என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    • இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் சிம்பு நடித்து வருகிறார்.
    • இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.

    இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாக உள்ளது.

    'அரசன்' படத்தின் புரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

    இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா தனது இன்ஸ்டாகிராமில் வடசென்னை படத்தில் நடித்த சந்திரா கதாபாத்திர புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதன்மூலம் அரசன் படத்தில் சந்திராவாக ஆண்ட்ரியா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

    • தி ராஜா சாப் பாடல் வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது.
    • கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார்.

    மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் அடுத்தாண்டு ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தற்போது இபபடத்தில் நிதி அகர்வாலுடன் பிரபாஸின் காதல் பாடலான 'சஹானா' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

    இந்த வெளியீட்டு விழா ஐதராபாத்தில் உள்ள பிரபலமான மாலில் நடைபெற்றது. அதில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். அப்போது ரசிகர்கள் பாதுகாப்பு தடுப்புகளை மீறி நடிகை நிதி அகர்வாலை பார்க்க முன் வந்ததால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

    நிகழ்ச்சியை முடித்துவிட்டு நடிகை அங்கிருந்து வெளியே வரும்போது ரசிகர்கள் சூழ்ந்துவிட்டனர். சிலர் அவரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த கட்டுக்கடங்காத கூட்டத்தில் சிக்கி திணறிய நடிகை நிதி அகர்வால் பின்பு காரில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது.
    • பட வெளியீட்டிற்கு உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது.

    'மெய்யழகன்' படத்திற்கு பிறகு, நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'வா வாத்தியார்'. இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் எல்லாம் எப்போதோ வெளியாகி கவனம் ஈர்த்தன. ஆனால் ரிலீஸுக்கு தயாராகியும் படம் நீண்ட நாட்களாக வெளிவராமல் உள்ளது. காரணம் படத்தை ஸ்டுடியோ க்ரீன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இந்நிறுவனத்தின் உரிமையாளரான ஞானவேல் ராஜா திவாலான தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர் என்பவரிடம் இருந்து ரூ.21 கோடியை கடனாகப் பெற்றதாக கூறப்படுகிறது. இப்பணத்தை திருப்பி தரும்வரை படத்தை வெளியிடக்கூடாது என, அர்ஜுன்லால் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை உறுதி செய்து உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். இதனால் படவெளியீடு இன்னும் தள்ளிப்போகும் வாய்ப்புகள் உருவாகி உள்ளது.

    உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து ஸ்டுடியோ கிரீன் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என தெரிவித்துள்ளது. 

    • இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.
    • கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

    திரைத்துறையின் உயரிய அங்கீகாரமாக ஆஸ்கார் விருதுகள் பார்க்கப்படுகிறது. உலகம் முழுவதிலும் இருந்து படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    வருடந்தோறும் அமெரிக்காவில் இந்த விழா பிரம்பாண்டமாக நடத்தப்படுகிறது. உலகெங்கிலும் இருந்து திரைபிரபலங்கள் அமெரிக்காவில் கூடுவர்.

    அமெரிக்காவின் ABC தொலைக்காட்சி இந்த ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பி வந்தது. 2028 வரை ஆஸ்கார் விழாவை ஒளிபரப்பும் உரிமையை ABC தொலைக்காட்சி நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது. 2028-ல் ஆஸ்கார் விருதின் 100-வது ஆண்டு விழா கொண்டாடப்பட உள்ளது.

    இந்நிலையில் 2029-ஆம் ஆண்டு முதல் 2033 வரை ஆஸ்கார் விருதுகளின் உலகளாவிய ஒளிபரப்பு உரிமையை யூடியூப் தளம் பெற்றுள்ளது.

    கூகுள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப் தளம் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களைக் கொண்டுள்ளது.

    இந்த ஒப்பந்த காலத்தில் பிரபலங்களின் சிவப்பு கம்பள வரவேற்பு, விருதளிக்கும் நிகழ்வு என ஆஸ்கார் தொடர்பான அனைத்து நிகழ்வுகளும் யூடியூப்பில் மட்டுமே வெளியாகும்.

    இதற்காக யூடியூப்பில் பிரத்யேக டிஜிட்டல் தளம் ஒன்றும் உருவாக்கப்பட உள்ளது. இதன்படி ஆஸ்கார் விருதுகள் விழா உலகெங்கிலும் இலவசமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும்.

    இந்த மாற்றத்தினால் ஆஸ்கார் விருதுகளின் பார்வையாளர் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது ஆஸ்கார் விருதுகளுக்கு ஒரு புதிய பரிமாணத்தைத் தரும் என்றும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களைச் சென்றடைய இது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என்று ஆஸ்கார் அகாடெமி தெரிவித்துள்ளது. 

    • 79 வயதாகும் ஸ்பீல்பெர்க் 'டிஸ்க்ளோஷர் டே படத்தை இயக்கியுள்ளார்.
    • இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது சாத்தியமற்றது.

    உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் நீண்ட நாட்களுக்குப் பிறகு மீண்டும் சைன்ஸ் பிக்ஷன் புனைகதை பக்கம் திரும்பியுள்ளார்.

    1982 இல் இவர் வேற்றுகிரகவாசி பற்றி இயக்கிய "E.T. தி எக்ஸ்டரா டெரஸ்ட்டியல்- " படம் உலகப் பிரசித்தம். தொடர்ந்து ஜுராசிக் பார்க் உட்பட பல்வேறு ஜானர்களில் பல கிளாசிக் படங்களை இயக்கினார் ஸ்பீல்பெர்க்.

    79 வயதாகும் ஸ்பீல்பெர்க் தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' என்ற வேற்றுகிரகவாசிகள் பற்றிய சைன்ஸ் பிக்ஷன் படத்தை இயக்கியுள்ளார்.

    ஜோஷ் ஓ'கானர், எமிலி பிளண்ட், கோல்மன் டொமிங்கோ மற்றும் வயட் ரஸ்ஸல் போன்ற பிரபல நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தற்போது 'டிஸ்க்ளோஷர் டே' டீசர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

    "இந்த பரந்த பிரபஞ்சத்தில் நாம் மட்டுமே அறிவார்ந்த உயிரினங்களாக இருப்பது என்பது அறிவியல் ரீதியாக சாத்தியமற்றது" என்று முன்பு ஒருமுறை ஸ்பீல்பெர்க் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    இப்படம் ஜூன் 12, 2026 அன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. 

    • மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திங்களில் நடித்துள்ளனர்.
    • ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    மாருதி இயக்கத்தில் பிரபாஸ் தி ராஜாசாப் திரைப்படத்தில் நடித்துள்ளார். பிரபாஸுடன் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், மற்றும் ரிதி குமார் முன்னணி பெண் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தை டிஜி விஷ்வா பிரசாத் தயாரிக்கவுள்ளார். படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார்.

    மிகவும் பிரம்மாண்டமாக ஹாரர் காட்சிகள் படத்தில் இடம் பெற்றுள்ளது டீசர் மூலம் தெரிந்தது. பிரபாஸ் மிகவும் ஜாலியாக நகைச்சுவைத்தனத்துடன் நடித்துள்ளார்.

    இப்படம் பான் இந்தியன் படமாக இந்தி, தமிழ், தெலுங்கும், மலையாளம், கன்னடம் என அனைத்து மொழியிலும் அடுத்தாண்டு ஜனநாயகனுக்கு போட்டியாக ஜன. 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    தற்போது இபபடத்தில் நிதி அகர்வாலுடன் பிரபாஸின் காதல் பாடலான 'சஹானா' வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

    • இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
    • இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் மறைந்த விஜயகாந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் நடிப்பில் வெளியாக உள்ள படம் 'கொம்புசீவி'. இப்படத்தில் சரத்குமார், காளி வெங்கட் மற்றும் கல்கி ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    யுகபாரதி, பா. விஜய், சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு ஆகியோரின் பாடல் வரிகளுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை பால சுப்ரமணியன் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளார். இப்படம் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

    இதற்கு முன்னதாக, இப்படத்தின் 'உன்ன நான் பாத்தா', 'வஸ்தாரா' ஆகிய பாடல்கள் வெளியானது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தற்போது 'கொம்புசீவி' படத்தின் 3-வது பாடலான 'கருப்பன்' வெளியாகி உள்ளது. பாலா சிவசாமி எழுதியுள்ள பாடல் வரிகளுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க மகாலிங்கம் பாடியுள்ளார். 



    • 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.
    • சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது

    98வது ஆஸ்கர் அகாடமி விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15 இல் நடைபெற உள்ளது.இந்நிலையில், 2026 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கான போட்டிக்கு HOMEBOUND திரைப்படம் தேர்வாகியுள்ளது.

    சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவின் கீழ் நாமினேஷனுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளதால் இந்திய ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கொரோனா லாக்டவுனால் பாதிக்கப்படும் 2 இளைஞர்கள் பற்றிய கதையை உயிரோட்டத்துடன் இப்படத்தில் காட்டியுள்ளனர். குறிப்பாக தலித் மற்றும் முஸ்லிம் இளைஞர்கள் இந்திய சமூகத்தில் எப்படி பாகுபாடோடு நடத்தப்படுகிறார்கள் என்பதை இப்படம் நம் கண்முன் எடுத்துக்காட்டியது என்றால் அது மிகையாகாது

    • பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
    • பைசன் படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'பைசன்'. இப்படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கபடி வீரரின் வாழ்க்கையை தத்துரூபமாக வெளிப்படுத்தி உள்ள 'பைசன்' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    பைசன் திரைப்படம் உலகளவில் ரூ.70 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. குறிப்பாக இப்படத்தில் துருவ் விக்ரமின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

    இந்நிலையில், 'பைசன்' திரைப்படத்தில் நடித்ததற்காக, துருவ் விக்ரம் தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் இந்தியாவின் 2025-ஆம் ஆண்டின் சிறந்த கலைஞர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர் அட்டைப்படத்தில் பாலிவுட் நடிகர் விக்கி கவுசல், நடிகைகள் கிருத்தி சனோன், ருக்மிணி வசந்த், கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோருடன் துருவ் விக்ரமும் இடம்பிடித்துள்ளார்.

    • ஜன நாயகன் படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது
    • இப்படத்திற்கு அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

    ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில், உருவாகி வரும் படம் ஜன நாயகன். இப்படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் வாசுதேவ் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் படத்திற்கு இசையமைக்கிறார்.

    அரசியலால் விஜய் நடிக்கும் கடைசிப் படம் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடலான "தளபதி கச்சேரி" வெளியாகி அவரது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து படத்தின் இறுதிக்கப்பட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடல் ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

    கடந்த 12ம் தேதி அன்று படையப்பா ரீ ரிலீஸ் ஆனது.

    கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டில் வெளியான படம் படையப்பா.நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மறைந்த சவுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

    தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக் பஸ்டர் படங்களில் படையப்பாவும் ஒன்று. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

    நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் மற்றும் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக கடந்த 12ம் தேதி அன்று படையப்பா ரீ ரிலீஸ் ஆனது. ரஜினி நிறைய சம்பாதித்து தன் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வருகிறார், அங்கோ ரஜினியின் குடும்பம் தான் பெரிய தலைக்கட்டு.

    அவர்கள் தான் ஊரில் இருக்கும் அனைவரின் திருமணத்தையும் ஆறுபடையப்பன் முன்பு நடத்தி வைக்கின்றனர். அதிலும் ஆண்-பெண் இருவர் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கும், அப்படியில்லை என்றால் அந்த திருமணம் நடக்காது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

    இந்த நேரத்தில் ரஜினி அந்த ஊர் பெண் சௌந்தர்யாவை காதலிக்க, ரஜினியின் முறை பெண் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை காதலிக்க ரஜினியோ சௌந்தர்யாவை திருமணம் செய்கிறார். பிறகு என்ன நீலாம்பரி எப்படியெல்லாம் படையப்பனை பழி வாங்க வேண்டும் என 18 வருடம் கழித்தும் அதே பகையில் வளர பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

    1996ம் ஆண்டில் படையப்பா திரைப்படம் உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு, 2கே தலைமுறையினர் மத்தியில் படம் ரீ ரிலீஸ் ஆனாலும், மவுசு குறையான படமாக படையப்பா இருக்கிறது.

    --கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டில் வெளியான படம் படையப்பா.நடிகர் ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன், சிவாஜி கணேசன், மறைந்த சவுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமிழ் சினிமா வரலாற்றில் பிளாக் பஸ்டர் படங்களில் படையப்பாவும் ஒன்று. ஏ.ஆர்.ரகுமானின் இசையில் உருவான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்.

    நடிகர் ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாள் மற்றும் 50 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக கடந்த 12ம் தேதி அன்று படையப்பா ரீ ரிலீஸ் ஆனது.

    படத்தின் கதை

    ரஜினி நிறைய சம்பாதித்து தன் சொந்த ஊருக்கு விடுமுறைக்கு வருகிறார், அங்கோ ரஜினியின் குடும்பம் தான் பெரிய தலைக்கட்டு.

    அவர்கள் தான் ஊரில் இருக்கும் அனைவரின் திருமணத்தையும் ஆறுபடையப்பன் முன்பு நடத்தி வைக்கின்றனர். அதிலும் ஆண்-பெண் இருவர் சம்மதத்துடன் தான் இந்த திருமணம் நடக்கும், அப்படியில்லை என்றால் அந்த திருமணம் நடக்காது என்ற எழுதப்படாத சட்டம் உள்ளது.

    இந்த நேரத்தில் ரஜினி அந்த ஊர் பெண் சௌந்தர்யாவை காதலிக்க, ரஜினியின் முறை பெண் ரம்யா கிருஷ்ணன் ரஜினியை காதலிக்க ரஜினியோ சௌந்தர்யாவை திருமணம் செய்கிறார். பிறகு என்ன நீலாம்பரி எப்படியெல்லாம் படையப்பனை பழி வாங்க வேண்டும் என 18 வருடம் கழித்தும் அதே பகையில் வளர பிறகு என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

    படையபப்பா வசூல்

    1996ம் ஆண்டில் படையப்பா திரைப்படம் உலகம் முழுவதும் 60 கோடி வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. 25 ஆண்டுகளுக்கு பிறகு, 2கே தலைமுறையினர் மத்தியில் படம் ரீ ரிலீஸ் ஆனாலும், மவுசு குறையான படமாக படையப்பா இருக்கிறது.

    • தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்ததான், சிக்கலாக்க அல்ல.
    • தொழில்நுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    தவறான முறையில் ஏஐ பயன்பாடு இருப்பதாக நடிகை ஸ்ரீலீலா வேதனை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து நடிகை ஸ்ரீலீலா கூறியதாவது:-

    AI-ஆல் உருவாக்கப்படும் தவறான விஷயங்களை ஆதரிக்க வேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.

    தொழில்நுட்பத்தை நல்லதற்கு பயன்படுத்துவதற்கும், தவறான முறையில் பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது.

    தொழில்நுட்பம் வாழ்க்கையை எளிமைப்படுத்ததான், சிக்கலாக்க அல்ல.

    என்னுடைய வேலையில் கவனம் செலுத்தியதால் என்னால் இணையத்தில் நடந்தவற்றை மற்றவர்களின் மூலமே தெரிந்து கொள்ள முடிந்தது.

    ஆனால் இது அருவருப்பாக உள்ளது. அனைவரும் எங்களுக்காக துணை நிற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×