அணு ஆயுதத்திற்கான புதிய ஆலையை திறந்த வட கொரியா.. அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வடகொரியாவின் அணுசக்திப் பொருட்கள் உற்பத்தித் திறன் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது.
அணு ஆயுதத்திற்கான புதிய ஆலையை திறந்த வட கொரியா.. அதிபர் கிம் ஜாங் உன் நேரில் ஆய்வு
Published on

சர்வதேச தடைகளை தாண்டி, வடகொரியா தனது அணு ஆயுத உற்பத்தியை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அணு ஆயுதத்திற்கான எரிபொருள் மற்றும் பிற பொருட்களை உற்பத்தி செய்வதற்கான புதிய ஆலையை அந்நாட்டு அரசு திறந்துள்ளது.

அதிபர் கிம் ஜோங் உன் நேரில் இந்த ஆலையை சென்று ஆய்வு நடத்தியுள்ளார்.

வடகொரியாவின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான KCNA வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று முன் தினம் அதிபர் கிம் ஜோங் உன் இந்த புதிய ஆலையை பார்வையிட்டார்.

இதன்போது, கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் வடகொரியாவின் அணுசக்திப் பொருட்கள் உற்பத்தித் திறன் இருமடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த புதிய ஆலை நாட்டின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளது என்ற விவரங்களை வடகொரியா வெளியிடவில்லை.

மத்திய கிழக்கில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே போர் நீடித்து வரும் சூழலில் வடகொரியாவின் இந்த நடவடிக்கை கவனம் பெற்றுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com