Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள்...

விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா

* தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

* விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும்.

திருப்பதியில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு- நேர ஒதுக்கீடு தரிசன டிக்கெட் விநியோகம் ரத்து

* தரிசன டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டது தெரியாமல் ஏராளமான பக்தர்கள் டிக்கெட் வழங்கும் மையங்களில் நேற்று இரவு முதல் விடிய, விடிய காத்திருந்தனர்.

* நாளை மறுநாள் தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் நாளை வழக்கம்போல் வழங்கப்படும்.

தொடரும் தென் மாவட்ட கனிமக் கொள்ளையை தடுக்க வேண்டும் - சிபிஐ விசாரணை தேவை!- அன்புமணி வலியுறுத்தல்

எந்த அளவுக்கு கனிமக் கொள்ளை நடந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்து அதை கனிமக் கொள்ளையர்களிடம் இருந்து வசூலிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

'ஈரான் போரில் 18 பேர் மட்டுமே பலி': முந்தைய போர்களுடன் ஒப்பிட்டு டிரம்ப் பதிவு!...

டிரம்பின் இந்தப் பதிவுக்கு எதிர்க்கட்சியினரும் மனித உரிமை அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

அமெரிக்காவில் தீவிரமடையும் காட்டுத் தீ: பிளசண்டன் பகுதியில் 950 ஏக்கர் சாம்பல்; மக்கள் வெளியேற்ற உத்தரவு!...

சுமார் 4,900-க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வு: புதிய தொழிற்கூடம் மற்றும் நீர் மேலாண்மை அமைப்புகள் கண்டுபிடிப்பு!...

நடப்பு அகழாய்வுப் பருவத்தின் முதல் நான்கு மாதங்களிலேயே 1,300-க்கும் மேற்பட்ட அபூர்வத் தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச கிரிக்கெட் ஓய்வுக்குப் பின் புதிய அத்தியாயம்: டர்ஹாம் அணிக்காக அபார சதமடித்து பென் ஸ்டோக்ஸ் சாதனை!...

ஆட்டத்தின் இடையே தசைப்பிடிப்பு ஏற்பட்ட போதிலும், கடைசி வரை களத்தில் நின்றார்.

டெல்லியில் ராகுல் காந்தி கைது-நீட் தேர்வுப் பிரச்சனை: ஒன்றிய அரசுக்கு எதிராக தவெக கடும் கண்டனம்!...

"நீட் தேர்வால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிப்பிற்குள்ளாவது நின்றபாடில்லை."

அமெரிக்காவில் ஜெனரிக் மருந்துகளுக்கு 2 ஆண்டுகள் வரிவிலக்கு: டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு!...

"அமெரிக்காவிற்குள்ளேயே ஜெனரிக் மருந்துகளின் உற்பத்தியை மீண்டும் கொண்டுவருவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் சிறையில் மரணமடைந்த சபரிவர்மன் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

* கைது செய்யப்பட்ட சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

* சிறை கைதிகள் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

* சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.

* தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்

* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! - அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

* தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது.

* மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.

போராடுவோரை கைது செய்வது நீட் விஷயத்தில் ஆளுங்கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை காட்டுகிறது - உதயநிதி

* ‘நீட்’ தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி

* மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்.

X

Maalai Malar
www.maalaimalar.com