சீனா - வடகொரியா இடையே அமைக்கப்பட்ட புதிய பாலம் வழியாக அதிபர் கிம் ஜாங் உன் சீனா பயணம்

புதிய யாலு ஆற்றுப் பாலம் இந்த மாத தொடக்கத்தில் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.
ஜி ஜின்பிங், கிம் ஜாங் உன்
Published on: 
Summary

வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு வடகொரியா - சீனா இடையே புதிதாக அமைக்கப்பட்ட பாலம் மார்க்கமாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

வட கோரியா - சீனா ஆகிய இரு நாடுகளையும் இணைக்கும் புதிதாகத் திறக்கப்பட்ட புதிய யாலு ஆற்றுப் பாலம் வழியாக கிம் ஜாங் உன் சீனாவுக்கு பயணம் செய்தார்.

தென் கொரிய அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி இந்த தகவலை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மறுபுறம் சீனப் பிரதமர் லி கெகியாங்கும், எல்லை நகரமான டான்டாங்கில் கிம் ஜாங் உன்னை வரவேற்றார் என தென் கொரிய செய்தி நிறுவனமான யோன்ஹாப் தெரிவித்துள்ளது.

கிம் பயணம்

1950-1953 கொரியப் போரில் சீனாவின் பங்களிப்பின் ஆண்டு நிறைவுக்கு ஒரு நாள் முன்னதாக கிம்மின் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

இந்தப் புதிய பயணம், சீனாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான வலுவான பொருளாதார உறவுகளின் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

இருப்பினும், இதுகுறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு சீன வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்கவில்லை.

புதிய பாலம்

பல வருட தாமதங்கள் மற்றும் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, மூன்று கிலோமீட்டர் நீளமுள்ள புதிய யாலு ஆற்றுப் பாலம் இந்த மாத தொடக்கத்தில் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது.

இந்தப் பாலம் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத் தடைகளை அகற்றவும், மூலப்பொருட்கள் மற்றும் எரிசக்திப் பொருட்களின் பரிமாற்றத்தை எளிதாக்கவும் உதவும் என கருதப்படுகிறது.

சீனா - வட கொரியா

2025 செப்டம்பரில் பெய்ஜிங்கில் நடைபெறும் வெற்றி நாள் கொண்டாட்டங்களில் கலந்துகொண்ட பிறகு, கிம் ஜாங் உன் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.

தற்போது சீனாவில் உள்ள கிம் ஜாங் உன் வரும் நாட்களில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் உச்சிமாநாட்டில் கலந்துகொள்வார் எனவும் தூதரக மட்டத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

வட கொரியா ரஷியாவுடன் நெருங்கிய உறவை பேணி வரும் அதே வேளையில், சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்தவும் முயற்சியில் கிம் ஜாங் உன் இறங்கியுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com