GOLD PRICE TODAY: ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை! - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.
Gold
Published on

சர்வதேச பொருளாதார சூழல், போர் பதற்றம் காரணமாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தின் விலை கடந்த ஓரிரு நாட்களாக ஏற்றமும், இறக்கமுமாக உள்ளது.

சென்னையில் தங்கத்தின் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 150-க்கும், சவரன் ரூ. 1 லட்சத்து 5 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. நேற்று கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 220-க்கும், சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 760-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை அதிரடி உயர்வு

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,680 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை நிலவரம்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

21-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,760

20-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,200

19-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080

18-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,080

17-07-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

21-07-2026- ஒரு கிராம் ரூ.240

20-07-2026- ஒரு கிராம் ரூ.235

19-07-2026- ஒரு கிராம் ரூ.235

18-07-2026- ஒரு கிராம் ரூ.235

17-07-2026- ஒரு கிராம் ரூ.235

X

Maalai Malar
www.maalaimalar.com