டவர் நடராசன். ஆட்டத்தின் முக்கிய தருணங்களில் பேட்டர்கள் அதிரடியாக விளையாடும்போது அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார். நடராஜன் சிறப்பாக விளையாடும் போது, இந்திய கிரிக்கெட் மற்றும் உலக கிரிக்கெட்டில் உள்ள அனைவரும் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள்" என்று பேசியுள்ளார்.

    • டி20 உலகக் கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெறுகிறது.
    • இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    ஐ.சி.சி.-யின் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்க இருக்கிறது. இந்த தொடருக்காக 15 பேர் அடங்கிய அணியை ஒவ்வொரு அணியும் அறிவித்து வருகின்றன.

    இதுவரை இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணியை அறிவித்துவிட்டன.

    அந்த வகையில், வெஸ்ட் இண்டீஸ் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. இந்த அணிக்கு ரோவ்மேன் பவல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள்:

    ரோவ்மேன் பவல், அல்சாரி ஜோசப், ஜான்சன் சார்லஸ், ரோஸ்டன் சேஸ், ஷிம்ரன் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப், அகீல் ஹொசைன், ஷமர் ஜோசப், பிரண்டன் கிங், குடாகேஷ் மோட்டி, நிக்கோலஸ் பூரன், ஆண்ட்ரே ரசல், ஷெர்பேன் ரூதர்போர்ட் மற்றும் ரோமரியோ ஷெப்பர்ட்.

    • போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும்.
    • தேர்வாளர்கள் கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை. டி20 உலகக் கோப்பைக்கான எதிர்கால திட்டத்தில் 26 வயதான ரிங்கு சிங் இடம் பிடித்திருந்தார். என்றாலும் பிசிசிஐ நான்கு சுழற்பந்து வீச்சாளர்களுடன் செல்ல திட்டமிட்டதால் ரிங்கு சிங்கிற்கு இடம் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இது தொடக்கம்தான், ரிங்கு சிங் மனம் தளரக் கூடாது என கங்குலி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கங்குலி கூறுகையில் "போட்டி நடப்பது வெஸ்ட் இண்டீஸ். ஆடுகளங்கள் மெதுவாகவும், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாகவும் இருக்கும். ஆகவே, அவர்கள் (தேர்வாளர்கள்) கூடுதலாக ஒரு ஸ்பின்னருடன் (4 பேர்) செல்ல விரும்பியுள்ளனர். இதனால் ஒருவேளை ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், இது தொடக்கம்தான். இதற்காக அவர் மனம் தளரக் கூடாது.

    தேர்வு செய்யப்பட்டுள்ளது சிறப்பான அணி. அனைவரும் மேட்ச் வின்னர்கள். 15 பேரும் தேர்வுக்கான வீரர்கள். ரோகித் சர்மா, ராகுல் டிராவிட் சிறந்த ஆடும் லெவனை தேர்வு செய்வார்கள் என்பதை நான் நம்புகிறேன்" என்றார்.

    • 20 அணிகள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கின்றன.
    • ஜூன் 2-ந்தேதி தொடங்கி ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. ஜூன் 2-ந்தேதி தொடங்கி ஜூன் 29-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    20 அணிகள் பங்கேற்கும் போட்டி தொடங்குவதற்கு இன்னும் 30 நாட்களே உள்ளன. பங்கேற்கும் நாடுகள் தங்களுடைய அணிகளை அறிவித்து வருகின்றன.

     

    இந்த நிலையில் ஐசிசி டி20 உலகக் கோப்பைக்கான "anthem" இன்று வெளியிடப்பட்டுள்ளது. அவுட் ஆஃப் திஸ் வேர்ல்டு (Out Of This World) என்ற தலைப்பில் சீன் பால் மற்றும் கெஸ் பாடியுள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் என்றாலே கடற்கரைதான். கடற்கரையில்தான் எதிர்கால வீரர்களாக வரவிருக்கும் சிறுவர்கள் விளையாடுவார்கள். அந்த காட்சிகள் இதில் இடம் பிடித்துள்ளது. இந்திய அணியின் விராட் கோலி அடிக்கும் ஷாட், கிறிஸ் கெய்லின் நடனம் ஆகியவையும் இடம் பிடித்துள்ளன.

    இந்த anthem 3.09 நிமிடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

    ×