

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பொங்கல் பரிசுவழங்குவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் பொய் குற்றச்சாட்டு கூறுகிறார். கொரோனா சூழலில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படுகிறது. நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று கடுகளவும் ஸ்டாலினுக்கு எண்ணமில்லை.
நாட்டு மக்களுக்கு நல்லது செய்ய வரவில்லை; தன் குடும்பத்திற்காக அரசியல் செய்கிறார் ஸ்டாலின். நான் முதல்வரானதில் இருந்து ஊழல் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார்.
பொய்யான தகவலை வெளியிட்டு மலிவான விளம்பரத்தை தி.மு.க தேடுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.