நீட் தேர்வை ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தர தீர்வை அளிக்கும் - மு.க.ஸ்டாலின்

நீட் ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது திமுக.
MK Stalin
Published on

நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

'நீட்' தேர்வில் நடைபெற்ற குளறுபடிகளை கண்டித்தும், மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தியும் டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று முன்தினம் நடத்திய போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த சம்பவத்தை கண்டித்தும், 'நீட்' தேர்வுக்கு எதிராகவும் சென்னை தியாகராயநகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பாலன் இல்ல வளாகத்தில் அமர்ந்து கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் தொடர் முழக்க போராட்டத்தை முன்னெடுத்து உள்ளனர்.

இதற்கிடையே டெல்லியில் 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்ற மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து, சென்னை எழும்பூர் எல்.ஜி.கார்டன் சாலையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்றிரவு பேரணி நடத்தினார்கள். பேரணி முடிவில் அவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

* புதுடெல்லியில் நடைபெறும் மாணவர்களின் போராட்டம் இப்போது நாடு முழுவதையும் ஈர்த்துள்ளது.

* நீட் பெரிய அளவிலான முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

* திமுக ஆரம்பத்திலிருந்தே நீட் தேர்வை எதிர்த்து வருகிறது.

* நீட் ஏற்படுத்தும் ஆபத்துகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது திமுக.

* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வதே இந்த போராட்டங்களின் மையப் பொருளாக அமைய வேண்டும்.

* நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது மட்டுமே அனைத்திற்கும் நிரந்தரத் தீர்வை அளிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com