என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வட கொரியா"

    • மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.
    • அமெரிக்காவும் தென் கொரியாவும் இணைந்து நடத்தி வரும் ராணுவப் பயிற்சிக்கு எதிர்ப்பு.

    ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் போர், மத்திய கிழக்கு பதற்றம், உக்ரைன் - ரஷியா போர் என உலகம் அசாதாரண சூழலில் இருந்து வரும் சூழலில் வட கொரியா வழக்கம்போல ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.   

    ஆனால் இந்த முறை ஜப்பான் கடற்கரைப் பகுதியை நோக்கி ஒரே நேரத்தில் சுமார் 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி வட கொரியா பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    தென்கொரியாவின் தகவலின்படி, வட கொரியாவின் சுனான் (Sunan) பகுதியிலிருந்து மதியம் 1:20 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன.

    சுமார் 10 ஏவுகணைகள் ஒரே நேரத்தில் ஏவப்பட்டுள்ளன. இது வடகொரியாவின் வழக்கமான சோதனைகளை விடப் பெரிய அளவிலான நடவடிக்கையாக கருதப்படுகிறது.

    இந்த ஏவுகணைகள் ஜப்பான் கடற்பகுதியை நோக்கிச் சென்றன. அவை ஜப்பானின் பிரத்யேக பொருளாதார கடல் மண்டலத்திற்கு வெளியே விழுந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

    இந்த ஏவுகணை வீச்சு குறித்து ஆய்வு செய்யவும், ஏதேனும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதைச் கண்டறியவும், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் அவசரக்கால குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து நடத்தி வரும் வருடாந்திர ராணுவப் பயிற்சிக்கு தனது எதிர்ப்பைக் காட்டவே வடகொரியா இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. 

    இந்தப் பயிற்சிகள் தொடர்ந்தால் பயங்கரமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று வடகொரியா ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    ஈரான் மீதான அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலை வட கொரியா கடுமையாக கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • வட கொரியா- சீனா இடையிலான ரெயில் சேவை கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டது.
    • வருகின்ற வியாழக்கிழமை முதல் மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்படுகிறது.

    வடகொரியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் பயணிகள் ரெயில் சேவை இருந்து வந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் இந்த சேவை நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் வருகிற வியாழக்கிழமை முதல் சீனாவின் பீஜிங்கில் இருந்து வடகொரியாவின் பியாங்யாங் நகருக்கு பயணிகள் ரெயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என சீனா தெரிவித்துள்ளது. இநத ரெயில் வாரத்திற்கு நான்கு முறை இயக்கப்படும்.

    தினசரி ரெயில் சேவை டான்டோங் என்ன சீனாவின் எல்லையோர நகரில் இருந்து பியாங்யாங்கிற்கு இயக்கப்படும் என சீனாவின் ரெயில்வே ஆணையம் தெரிவித்துள்ளது.

    கடல் பாதுகாப்பின் புதிய சின்னம் என்று அவர் தெரிவித்தார்.

    அணுசக்தி போட்டி காரணமாக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த சனிக்கிழமை முதல் தாக்குதல் நடைபெற்று வரும் நிலையில், ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் போர் கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல் ஏவுகணை சோதனையை மேற்பார்வை செய்ததாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்தது.

    வடகொரியாவின் நம்போ துறைமுக நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இருந்து கடலில் இருந்து தரையில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை கிம் மேற்பார்வையிட்டதாக வட கொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நேற்று (புதன்கிழமை) கடலில் இருந்து தரைக்கு ஏவுகணைகளை ஏவுவதை கிம் மேற்பார்வையிட்டார். மேலும் இந்த சோதனையை புதிய போர்க்கப்பலின் திறன்களின் "முக்கிய" அங்கமாக மதிப்பிட்டார், இது தனது நாட்டிற்கான "கடல் பாதுகாப்பின் புதிய சின்னம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசும் போது, "இந்த வெற்றிகள் அனைத்தும் நமது கடல்சார் இறையாண்மையைப் பாதுகாப்பதில் ஒரு தீவிர மாற்றத்தை உருவாக்குகின்றன, இவற்றை அரை நூற்றாண்டு காலமாக நாம் அடையாத ஒன்று," என்று தெரிவித்தார்.

    • கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார்.
    • 1948 இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்தனர்.

    வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது 13 வயது மகள் கிம் ஜு யே-வை தனது அரசியல் வாரிசாக அறிவித்துள்ளதாக தென் கொரியா தெரிவித்துள்ளது.

    அடுத்த அதிபராக நியமிக்கப்பட வேண்டியவர் என்ற நிலையை கிம் ஜு யே எட்டியுள்ளதாகத் தென்கொரியாவின் தேசிய உளவு அமைப்பான NIS தெரிவித்துள்ளது.

    2012 ஆம் ஆண்டு பிறந்த ஜு யே, 2022 நவம்பரில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையின்போது முதன்முதலில் பொதுவெளியில் தோன்றினார்.

    அதைத்தொடர்ந்து கிம் ஜு யே இப்போது பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மட்டுமின்றி, அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளிலும் தனது கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

    சமீபத்திய ராணுவ அணிவகுப்புகள் மற்றும் அரசு கூட்டங்களில், தனது தந்தை கிம் ஜோங் உன்னுக்கு அடுத்தபடியாக அவருக்கு மிக உயரிய மரியாதை வழங்கப்படுவதை NIS சுட்டிக்காட்டியுள்ளது.


    இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஆளும் தொழிலாளர் கட்சியின் 9-வது மாநாட்டில், அவருக்கு அதிகாரப்பூர்வமான பதவி அல்லது பட்டம் வழங்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.

    இது நடந்தால், 1948 இல் வடகொரியா உருவானது முதல் ஆண்கள் மட்டுமே ஆட்சி செய்து வந்த கிம் வம்சத்தில், முதல்முறையாக கிம் ஜு யே பெண் அதிபராக பொறுப்பேற்பார்.

    தென்கொரிய உளவு அமைப்பின் இந்த அறிக்கை சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வரும் சூழலில் இது குறித்து வடகொரியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

    தற்போது 42 வயதாகும் கிம் ஜாங் உன் கடந்த 2011 டிசம்பரில் தனது தந்தை கிம் ஜோங் இல் மறைவுக்கு பின் வட கொரிய அதிபராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம்.
    • எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கித் தயாராக உள்ளன.

    வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதல் நடத்திய அமெரிக்கா, அந்நாட்டு அதிபர் நிகொலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை சிறைபிடித்தது. அவர்கள் அமெரிக்காவுக்கு நாடு கடதப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    மேலும் வெனிசுலா எண்ணெய் இருப்பை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் என்றும், அமெரிக்காவுக்கு சாதகமான அரசு அமையும் வரை அங்கு அமெரிக்க ராணுவம் தங்கியிருக்கும் என்றும் டிரம்ப் அறிவித்தார்.

    வெனிசுலாவில் பதற்றமான சூழல் நிலவுவதால் அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலுக்கு ரஷியா, ஈரான், சீனா உள்ளிட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

    இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

    வடகொரியாவின் அரசு ஊடகம் மூலம் கிம் ஜாங் உன் வெளியிட்ட அறிக்கையில்,

    "அமெரிக்கா தனது ஏகாதிபத்திய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஒரு நாட்டின் இறையாண்மையைப் பறித்துள்ளது. எங்களது நெருங்கிய நண்பரான மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

    ஒரு நாட்டின் தலைவரைக் கடத்துவது சர்வதேச பயங்கரவாதம். அமெரிக்கா உலக நாடுகளுக்குப் பாடம் சொல்லும் தகுதியை இழந்துவிட்டது. இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல்.

    தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு இது ஒரு எச்சரிக்கை பாடம். ஆனால், வடகொரியா அப்படிப்பட்டது அல்ல. எங்களது நட்பு நாடுகளுக்கு ஆபத்து ஏற்பட்டால், நாங்கள் வேடிக்கை பார்க்க மாட்டோம்.

    டிரம்பின் இந்தச் செயல் உலகை மற்றுமொரு பேரழிவை நோக்கித் தள்ளுகிறது. மூன்றாம் உலகப்போர் தொடங்க அமெரிக்கா விரும்பினால், அதை எதிர்கொள்ள நாங்கள் தயார். எங்களது ஏவுகணைகள் சரியான இலக்கை நோக்கித் தயாராக உள்ளன.

    உலக நாடுகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து அமெரிக்காவின் இந்த அராஜகப் போக்கை எதிர்க்க வேண்டும். இல்லையெனில், அடுத்த இலக்கு நீங்களாகக் கூட இருக்கலாம்.

    டிரம்ப் நெருப்போடு விளையாடுகிறார். மதுரோவின் கைது என்பது ஒரு தனிமனிதனின் கைது அல்ல, அது உலக நாடுகளின் சுதந்திரத்தின் மீதான தாக்குதல். இதற்கான விலையை அமெரிக்கா மிகக் கடுமையாகக் கொடுக்க வேண்டியிருக்கும்." என்று தெரிவித்துள்ளார். 

    • இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.
    • நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

    வடகொரியத் அதிபர் கிம் ஜாங் உன், தனது ஆயுதக் களஞ்சியத்தில் உள்ள மிகவும் சக்திவாய்ந்த ஆயுதத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தினார்.

    ஆளும் தொழிலாளர் கட்சியின் 80வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நேற்று இரவு பியோங்யாங்கில் நடைபெற்ற பெரிய அளவிலான இராணுவ அணிவகுப்பின் போது இந்த ஆயுதக் காட்சி நடந்தது.

    இந்த நிகழ்வில் சீனா பிரதமர் லி கெகியாங், ரஷிய பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ், மற்றும் வியட்நாமியத் தலைவர் டோ லாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    இந்த இராணுவ அணிவகுப்பில் வடகொரியா 'ஹ்வாசொங்-20' எனப்படும் அதன் சமீபத்திய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை காட்சிப்படுத்தியது. இந்த ஏவுகணை நாட்டில் இருப்பதிலேயே சக்திவாய்ந்தது என அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது. 

    இந்த ஏவுகணையுடன், நீண்ட தூர பயண ஏவுகணைகள், டிரோன் ஏவுதள வாகனங்கள் மற்றும் பிற தரையிலிருந்து வான் மற்றும் தரையிலிருந்து தரைக்கு ஏவுகணைகளும் அணிவகுப்பில் காட்சிப்படுத்தப்பட்டன.

    நிகழ்வில் பேசிய கிம் ஜாங் உன், உக்ரைனில் ரஷியாவின் பக்கம் போராடும் வட கொரிய வீரர்களை மறைமுகமாகப் பாராட்டும் வகையில், சர்வதேச நீதிக்காக வெளிநாட்டுப் போர்க்களங்களில் தனது படைகளின் வீரமிக்க போராட்ட உணர்வு அற்புதமானது என்று கூறினார்.

    ரஷியாவுக்காக போராடி சுமார் 600 வட கொரிய வீரர்கள் இறந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும் தென் கொரியா அண்மையில் மதிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.    

    • புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு, மக்களின் ஒவ்வொரு இயக்கமும் கண்காணிக்கப்படுகிறது.
    • குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

    சர்வாதிகாரத்திற்கு பெயர் போன வட கொரியாவில் அன்றாட வாழக்கை மிகவும் கடுமையான விதிமுறைகளில் ஆனது. மக்கள் எப்படி முடி வெட்ட வேண்டும் என்பது முதல் தொலைக்காட்சியில் எதை பார்க்க வேண்டும் என்பது வரை அரசு தான் தீர்மானிக்கிறது.

    இதன் உச்சமாக தென் கோரியா உள்ளிட்ட வெளிநாட்டு தொலைக்காட்சி தொடர்களை பார்த்தாலோ அல்லது பகிர்ந்தாலோ மரண தண்டனை விதிக்கும் அளவுக்கு அங்கு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என ஐநா மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

    நேற்று ஜெனீவாவில் ஐநா மனித உரிமை கவுன்சிலில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இதுகுறித்து 14 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

    2014 முதல் தற்போது வரையிலான காலகட்டத்தில் வட கொரியாவிலிருந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தப்பிச் சென்ற 300க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகள் நேர்காணல் செய்யப்பட்டு சேகரிக்கப்பட்ட விவரங்கள் மூலம் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

    புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் அரசு, மக்களின் ஒவ்வொரு இயக்கத்தையும் கண்காணிப்பதை தீவிரப்படுத்தியுள்ளதாவும், தண்டனைகள் மிகவும் கடுமையானதாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கை கூறுகிறது.

    அறிக்கைப்படி, 2015க்குப் பிறகு நடைமுறைக்கு வந்த புதிய சட்டங்கள் மற்றும் கொள்கைகள் குடிமக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அரசாங்க கட்டுப்பாட்டை அதிகரித்துள்ளது.

    வட கொரியாவுக்கான மனித உரிமைகள் ஆணையர் ஜேம்ஸ் ஹீனன் கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், "கோவிட்-19 காலத்துக்கு பிறகு சாதாரண மற்றும் அரசியல் குற்றங்களுக்கான மரணதண்டனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது

    தென் கொரியாவின் கே-டிராமாக்கள் உட்பட வெளிநாட்டு தொலைக்காட்சித் தொடர்களை விநியோகிப்பதற்கான புதிய சட்டங்களின் கீழ், குறிப்பிடப்படாத எண்ணிக்கையிலான மக்கள் ஏற்கனவே தூக்கிலிடப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

    இருப்பினும், வட கொரிய அரசாங்கம் இந்த அறிக்கையை நிராகரித்தது. அறிக்கையை அங்கீகரித்த ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை எதிர்ப்பதாக அந்த நாடு தெரிவித்துள்ளது. 

    • அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.
    • டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி.

    விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்ததாக வட கொரியா அறிவித்துள்ளது. அமெரிக்கா மற்று்ம தென் கொரியா இணைந்து மேற்கொள்ளும் ராணுவ பயிற்சிகளை தொடர்ந்து வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

    ஏவுகணை சோதனையை வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் நேரில் மேற்பார்வையிட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. புதிய ஏவுகணை சோதனை அந்நாட்டு பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.

    அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து மேற்கொண்ட ராணுவ பயிற்சி முகாமின் இறுதநாளில் வட கொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. அமெரிக்கா மற்றும் தென் கொரியா இணைந்து 11 நாட்கள் வரை கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டன. இது அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி என்பது குறிப்பிடத்தக்கது.

    கூட்டு ராணுவ பயிற்சி குறித்து பேசிய வட கொரிய செய்தி தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்.

    • கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது.
    • குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது,

    பியாங்யாங்:

    சர்வாதிகார சட்டங்கள் அமலில் உள்ள வடகொரியாவில் மக்கள் சிரிப்பதற்கும் மது அருந்துவதற்கும் தடை விதித்து அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டுள்ளார். அவரது தந்தையும் வடகொரியாவின் முன்னாள் அதிபருமான கிம் ஜாங் இல் நினைவு தினத்தை முன்னிட்டு இந்த தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

    கிம் ஜாங் இல்-ன் 11வது நினைவு தினம் கடந்த 17ம் தேதி கடைப்பிடிக்கப்பட்டது. நினைவுதினத்தை முன்னிட்டு, 11 நாட்களுக்கு அந்நாட்டில் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாட்களில் மக்கள் யாரும் சிரிக்கக் கூடாது, மது அருந்தக் கூடாது, கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கக் கூடாது என்று கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, இந்த 11 நாள்களில், குடும்பத்தில் யாரேனும் இறந்துவிட்டால் கூட, அவரது உறவினர்கள் சப்தம் போட்டு அழக் கூடாது, மெதுவாகவே அழவேண்டும்.

    இந்த தடையை மீறுவோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஒரு வேளை, இந்த 11 நாள்களுக்குள் யாரேனும் பிறந்திருந்தால் அவர்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தங்களது பிறந்தநாளைக் கூட கொண்டாட முடியாது என்று அந்நாட்டு ஊடகங்கள் மேற்கோள்காட்டியுள்ளன.

    • கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார்.
    • பெயர் மாற்றம் தொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாக கூறப்படுகிறது

    உலகிலேயே அதிக கட்டுப்பாடுகள் நிறைந்த நாடு வடகொரியா. சிறிய குற்றங்களுக்கு கூட மரண தண்டனை விதிக்கப்படுகிறது. அங்கு நடக்கும் பல விஷயங்கள் வெளி உலகிற்கு தெரிவதில்லை. செய்திகள் கூட அரசின் தணிக்கைக்கு பிறகே வெளியிடப்படும். அங்குள்ள மக்கள் பெரும்பாலும் உலக தொழில்நுட்பத்தை அறியாத மக்களாக உள்ளனர்.

    இந்தநிலையில், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளின் பெயரை (ஜூ ஏ) வேறு யாருக்கும் வைக்கக்கூடாது என வினோத தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

    கடந்த நவம்பர் மாதம் கிம் முதல் முறையாக தனது மகளை பொது வெளியில் அறிமுகப்படுத்தினார். கிம் மகளின் பெயரை வைத்திருக்கும் பெண்கள், ஒரு வாரத்தில் பெயரை மாற்றவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாகவும், இதுதொடர்பாக அந்தந்த பகுதி அரசு நிர்வாகங்கள் உரிய உத்தரவுகளை பிறப்பித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக உள்ளூர் தகவல்களை மேற்கோள் காட்டி ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த தகவல் வட கொரிய மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. பெயரை மாற்ற வேண்டிய சூழலில் லட்சக்கணக்கான வடகொரியர்கள் உள்ளனர்.

    வடகொரிய தலைவர் கிம்மின் மூன்று குழந்தைகளில் இந்த மகளை மட்டுமே அவர் பொதுவெளியில் காட்டியிருக்கிறார். கிம் 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்தார் என்றும், அவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்றும் தென் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை.
    • வட கொரியாவில் 70,000 கிறிஸ்தவர்கள் உள்பட பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    வட கொரியாவில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும் வடகொரிய அரசு நாத்திக அரசாக உள்ளது. மத உரிமைகள், மதச் சடங்குகள் செய்யும் உரிமைகள் உள்ளன. ஆனால், வட கொரிய அரசு எந்த மதத்தையும் ஊக்குவிப்பதில்லை. அதேசமயம், மத தண்டனைகள் உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன.

    இந்நிலையில், பைபிள் வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்ட பெற்றோருடன் அவர்களின் 2 வயது குழந்தைக்கும் வடகொரியா அரசு ஆயுள் தண்டனை விதித்திருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.

    சர்வதேச மத சுதந்திரம் தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், கூறியிருப்பதாவது:-

    வட கொரியாவில் பிற மதங்களைச் சேர்ந்தவர்களுடன் 70,000 கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் இரண்டு வயது ஆண் குழந்தையும் இருந்தது. அவனது பெற்றோரிடம் பைபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

    மதப் பழக்கவழக்கங்கள் மற்றும் பைபிளை வைத்திருந்ததற்காக அந்தக் குடும்பம் கைது செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை உட்பட ஒட்டுமொத்த குடும்பமும் 2009-ல் ஆயுள் தண்டனை பெற்று அரசியல் சிறை முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் சிறை வைக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவர்கள் தாங்கள் மோசமான நிலையில் உள்ளதாகவும், பல்வேறு வகையான உடல் ரீதியான துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் விவரித்துள்ளனர். ஷாமனிச ஆதரவாளர்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக 90 சதவீத ஆவணப்படுத்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம்தான் பொறுப்பு.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவுக்கும் வட கொரியாவுக்கும் ராஜதந்திர உறவு எதுவும் இல்லை. வட கொரியாவில் நீண்ட காலமாக மனித உரிமை மீறல்கள் நடப்பதாகவும், அதற்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கடந்த டிசம்பர் மாதம் ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு மற்ற நாடுகளுடன் அமெரிக்காவும் ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.

    • இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்ட ராக்கெட் நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடலில் விழுந்தது.
    • சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை தகவல் விடுக்கப்பட்டது.

    நாட்டின் முதல் உளவு செயற்கைக்கோள் ஏவும் முயற்சி தோல்வியடைந்ததாக வடகொரியா அறிவித்து இருக்கிறது. இது குறித்த தகவல்கள் கொரியாவின் மத்திய செய்தி நிறுவனம் வெளியிட்டு இருந்தது.

    அதில், உளவு செயற்கைக்கோளை சுமந்து கொண்டு விண்ணில் செலுத்தப்பட்ட ராக்கெட், முதல் மற்றும் இரண்டாம் கட்ட நிலைகளில் பிரச்சினைகளை எதிர்கொண்டு நடுவானில் வெடித்து கொரியாவின் மேற்கு கடல் பகுதியில் விழுந்தது.

    வடகொரியா தனது முதல் உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதால், ஜப்பான் மற்றும் தென் கொரிய நாடுகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.

    வடகொரிய நாட்டின் வடமேற்கு பகுதியான டாங்சாங்-ரி-யில் இருந்து ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. ராக்கெட் ஏவப்படுவதை அடுத்து தென் கொரிய தலைநகர் சியோலில், பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டியிருக்கும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனினும், எதிர்பார்த்த சேதம் ஏற்படாததால், எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

    முன்னதாக வடகொரியாவின் உளவு செயற்கைக்கோள் ஏவப்படும் தகவலுக்கு பதிலடி கொடுத்த ஜப்பான், தனது எல்லைக்குள் ராக்கெட் வந்தால் அதனை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்து இருந்தது.

    நீண்ட தூர ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த வடகொரியாவுக்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை விதித்து இருக்கிறது. இந்த தடையை மீறியே வடகொரியா தனது உளவு செயற்கைக்கோளை விண்ணில் ஏவ முயற்சி செய்து இருக்கிறது.

    ×