விஜய் சொன்னதை செய்தால் தான் மக்கள் ‘ஹீரோ’வாக பார்ப்பார்கள்- பிரேமலதா

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார்.
பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார்.
Published on

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.

காணிக்கை

திருத்தணி முருகன் கோவிலில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். அவர் வெள்ளிவேலை காணிக்கையாக செலுத்தினார்.

முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் கையில் வெள்ளி வேலுடன் மலைக்கோவிலை வலம் வந்து வழிபட்டார். தொடர்ந்து அவர் தங்கத்தேர் இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

தப்ப முடியாது

தேர்தலில் வெற்றி பெற்றால் திருத்தணி கோவிலில் வேல் காணிக்கை செலுத்துவதாக வேண்டி இருந்தேன். அதனை நிறைவேற்ற வந்துள்ளேன். தமிழக அரசு கோவில்களில் பக்தர்களுக்கு பாதுகாப்பு, குடி தண்ணீர், உணவு, போக்குவரத்து வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்த வேண்டும். பழனி முருகன் கோவில் நில மோசடி வழக்கில் யார் தவறு செய்தாலும் தண்டனை பெறுவார்கள். முருகரிடம் இருந்து தப்ப முடியாது.

ஆர்ப்பாட்டம்

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தி.மு.க. எம்.எல்.ஏ. வை இரவோடு இரவாக கைது செய்யாமல் எச்சரித்து அனுப்பி இருக்கலாம். இது அரசின் வன்மத்தை காட்டுகிறது. வருகின்ற பட்ஜெட் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் இருக்க வேண்டும்.

நீட் தேர்வு விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு உள்ளது. முதலமைச்சர் விஜய் மின் கட்டண உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் ஆகஸ்ட் 1-ந் தேதி ஒகேனக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

விவசாயிகளை காக்க தமிழக அரசு விவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யவேண்டும். விவசாயிகளை காக்க விஜய் சினிமாவில் சொன்னதை ரியல் லைப்பில் நிரூபித்தால் தான் ரியல் ஹீரோவாக மக்கள் பார்ப்பார்கள். இல்லையென்றால் வெறும் கண்துடைப்பாய் போய்விடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com